Advertisement

மல்லையாவை நாடு கடத்தும் வழக்கு; டிச., 10ம் தேதி தீர்ப்பு

லண்டன்: ரூ.9 ஆயிரம் கோடி கடன் மோசடியில், விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்தும் வழக்கில் டிசம்பர் 10ம் தேதி, லண்டன் கோர்ட் தீர்ப்பு வழங்க உள்ளது.

தொழிலதிபர் விஜய்மல்லையா, 13 பொதுத்துறை வங்கிகளில் ரூ. 9,000 கோடி கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் வெளிநாடு தப்பிச் சென்று, தற்போது லண்டனில் தஞ்சம் புகுந்துள்ளார். மல்லையா மீதான நிதி மோசடி வழக்குகளை சிபிஐ விசாரித்து வருகிறது. லண்டனில் உள்ள அவரை இந்தியா கொண்டுவர , லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் கோர்ட்டில் இந்தியா சார்பில் வழக்கு நடந்து வருகிறது.

இந்த வழக்கில் விஜய் மல்லையா இன்று ஆஜரானார். அப்போது மும்பை ஆர்தர் ரோடு சிறையில் விஜய் மல்லையாவை அடைப்பது தொடர்பாக வீடியோவை நீதிபதி ஆய்வு செய்தார். வீடியோவில் சிறை வசதிகள் தனக்கு திருப்தி அளிப்பதாக நீதிபதி கூறியதாக தெரிகிறது.

வசதிகள்:மல்லையாவுக்காக ஒதுக்கப்பட்ட சிறை அறையில், 6 டியூப் லைட்டுகள், 3 மின்விசிறிகள், அட்டாச்டு பாத்ரூம், எல்.இ.டி., டிவி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

நம்பிக்கைஆஜராக வந்த மல்லையா, நிருபர்களிடம் கூறுகையில், கடனை திருப்பி செலுத்த தயாராக உள்ளேன். இதற்கான திட்டத்தை முன்வைத்துள்ளேன். இதனை நீதிமன்றம் ஆலோசிக்கும் என நம்புகிறேன். நாடு கடத்துவது குறித்து முன்கூட்டியே ஏதுவும் கூற விரும்பவில்லை என்றார்.

மேலும் அவர், வங்கிக்கடன் பிரச்னையை தீர்ப்பதற்காக அருண் ஜெட்லியை லண்டன் வருவதற்கு முன்பு சந்தித்தேன். கடனை திருப்பி கொடுப்பது தொடர்பான கடிதத்திற்கு வங்கிகள் எதிர்ப்பு தெரிவித்தன என்றார்.

10ல் தீர்ப்பு:இந்நிலையில் இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, தீர்ப்பு தேதியை அறிவித்தார். இதன்படி, டிசம்பர் 10ம் தேதி இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (24)

 • Susainathan -

  mini restaurant for him in jail hahaha better to release him save the tax for public money ya

 • ஆதி -

  தயவுசெய்து இவரை விடுதலை செய்துவிடுங்கள்

 • SB.RAVICHANDRAN -

  December 2025ல

 • ஆப்பு -

  அவிங்களும் நம்ம ஊர் நீதிமன்றங்கள் மாதிரியே வாய்தா குடுத்து வழக்கை ஒத்தி வைத்து விடுகிறார்கள். அவிங்க சட்டத்தை நாம காப்பி அடித்தோம். அவிங்க நம்ம சட்ட நடைமுறையை காப்பி அடிக்கிறாங்களோ?

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  எதாவது காங்கிரஸ் தலைவரை சந்தித்தாக சொல்லியிருந்தால் இவரை தலையில் தூக்கிவைத்து ஆடியிருப்பார்கள். ஆனால் இவர், ஓபிஎஸ் ராணுவ ஹெலிகாப்டர் வாடகைக்கு எடுத்ததை போட்டு உடைத்த மாதிரி, இப்படி போட்டு உடைத்து விட்டார். வெட்கக்கேடு.

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  மால்யாவைவிட பன்மடங்கு கிரானைட்  மணல் தாதுமணலில்  கொள்ளையடித்த திராவிஷர்களைப் பற்றி Dumeels வாயே திறக்கமாட்டார்கள்.

 • mohan - chennai,இந்தியா

  எல்லா ஸ்டாரையும் வச்சு எல்லோருக்கும் ஒரு பார்ட்டி கொடுத்தால் போவுது...

 • Amaidhi maargam - Vivekananda nagar,ஆப்கானிஸ்தான்

  Innaikku Congress sombu vandhu Gummi adikkumbadi azhaikiren..

 • Amaidhi maargam - Vivekananda nagar,ஆப்கானிஸ்தான்

  Mooku dabba vandhu present sir potrunga

 • Amaidhi maargam - Vivekananda nagar,ஆப்கானிஸ்தான்

  Mookanaankayiru vandhudum

 • ARUN.POINT.BLANK -

  edhukku theerpa othi podanum?? adhuvum december varaikkum?? judgement delayed is judgement denied illaiya... court ..politics ellaam eyewash... emaathu velai..

 • Saravanan - Pazhani ,இந்தியா

  அண்ணாமலை அவர்களே மல்லையா அருண் ஜெட்லீ சந்திப்பு பற்றி ?// KhanCross சொல்ல சொல்லிச்சா ? எப்படியும் வருவாரு அப்போ ரகுராம் ராஜன் சொன்ன மாதிரி உண்மை சொல்லுவாரு .

 • Natarajan Ramasamy - London,யுனைடெட் கிங்டம்

  அருண் ஜெட்ல்லியை பார்த்தேன். பார்த்து நீ பேசிய எல்லாவற்றையும் பொய் இல்லாமல் சொல்வாயா மல்லய்யாவே? எல்லா கடனையும் தரதயாராக இருந்தால் பேங்க் களிடம் தான் பேசவேண்டும். அருண் ஜேட்லி இடம் பேச என்ன இருக்கு? பேரம் பேசி இருக்கலாமோ? மல்லய்யா லண்டனுக்கு ஓடிப்போனதினால் ஜேட்லி மீது எந்த குறையும் இல்லை என்பது தெளிவு. முன்பு ஆண்டவர்களை கவனித்து இருக்கலாம். அது இப்போது உதவுமா?

 • Raghuraman Narayanan - Machester,யுனைடெட் கிங்டம்

  கையையும் களவுமாக மாட்டிய பிறகு ஏதாவது சொல்லி கொஞ்சம் வெளியே இருக்க முடியாதான்னு எண்ணுகிறார் போலும்

 • J.Isaac - bangalore,இந்தியா

  அண்ணாமலை அவர்களே மல்லையா அருண் ஜெட்லீ சந்திப்பு பற்றி ?

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  "ஜெட்லியை சந்தித்தேன்: மல்லையா" - சொம்புங்கெல்லாம் ஒன்னொன்னா வந்து இங்கெ attendance கொடுக்கவும்...

 • M.P.Murugaiah - chennai,இந்தியா

  அவனிடம் இருந்து வட்டியும் முதலும் வசூல் செய்து விட்டு . பின்பு அவன் நாட்டை விட்டு துரத்தணும் . சிறையில் இட்டு வீண் பண்ம் செலவு .

 • கோகுல்,மதுரை -

  மொத இந்த தங்கத்த 5 ஸ்டார்ல ரூம் குடுத்தாவது கூப்பிட்டு வாங்கய்யா? வச்சு செய்யலாம்.

 • s.maria alphonse pandian - CHENNAI-88,இந்தியா

  ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் காலத்தில் 9000 கோடி கடன் வாங்கிவிட்டு ஓட்டமெடுத்த இவரை இந்தியா கொண்டு வந்து திகார் சிறையிலடைத்து பணத்தை வட்டியும் முதலுமாக முதலில் வசூலிக்க வேண்டும்...பிறகு இவருக்கு கடனளித்த வங்கி அதிகாரிகளை கைது செய்து...எந்த சூரிட்டியின் மீது அவருக்கு அவ்வளவு கடனளித்தார்கள்....யார் யார் கடனளிக்க நிர்பந்தித்தார்கள் போன்ற விஷயங்களை விசாரணைக்குள்ளாக்க வேண்டும்...எதிர்காலத்தில் மீண்டும் இதுபோல கடனளிக்காமலிருக்க அது உதவும்..

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  லண்டனில் மழை பெய்ததா...

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  இந்தியா கோர்ட்டில் விரைவில் ஆஜராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 • Venkataraman Sekkar - Trivandrum,இந்தியா

  கடனை திருப்பி தராதது மாத்திரம் அல்ல மல்லையா பேரில் உள்ள புகார். இங்கே பாங்கில் வாங்கிய கடனை உபயோகம் செய்து இங்கிலாந்து மற்றும் மொரிசியஸ் நாடுகளில் சொத்து வாங்கியது, பணச்சலவை போன்ற குற்றங்களுக்காகவும் இவர் இந்தியா வரவேண்டியது அவஸ்யமாகிறது.

 • S.prakash - Palakkarai,இந்தியா

  இந்தியாவில் விஜய் மல்லையாவிற்கு ஆளுநர் பதவி நிச்சயம் கொடுக்க வேண்டும். நாடுமாறி ....

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  எதுவானாலும் இங்கே வரவும் , இங்கே பேசிக்கொள்ளலாம்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement