Advertisement

பட்டு சேலை வாங்க பெண்கள் 'கியூ'

மைசூரு: கர்நாடக மாநிலத்தில், தள்ளுபடி விலையில் மைசூரு பட்டு சேலை வாங்க, ஏராளமான பெண்கள் வரிசையில் நின்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கவுரி விழாவை ஒட்டி விற்பனைகர்நாடகாவில் முதல்வர் குமாரசாமி தலைமையில் மதசார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. சுற்றுலா துறை அமைச்சராக பொறுப்பேற்ற ஷா ரா மகேஷ், வரமகாலட்சுமி விழா நாளில் இருந்து தள்ளுபடி விலையில் பட்டு புடவைகள் விற்கப்படும் என அறிவித்தார்.

அன்றைய தினம் கடைகளுக்கு சென்ற பெண்களுக்கு விலை குறைந்த புடவைகள் கிடைக்கவில்லை. உள்ளாட்சி தேர்தல் காரணமாக அது ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து கவுரி விழாவின் போது, 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சேலை 4,500 ரூபாய்க்கு கிடைக்கும் வகையில் புதிய திட்டம் துவக்கப்படும் என முதல்வர் குமாரசாமி அறிவித்தார்.

கர்நாடகாவில் கவுரி விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனால், மைசூருவில் நாசர்பாத் என்ற இடத்தில் உள்ள கர்நாடக பட்டு ஆலை கழகத்தின் மைசூரு பட்டு கடை முன் நேற்று காலை( செப்., 11) 6 மணி முதல் முதல் பெண்கள் குவிய தொடங்கி விட்டனர். இதனால் அங்கு பரபரப்பு காணப்பட்டது. மதியம் முதல்வர் திட்டத்தை துவக்கி வைத்த பிறகே புடவை விற்பனை துவங்கும் என கடை ஊழியர்கள் கூறினர். மேலும், 1,800 புடவைகளே கைவசம் உள்ளன. எனவே குலுக்கல் முறையில் விற்பனை செய்யலாம் எனவும் யோசனை தெரிவித்தனர்.

எனினும், இதை பெண்கள் ஏற்கவில்லை. யார் முதலில் வந்தார்களோ அவர்களுக்கு புடவை வழங்க கோரினர். இறுதியில், பதிவு செய்யப்பட்டதன் அடிப்படையில் பெண்களுக்கு புடவை விற்பனை செய்யப்பட்டது.எனினும், வண்ணம் மற்றும் டிசைனை தேர்வு செய்து புடவையை வாங்க முடியவில்லை என பெண்கள் குறைப்பட்டு கொண்டனர்.


Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (16)

 • nabikal naayakam - கேவலமான தூத்துக்குடி,இந்தியா

  கேவலமான பெண்கள்.....சைவ உணவு பழக்கம் கொண்டவர்கள்கூட இப்படி உயிர்க்கொலை செய்து உருவாகும் புடவை வாங்குவது அநியாயம்.

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  புடவை மோகம் என்றும் பெண்களுக்கு குறைவதே இல்லை

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  நீண்ட நாட்கள் கழித்து தினமலர் நல்ல செய்தியை வெளியிட்டிருக்கிறது. கர்நாடகாவை தொடர்ந்து தமிழ் நாட்டிலும் இது போன்று செய்யலாமே. இவர்கள் அம்மா பட்டுப்புடவை திட்டம் கொண்டு வந்திருக்கலாம். ஒன்லைன் இல் விற்றிருந்தால் என்போன்றோருக்கு சிறப்பாக இருந்திருக்கும். பெங்களூரு இத்தனைக்கும் இந்தியாவின் டிஜிட்டல் சிட்டியாம். ஒரு பத்து புடவை வாங்கி இருக்கலாம்.

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  இப்படி எதற்கெடுத்தாலும் கியூவில் நிற்கும் மக்கள் தான் ஒருமுறை நாட்டுக்காக ATM முன் நின்றதற்கு கேள்வி கேட்டார்கள்.

 • R Sanjay - Chennai,இந்தியா

  பட்டு என்ற பூச்சியை உயிருடன் அதன் கூட்டோடு பிடித்து கொதிக்கும் தண்ணீரில் அந்த பட்டுப்புழுவை உயிருடன் போட்டு துடிதுடிக்க கொன்று அந்த பட்டு நூலில் செய்யும் பட்டு புடவை பெண்களுக்கு எதற்கு? பட்டு நூல் தயாரிக்கும் முறையை நாட்டில் உள்ள அனைத்து பெண்களும் நேரில் சென்று பார்க்கவேண்டும் பிறகு பட்டுபுடவையையே இந்த ஜென்மத்தில் நினைத்துக்கூட பார்க்க மாட்டார்கள். உடுத்துவதற்கு வேறு நல்ல புடவைகளே இல்லையா? ஏன் இந்த பட்டில் மேல் இவ்வளவு மோகம்.? முப்பதாயிரம் நாப்பதாயிரம் அம்பதாயிரம் லட்சம் என்று பட்டு புடவைகளை வாங்கி பீரோவில் தூங்கவைப்பதற்கு பதில் அந்த பணத்தை LIC/தங்கம்/MUTUAL FUND/மாருதி போன்ற நல்ல SHARE MARKET SHARES/COMPANY BOND என்று போட்டுவைத்தால் உங்களின் பணம் அடுத்த ஐந்துவருடத்திற்கு பிறகு உங்களுக்கு ஒரு நல்லதொரு RETURNSசை கொடுக்கும். உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறேன். இன்று ஒரு ஒருலட்ச ரூபாய்க்கு பட்டுப்புடவை வாங்க பணம் வைத்திருக்கிறீர்கள் என்றால் அவர்கள் அந்த ஒரு லட்ச ருபாய் பட்டு புடவைக்கு பதில் ஒரு ஐயாயிரம் ரூபாயில் வேறு ஒரு நல்ல புடவையைவாங்கி விட்டு மீதம் உள்ள 95000 ஆயிரம் ரூபாயை மாருதி(8520)/TCS(2046)/இன்போசிஸ்(740)/RELIANCE இண்டஸ்ட்ரீஸ்(1250)/COAL INDIA(280)/ITC(300)/BRITANIA(6000)/HDFC BANK(2000)/HUL(1631) போன்ற நிறுவனங்களின் SHAREகளில் முதலீடு செய்துவிட்டு ஒரு ஐந்து வருடம் உங்கள் பணத்தை மறந்துவிடுங்கள் நீங்கள் செய்த அந்த முதலீடு அடுத்த ஐந்துவருடங்கள் கழித்து பன்மடங்கு உயர்ந்து இருக்கும்.

 • வேலங்குடியான் - Karaikudi,இந்தியா

  போதும் என்ற மனமே பொண் செய்யும் மருந்து..... இது ரொம்ப பேருக்கு தெரிவதில்லை....

 • a.thirumalai -

  இதுல மட்டும் ஆணும் பெண்ணும் சமம் கிடையாது .

 • Rpalnivelu - Bangalorw,இந்தியா

  சில்க் என்றாலே மைசூர் சில்க்தான். மிக மென்மையானது, மேனியை உறுத்தாது. காஞ்சிபுரம் பட்டை விட மைசூர் பட்டுக்கு மவுசு அதிகம். எனென்றால் pure jari மைசூர் பட்டுவில் அதிகம். தொடக்க விலையே ஷோ ரூம்களில் 25000க்கும் மேல். (மக்கள் முதல்வர் விலையுர்ந்த மைசூர் பட்டு சேலைதான் விரும்பி அணிவார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்).

 • SudhanPauldurai -

  அடி பவிங்க்ல நாட்டுல எவ்ளோ பிரச்சினை இருக்கு இதுல புடவை வாங்க இப்படியா.... பாவம் ஆண்கள்.

 • சீனி - Bangalore,இந்தியா

  தமிழ்நாட்டுல இப்படி விற்பனை அறிவிச்சிருந்தா, ஒரே அடிதடி, களேபரம் ஆயிருக்கும்... சும்மா தாமாசுக்கு தான் சொன்னேன்.

 • பாமரன் - நம்மூர்தான்,இந்தியா

  இந்த மாதிரி வாழ்க்கைக்கு அத்தியாவசிய தேவைக்கு கியூவில் நின்று வாங்கும் அளவு பொறுமையுள்ள மக்கள்தான்.... நாட்டுக்கு தேவையற்ற ஆதார், வோட்டர் ஐடி, அப்புறம் ஓட்டுபோடுறதுக்கெல்லாம் நிற்க வேண்டுமான்னு கேள்வி கேட்பவர்கள்.... நாடு கூடிய சீக்கிரமே வல்லரசாகிடும்டோய்....

 • SB.RAVICHANDRAN -

  ஏதோ கட்டுவதற்கு புடவையே இல்லாத மாதிரி நிக்கிறாங்க

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement