Advertisement

தேர்தலுக்காக காசு: விநாயகருக்கு மவுசு

ஐதராபாத்: தெலுங்கானாவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. விநாயகர் சதுர்த்தியை ஒட்டி ஐதராபாத் நகரில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலை பந்தல்களுக்கு அரசியல்வாதிகள் ஓடோடி சென்று பணம் கொடுத்து வருகின்றனர்.

16,000 பெரிய பந்தல்கள்ஐதராபாத் நகரில், ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு 16,00 பெரிய பந்தல்களிலும், 30,000 சிறிய பந்தல்களிலும் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. ஒரு விநாயகர் சிலை அமைத்து, போலீஸ் அனுமதி, தற்காலிக மின் இணைப்பு பெற்று, விநாயகர் சிலை கரைப்பு நாள் வரை தினமும் பூஜை செய்ய, ஒரு பந்தலுக்கு குறைந்தபட்சம் 2 லட்சம் ரூபாய் செலவாகும்.

விநாயகர் சிலை வைக்கும் இளைஞர்கள் தங்கள் பகுதியில் இருக்கும் கடைகள், வணிக நிறுவனங்கள் வீடுகளில் பணம் வசூலித்து தான் இந்த செலவை மேற்கொள்வார்கள். தற்போது சட்டசபை தேர்தல் வருவதால், விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ள பந்தல்களுக்கு அனைத்து கட்சிகளில் இருந்தும் அரசியல்வாதிகள் ஓடோடி வருகின்றனர்.

அத்துடன் கடந்த ஆண்டு விநாயகர் சிலை வைக்க எவ்வளவு செலவானது என கேட்டு, தற்போது அந்த தொகையை தரவும் முன் வருகின்றனர். இந்த முயற்சியில், இடதுசாரி கட்சியினரும் ஈடுபட்டுள்ளனர்.

தேடி வரும் அரசியல்வாதிகள்லாலாபேட் கணேஷ் உத்சவ் சமிதி என்ற அமைப்பை சேர்ந்த பிரவீன் என்பவர் கூறுகையில், ' ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சிலை வைக்க, இளைஞர்கள் நன்கொடை கேட்டு வீதி தோறும் அலைவார்கள். தற்போது ஆட்சி கலைப்பு அறிவிப்பு வந்த நாள் முதல், அனைத்து கட்சிகளில் இருந்தும் எங்களை அணுகி, விநாயகர் சிலை வைக்க எவ்வளவு செலவாகும் என கேட்கின்றனர். அந்த தொகையை தர பலரும் முன் வருகின்றனர்' என்றார்.


Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (13)

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  விநாயகருக்கே லஞ்சமா...

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  விநாயகர் அருளால் தமிழ் நாட்டில் ஆன்மீக ஆட்சி மலரும்.

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  தவறு செய்பவர்களுக்கு விநாயகர் அருள் புரிய மாட்டார் , விநாயகரை முறையாக வழிபட்டால் நம் வினை தீரும்.

 • tamil - coonoor,இந்தியா

  நீலகிரி மட்டும் கோவையில் விநாயகர் ஊர்வலங்களுக்கு., பெரிய பெரிய அரசியல் கட்சிகளை போல் பல கோடிக்கணக்கான ரூபாய் பணம் தண்ணீராக செலவிடப்படுகிறது, இவர்களுக்கு எங்கிருந்து இவ்வளவு பணம் வருகிறது என்று புரியவில்லை, இதை தவிர ஊர்வலங்களில் கலந்துகொள்பவர்களுக்கு சகல வசதிகளும் கிடைக்கிறது, இது ஒரு இறைபக்தியாக தெரியவில்லை

 • vnatarajan - chennai,இந்தியா

  தற்போது பணம் கொடுப்பவர்கள் எல்லாம் பேராசை பிடித்த அரசியல் கட்சி தலைவர்கள். தேர்தலில் இவர்களுக்கு விநாயகர் நல்ல பாடம் கற்பிப்பார்.

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  பார்றா....., நாந்தெனோமும் கும்புட்ற புள்ளயார வெச்சி எப்டில்லாம் பணத்தெ உருவுறானுங்க...

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  மேற்கு வங்கத்தில் ஆளும் மைமூனா பேகம் மற்றும் நாத்திக கம்யூனிஸ்ட் இதுபோல பணத்தைக்கொட்டி நவராத்ரி துர்க்கா பூஜை நடத்துகின்றனர். வோட்டே தெய்வம்.

 • ஆப்பு -

  உண்மையான பக்தன் சொந்தக் காசில் பூஜை செய்வான். இங்கே இது ஒரு பொழப்பாப் போச்சு. இருக்குற கடைகளில் மிரட்டி வசூல் செஞ்சு பாதிப் பணத்தை ஜாலியா செலவு செஞ்சு, மீதிக்காசில் புள்ளையார் சிலையை வாங்கி மூணுநாளில் அவரை தண்ணீல மூழ்கடிச்சு.....இவிங்களுக்கு வினாயகரைப் பத்தியோ, விநாயகர் தத்துவம் பத்தியோ ஒண்ணும் தெரியாது... என்னமா பக்திய வளக்குறாங்கோ...

 • sickularist sickular - sikim,பூடான்

  தமிழ் நாட்டில் விநாயகர் சிலை உடைப்பு மற்றும் எதிர்ப்பு கட்சிகளுக்கு தேர்தல் சமயத்தில் நல்ல படம் கற்பிக்க வேண்டும்

 • Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்

  எல்லாம் அவன் செயலே

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement