Advertisement

36 பிரேத பரிசோதனை செய்த போலி டாக்டர்

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில், அரசு மருத்துவமனைகளில் 36 பிரேத பரிசோதனை செய்த போலி டாக்டர் சிக்கியுள்ளார்.


கர்நாடக மாநிலம், பாகல்கோடு மாவட்டம், முத்ஹோல் என்ற பகுதியை சேர்ந்தவர் விகாஸ். இவர் கடந்த இரண்டரை ஆண்டுகளாக கடாக் மற்றும் சித்ரதுர்கா மாவட்டங்களில் உள்ள மூன்று அரசு மருத்துவமனைகளில், 36 பிரேத பரிசோதனை செய்துள்ளார். விகாஸ், பி.எஸ்சி., நர்சிங் படித்தவர். ஆனால், டாக்டர் விகாஸ் பாட்டீல் என்பவரின் சான்றிதழில் தனது போட்டோவை ஒட்டி, தான் ஒரு டாக்டர் என கூறி அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி உள்ளார்.

சமீபத்தில் தான் அவரை பற்றிய உண்மை தெரிய வந்தது. மாநில சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையினர் அளித்த புகாரின் பேரில் போலீசார், விகாசை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரிடம் விகாஸ் கூறுகையில்,' என்னால் மற்ற டாக்டர்களை போல மக்களுக்கு சிகிச்சை அளிக்க முடியும். ஆனால், நான் பி.எஸ்சி., நர்சிங் படித்து இருந்ததால் தாழ்வு மனப்பான்மை தோன்றியது. எனவே தான் டாக்டர் என கூறி தொடங்கினேன்' என்றார்.


Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (24)

 • Balasubramaniam - Tirupur,இந்தியா

  மோடியின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை, போலி டாக்டர் போஸ்ட்மார்டம் இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. இரண்டும் பிரயோஜனம் இல்லை. ஆனால் படம் மட்டுமே

 • Muruga Vel - Chennai,இந்தியா

  டாக்டர்கள் கடவுள் கிடையாது .இன்ஜினியரிங்கில் இருப்பது போல டிப்ளமா டாக்டர் .. மேஸ்திரி டாக்டர் என்று திறமைக்கு தகுந்தாற்போல இருக்கணும் ..தலைவலிக்கும் காய்ச்சலுக்கும் MBBS தேவை கிடையாது … இதன் மூலம் நிறைய வேலை வாய்ப்பும் கிடைக்கும் ..கிராமத்தில் பணி செய்ய விரும்பாத MD MS MBBS மருத்துவர்களுக்கு மாற்றாக டிப்ளமா டாக்டர்களும் மேஸ்திரி டாக்டர்களும் கிராமத்தில் பணிபுரிவார்கள் .அமெரிக்காவிலேயே பிரசவம் பார்க்க ..குழந்தை பராமரிப்புக்கு பெரும்பாலும் நர்ஸ்கள் பணியாற்றுகிரார்கள்

 • Raghuraman Narayanan - Machester,யுனைடெட் கிங்டம்

  Have doctors of Government Hospitals outsourced this task to Vikas ?

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  எந்த மருத்துவமனைகளிலும் மருத்துவர் பிணத்தை அறுப்பது இல்லை.. பிணவறை தொழிலாளி தான் அறுப்பான்.. ஒவ்வொரு உறுப்பாக எடுத்து மருத்துவரிடம் கொடுக்க மருத்துவர் எடை பார்த்து அதன் தன்மையை எழுதி கொள்வார்.. அந்த பிணவறை தொழிலாளி மருத்துவருக்கு படித்து இருக்கிறார் சொல்லுங்களேன்...ஒரு வேளை அந்த தொழிலாளியே போலிமருத்துவராக கூட வந்து இருக்கலாம்

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  மருத்துவருக்கு படித்து மருத்துவம் செய்திருக்கலாமே

 • venkatan - Puducherry,இந்தியா

  உண்மையான டாக்ட் ட ரை பிணவரையில் வேலை செய்ய அரசுகள் சரியாக வூக்குவிப்பதில்லை. அதனால்தான் இந்த மாதிரி அவலங்கள்.

 • Cheran Perumal - Radhapuram,இந்தியா

  இதுவே உ பி அல்லது ம பி யில் நடந்திருந்தால் நமது போராளீஸ் களம் இறங்கி ஒரு பிடி பிடித்திருப்பார்கள். ஆங்கில மீடியாவும் தன் பங்குக்கு மோடியின் பெயரை இழுத்திருக்கும்.

 • Adhvikaa Adhvikaa - chennai,இந்தியா

  அலோபதி மருத்துவம் என்பது குணப்படுத்தும் மருத்துவம் அல்ல. வலி வேதனை ஆகியவற்றிலிருந்து தற்காலிக நிவாரணம் அளிக்கும் ஒரு குறுக்கு வழி. அலோபதியில் பக்க விளைவு உண்டு. இருந்தும் மனிதர்கள் வேறு வழி இல்லாமல் அலோபதியில் மருத்துவ சிகிச்சை பெறுகிறார்கள் என்பதே உண்மை. இருந்தாலும் இப்படி ஒரு பி எஸ் சி நர்சிங் படித்த மனிதர் பல ஆண்டுகள் பிண அறுவை சிகிச்சை செய்துள்ளார் என்பது ஆச்சரியம் ஒன்றும் இல்லை. கர்நாடகாவே ஒரு போலியான மாநிலம் தானே. முப்பது எம் எல் ஏ உள்ள கட்சி தலைவரை முதல்வர் நாற்காலியில் உட்காரவைத்து 75 எம் எல் ஏ உள்ள கட்சிக்காரன் அவனுக்கு பல்லக்கு தூக்குகிறான் என்றால் அதனைவிட மானம் கேட்ட மாநிலம் வேறு என்ன இருக்க முடியும் ? மைனாரிட்டி முதல்வர் , போலி டாக்டர் அவ்வளவுதான் .

 • ஆப்பு -

  சரி...யாரையும் சாகடிக்க வில்லையே...செத்தவங்களை தானே பரிசோதனை செஞ்சாரு....

 • ஸாயிப்ரியா -

  பிணம் பேசாது அந்த தைரியம் தான்.மயக்க நிலையில் உள்ளவருக்கு இறந்த தாக நினைத்து பிரேத பரிசோதனை செய்தாரா என்று விசாரிக்க வேண்டும். போலிகளை திடீர் சோதனைகள் அடிக்கடி ரகசியமாக மேற் கொண்டு களை எடுக்க வேண்டும்.

 • நக்கல் -

  மாநில அரசாங்கங்கள் இதை பற்றி கவலைப்படப் போவதில்லை.. எல்லா துறைகளிலும் இந்த மாதிரி போலிகள் பலர் இருப்பார்கள்.. இவயெல்லாம் காங்ரெஸ் நாட்டுக்கு தந்த கொடைகள்... இவர்களையெல்லாம் களய மோடி போன்ற நல்ல தலைமையில் நடக்கும் அரசுக்கே பல ஆண்டுகள் தேவைப்படும்.. மோடி களை எடுப்பதால்தான் மோசடி கட்சிகளும் தேச விரோதிகளும் மோடி ஆட்சியை எதிர்க்கிறார்கள்.. அடுத்த தலைமுறை நன்றாக இருக்க அனைவரும் சிந்திக்கவும், தங்கள் குழந்தைகள் எதிர்காலத்தை பற்றி யோசிக்கவும்.. மோடி மாதிரி ஒரு நல்ல நேர்மையான தலைவர் நமக்கு கிடைக்க மாட்டார்.. நீங்கள் தேச விரோதி இல்லயென்றால் நன்றாக யோசியுங்கள்...

 • S.Ganesan - Hosur,இந்தியா

  பிரேத பரிசோதனை செய்யப்பட்ட 36 பேரும் இவரிடம் மருத்துவ சிகிச்சை பெற்றவர்களா ?

 • Abdul Rahman - Madurai,இந்தியா

  சில ஆண்டுகளுக்கு முன்னாள் சிங்கப்பூரிலும் போலி டாக்டர்கள் பிடிபட்டதுதான் நினைவுக்கு வருகிறது.

 • Kasiniventhan Muthuramalingam - Bangalore,இந்தியா

  எங்கள் பாட்டி ஒரு பழமொழி சொல்வார் "ஆசை இருக்கு தாசில் (மற்றவர்களை ஏவல் செய்வது ) ..... பண்ண ஆனால் அதிருஷ்டம் இருக்கு மாடு மேய்க்க என்று...... அந்த போலி டாக்டர் கில்லாடி தாம்

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  இவ்வளவு பிராக்டிகல் பிண பரிசோதனை செய்த பின்பு அவருக்கு Ph.D.(பிண அறுப்பு) கொடுத்து விடலாம்.

 • Gnanasekaran Vedachalam - chennai,இந்தியா

  பணம் ஒன்றெய் பிரதானம் என்று ஏமாற்று பேர்வழி இல்லாத இடமே இல்லை என்று ஆகி விட்டது பல உண்மையான விழியங்கள் சொல்ல முடியவில்லை ஏற்று கொள்ள கூடிய மனப்பக்குவம் இல்லை

 • kalyanasundaram - ottawa,கனடா

  that is one of the main reason for all politicians go abroad for medical treatment. this so called medical doctor must have been a close relative of some politician or influential person. nothing will happen. case booked against will shortly closed as no evidence available. public made fools.

 • swami - chennai,இந்தியா

  நல்லவேளை டெட் பாடிக்குதான் பரிசோதனை செய்திருக்கிறார். உயிருடன் இருப்பவர்களை டெட் பாடி ஆக்கவில்லை

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement