Advertisement

ரூ.55க்கு பெட்ரோல்: கட்கரி தரும் யோசனை

ராய்பூர்: உயிரி எரிபொருள் (பயோ பியூவல்) பயன்பாட்டை அதிகரித்தால், டீசல் லிட்டர் 50 ரூபாய்க்கும், பெட்ரோல் லிட்டர் 55 ரூபாய்க்கும் கிடைக்கும் சூழ்நிலை உருவாகும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி யோசனை தெரிவித்துள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலம், ராய்பூரில் நடந்த விழாவில் அவர் பேசியதாவது:


எதனால், மெதனால், உயிரி எரிபொருள் மற்றும் சி.என்.ஜி.,க்கு மாறினால், பெட்ரோலிய பொருட்கள் பயன்பாடு குறைந்து, பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறையும். நாம் ஆண்டுக்கு 8 லட்சம் கோடி ரூபாய் மதிப்புக்கு பெட்ரோலிய பொருட்களை இறக்குமதி செய்கிறோம்.

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. விவசாயிகள், பழங்குடி மக்கள், வனவாசிகள் எதனால், மெதனால், உயிரி எரிபொருளை உற்பத்தி செய்தால், குறுகிய காலத்தில் செல்வந்தராகி விடலாம் என்பதை, 15 ஆண்டுகளாக நான் கூறி வருகிறேன். எதனால், பயோ டீசல், சி.என்.ஜி., மெதனால், உயிரி எரிபொருளால் இயக்கப்படும் ஆட்டோக்கள், பஸ்கள், டாக்சிகளுக்கு பர்மிட்டில் விலக்கு அளிக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம்.

நமது பெட்ரோலிய அமைச்சகம், ஐந்து எதனால் தொழிற்சாலைகளை உருவாக்கி வருகிறது. நெல் மற்றும் கோதுமையின் வைக்கோல் மற்றும் கரும்பு சக்கை, நகராட்சி பகுதிகளில் கிடைக்கும் கழிவுகளில் இருந்து எதனால் தயாரிக்கப்படும். இந்த முயற்சிக்கு பிறகு டீசல் லிட்டருக்கு 50 ரூபாய்க்கும், பெட்ரோல் லிட்டர் 55 ரூபாய்க்கும் கிடைக்கும்.


இவ்வாறு அவர் கூறினார்.


Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (71)

 • Jaya Ram - madurai,இந்தியா

  அப்போ வெகுவிரைவில் அம்பானி, அல்லது அதானி ஏஜெண்சி மூலம் எத்தனால் அமெரிக்காவில் இறக்குமதியாகப் போகிறது அதற்குத்தான் மக்களை பெட்ரோல் விலை உயர்ந்துவிட்டது அதனால் அதனுடன் எத்தனால் கலந்து விற்பனைக்கு அனுமதித்து விலையினை குறைக்க முடிவு செய்துள்ளீர்கள் என்பதனை தெளிவாக கூறிவிட்டிர்கள், அது பற்றிய அறிவிப்பு அநேகமாக ஜனவரி வாக்கில் வெளியாகலாம் ஓஹ் அதுக்குத்தான் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை மந்திரி வந்து போனாரோ, இதனால்தான் ட்ரும்ப் இந்தியா எங்களுடன் வர்த்தகம் செய்ய விரும்புகிறது என்று கூறினாரோ. தேங்கிக்கிடக்கும் எத்தனாலை அனுப்புவதற்கு வழி ஏற்பட்டுள்ளது. ஆக மொத்தம் எதத்னாலுக்கும் மக்கள் பெட்ரோல்விலை கொடுக்க போகிறார்கள்

 • Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா

  பெட்ரோலியம் விலை உயர்வால் மாற்று எரிபொருள் உற்பத்தி செய்யவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது... ஆனால் அது நடைமுறைப்படுத்த கால அவகாசம் தேவைப்படும்... ஆனாலும் அதை தேவை அடிப்படையில் செய்யவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்...

 • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

  Reuters news: U.S. ethanol makers call on Mexico, India to reduce biofuel glut .. ராய்ட்டர் செய்தி நிறுவன தகவல் - 9 மாதங்களுக்கு முன்பு: அமெரிக்காவில் மிதமிஞ்சிய எத்தனால் உற்பத்தி காரணமாக அதை மெக்சிகோ, இந்தியாவுக்கு தள்ள ஏற்பாடு.. கூடவே மோசடி அரசாங்கம் இதுக்கு வரிசலுகைன்னு சொல்லி, இதை அம்பானி மட்டும் தான் இறக்குமதி செய்யணும்னு சட்டத்தை வளைத்து.. என்றைக்கும் போல கார்ப்பரேட் குந்தாணிகள் வரிப்பணத்தை கொள்ளை அடித்து போக வழி செய்வார்கள்.

 • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

  இவரு தான் சிறுநீருக்கு லிட்டருக்கு ஒரு ரூபா கொடுத்து உரம் தயாரிச்ச விஞ்ஞானி.. இப்போ அமெரிக்காவில் எத்தனால் எக்கச்சக்கமா உற்பத்தி ஆகி வாங்குறதுக்கு ஆளில்லை என்பதால் இங்கே அம்பானிகள் இறக்குமதி பண்ண, அவங்களுக்கு இந்தாளு வரிசலுகைன்னு சொல்லி லட்சக்கணக்கான கோடிகள் கொட்டி கொடுத்து இவனுங்க கமிஷன் அடிக்க மேடை போட்டு மைக்கில் பேசுறானுங்க.

 • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

  இரண்டு விஷயம் இதில் தெளிவாகிறது. (1) பெட்ரோல் விலையை இவங்க குறைக்க போறதில்லைன்னு சொல்றது .. (2) அம்பானிகள் எத்தனால் இறக்குமதி பண்ணி வரி சலுகையாக 50,000 கோடி ஆட்டையை போட போகிறார்கள் என்பது அடுத்தது. இப்படி தங்களுக்காக சட்டத்தை வளைத்து வரிஏய்ப்பு, விஸ்கோஸ் இறக்குமதியில் ஆரம்பித்தது.. இன்றும் தொடர்கிறது..

 • S.ELAYA PERUMAL - TIRUNELVELI,இந்தியா

  புதுடில்லி: டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. கூட்டத்தில், மின்மயமாக்கப்படாமல் உள்ள எஞ்சிய ரயில் பாதைகளை மின்மயமாக்கவும், வேதியியல் மற்றும் உரத்துறைக்கு சொந்தமாக மும்பையில் உள்ள நிலத்தை மும்பை மெட்ரோ போலிட்டன் பிராந்திய வளர்ச்சி அமைப்பு மற்றும் மும்பை பெருமாநகராட்சிக்கு மாற்றவும் எத்தனால் விலையை லிட்டருக்கு ரூ.47.49லிருந்து ரூ.52.43 ஆக அதிகரிக்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  எப்பா, சொம்புங்களா..., அறுவது வருசமா நல்லா ஆண்டு foundation ந சும்மா strong ங்கா வெச்சிருக்கறதாலதான் இந்தெ நாலர(4 1/2) வருச கூத்தெ India வால தாங்க முடியுது...

 • s t rajan - chennai,இந்தியா

  எல்லா பெட்ரோல் பங்க் களிலும் இப்பிடி போர்டு வைக்க சொன்னால் மக்கள் புரிந்து கொள்வார்கள்.... மூல பொருள்:34.00 மத்தியஅரசு வரி:13.00 மாநில அரசு வரி:30.00 டீலர் கமிஷன்: 6.00 மொத்தம் ருபாய் _______ (ஒரு லிட்டர்):83.00

 • venkat - chennai,இந்தியா

  பிஜேபி NDA -1 ஆட்சி முடிவில் 2004 ல் விட்ட லிட்டர் டெல்லி பெட்ரோல் விலை ரூ 33 .71 ஐ காங்கிரஸ் UPA -1 ஆட்சி தொடர்ந்து உயர்த்தி 2014 ல் ரூ 71 41 ஆக்கியது. அதாவது காங்கிரஸ் வருடம் ரூ 4 அளவு பெட்ரோல் விலையை ஏற்றியது. இன்றைய டெல்லி பெட்ரோல் விலை ரூ 80 .96 அதாவது காங்கிரஸ் வருடத்திற்கு ஏற்றிய ரூ 4 க்கு பதில் பிஜேபி வருடத்திற்கு ரூ 2 ஏற்றியுள்ளது. 60 வருட காங்கிரஸ் பெட்ரோல் இறக்குமதி அடிமை கொள்கைக்கு பதிலாக மோடி அரசு 10 வருடங்களில் எல்லா ஊர்திகளும் மின்சக்தி, CNG எதனால் மெத்தனால். எரிபொருள் செல் இவற்றில் பெட்ரோலை விட 5 பங்கு குறைந்த செலவில் ஓட பல புதிய சலுகை விடுதலை திட்டங்களை அறிமுகப்படுத்தி ஊக்குவிக்கிறது. . இது ஒரு கிட்டத்தட்ட கணக்கு. இன்றைய பெட்ரோல் டீசல் விலைக்கு யார் வேண்டும் என்றாலும் சரியான கணக்கைத் தெரிவிக்கலாம். யாரும் எளிதில் புரிந்து கொள்ளலாம். உதாரண பெட்ரோல் விலை ரூ 76 என்றால் கச்சா இறக்குமதி, பண்படுத்தல், போக்குவரத்து, டீலர் கமிஷன் (ரூ 3 .50 ) உட்பட அடக்கம் ரூ 38 + மத்திய கலால் ரூ 19.50 தமிழக வாட் ரூ 18.50 பங்க் விலை ரூ 76 . ஆனால் கலால் வரியில் 42 சதவிகிதம் மத்திய தொகுப்பில் இருந்து மாநில அரசுக்கு செல்வதால் உண்மையான மத்திய மாநில வரிகளுடன் மேற்படி அடக்கம் ரூ 38 மத்திய வரிப் பங்கு ரூ 11.50 தமிழக வரிப் பங்கு ரூ 26.50 பங்க் விலை ரூ 76 பெட்ரோல் டீசல் வரிகளால் மத்திய அரசுக்கு கிடைப்பது போல இருமடங்குக்கு மேல் தமிழகம் பெறுகிறது. மத்திய அரசு கலால் வரியை குறைத்தால் மாநில அரசுகள் வாட் வரியைக் குறைக்காது பின்னும் மத்திய அரசை மீண்டும் குறை சொல்லும். இன்று மத்திய மோடி அரசை எதற்கெடுத்தாலும் தினம் உள்நோக்கத்துடன் குறை கூறும் காங்கிரஸ் கழக கம்யூனிஸ்ட் திரிணாமுல் AAP அரசுக்கு தாங்கள் அதிகம் பங்கு போட்டுக்கொள்ளும் வாட் வரியை குறைக்கத் தயாராக இல்லை. இந்த பிரச்சினைக்கு ஒரே தீர்வாக GST ல் பெட்ரோல் டீசலைக் கொணர இந்த எதிரிக கட்சிகள் இவர்கள் பங்கு பெற்ற GST கவுன்சிலில் சம்மதம் தரவில்லை. அதிக வரி வசூலும் பெற்றுக் கொண்டு மக்களை ஏமாற்றி மத்திய மோடி அரசை குறை கூறி காலம் கழிப்பர். அடுத்த நிரந்தர தீர்வாக செயல் வீரர் பிரதமர் மோடி அவர்கள் 5 பங்கு குறைந்த செலவில் எல்லோரும் எங்கும் எப்போதும் பயணிக்க எல்லா பெட்ரோல் டீசல் ஊர்திகளையும் 2030 க்குள் மின் ஊர்திகளாக மாற்ற பல திட்டங்களையும் சலுகைகளையும் அளித்ததன் காரணமாக, தற்போது எல்லா மின் ஊர்தி தயாரிப்பாளர்களும் மின் ஊர்தி தயாரிப்பில் இறங்கி உள்ளார்கள். டாடா, மஹிந்திரா, சுசுகி, ஹூண்டாய் போன்ற பல நிறுவனங்கள் 2020 க்குள் பல மின்னூர்திகளை அரிமுகப்படுத்துகின்றன.தற்போதே இந்தியாவில் 4 லட்சத்துக்கு மேல் இரு சக்கர வாகனங்கள், 3 லட்சத்திற்கு மேல் இ ஆட்டோக்க்கள் ஓடுகின்றன. தமிழகத்தில் பல இ ஆட்டோ உற்பத்தியாளர் இருந்தும் குறைந்த கட்டணத்தில் பயணம் செய்ய ஒரு இ ஆட்டோவும் கண்ணில் படவில்லை. தமிழக அரசு முயற்சி என்ன தெரியவில்லை. 2 சக்கர மின் ஊர்திகள் ரூ 10000 ல் இருந்து கிடைக்கிறது. வீட்டில் சார்ஜ் செய்து கொள்ளலாம். பெட்ரோலை விட 5 மடங்கு சிக்கனப் பயணம். தவிர மோடி அரசு உள்நாட்டு மெத்தனால் பெட்ரோலில் 15 சட்டம் வரை கலந்து விலை குறைக்கவும் பெட்ரோல் இறக்குமதி குறைக்கவும் முயற்சிகள் எடுத்துள்ளது. 60 வருட காங்கிரஸ் ஆட்சியால் இறக்குமதி பெட்ரோல் டீசலில் மாட்டிக்கொண்டு விழிக்கும் மக்களுக்கு இன்னும் 10 ஆண்டுகளுக்குள் மோடி பி ஜெ பி nda அரசு இந்த பெரும் பிரச்சினையில் இருந்து பூரண சுதந்திரம் அளிக்கும். நீண்ட கால அந்நிய பெட்ரோல் பிரச்சினைக்கு ஒரே தீர்வான பிரதமர் மோடியின் மின் ஊர்திக்கு நீங்களும், ஊக்குவிப்புக்கு மக்கள் நலன் கருதி மாநில அரசுகளும் மாறுவது பிரச்சினைக்கு உங்கள் எளிய தீர்வு.

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  எத்தனால் அல்லது மெத்தனால் உபயோகித்து ஓடக்கூடிய என்ஜின்கள் நேற்று வரை உலகில் கண்டுபிடிக்கப்படவில்லை. 85% எத்தனால் + 15% பெட்ரோல் மிக்ஸில் கார் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. மைலேஜ் 30% குறைந்து விட்டது. எத்தனால் ஒரு லிட்டர் ரூ.52. இதெல்லாம் கூகுளில் நான் பார்த்து (1990 களின்) ஆட்டோமொபைல் என்ஜினீயர்களுடன் டிஸ்கஸ் பண்ணி அறிந்து கொண்டேன். மற்றவை வாசகர்கள் சிந்திக்க

 • Bhaskaran - Chennai,இந்தியா

  எங்க ஊர் ராமர் பிள்ளை ஐந்து ரூபாய் செலவில் தறேன்கிறாரே muthalileye அவரைக் கூப்பிட்டு கேளுங்களேன்யா எண்ணெய்க் கம்பெனி உங்களுக்கு கமிஷன் தரத்தை நிப்பாட்டிடும் என்னும் ஒரேபயத்தினால் தான் அப்படி செய்யமாட்டீண்றீங்க

 • Sk Muthu Ghavi - சென்னை,இந்தியா

  விவசாயிக்கு 1ரூபாய்க்கு வெங்காயம் , தக்காளி, வாங்கி லாரி வாடகை ,டோல் வழிப்பறி, ஏத்து, இறக்கு கூலி கொடுத்து 10 ரூபாய்க்கு தெருவுல கூவி,கூவி விக்கறாங்க இன்னும் எத்தனால் தயார் செய்யலாம்னு தெரியாத வேலையல்லாம் செய்யவைத்து குடியகெடுத்து பத்து , பதினைந்து கார்பரேட் கம்பனிக்கு மேலும் பணக்காரன் ஆக்கிறதுக்கு அலையுறாங்க

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  நாலர வருசங்கழிச்சி இப்பந்தான் "ரோசன" பண்ணவே ஆரமிச்சிருக்கானுங்க இவுனுங்க... வெளெங்கிடும்..., போ...

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  இந்த முயற்சிக்கு பிறகு டீசல் லிட்டருக்கு 50 ரூபாய்க்கும், பெட்ரோல் லிட்டர் 55 ரூபாய்க்கும் கிடைக்கும். இதை அப்பவே செயது இருக்க வேண்டியதுதானே... இப்பதான் ஞானயோதயம் வந்ததா

 • NaanPeriyavan - Pudukottai,இந்தியா

  இங்க சிலரை தவிர மற்றவர்கள் எல்லாம் நாங்கள் திருட்டு திராவிட இயக்க கூட்டம் என்பதை அப்படியே நிரூபிக்கிறார்கள். தலை நிமிர்ந்து உலகை ஆண்ட தமிழினம் இப்போது அறிவு மழுங்கிய சில நரிகளால் அழிவை நோக்கி

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  அப்பு..., நீயும் ஒங்கும்பலும் ஆணியே புடுங்கவேண்டாம்.... அதெ April 2019 துல சனங்க பாத்துக்குவாங்க...

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  பல கழிசடைகள் அழுவதற்கு காரணம் மாற்று எரிபொருள் அதிகமானால் அரேபியாவுக்கு கெடுதல் என்பதால்தான்

 • Divahar - tirunelveli,இந்தியா

  இது எல்லாம் எப்பொழுது நடக்கும். ஜோசியம் சொல்வது போல் சொன்னால் எப்படி?

 • Jani Syed Ibrahim - Madurai,இந்தியா

  ஐந்து தொழிற்சாலை அமைக்க எத்தனை ஆண்டுகள் ஆகும் அமைச்சரே

 • சுப்பையா, கருப்பட்டி வியாபாரம். - முடிவைத்தானேந்தல் ,இந்தியா

  நான் பல மலைக்கிராமங்களில் சுற்றியிருக்கிறேன் - ஒரு இருபது வீடுகள் தான் இருக்கும் அது ஒரு கிராமம் - இது போன்ற ஆயிரக்கணக்கான கிராமங்கள் இந்தியாவில் இருக்கின்றன - காந்தி கூறியபடி இந்தியாவின் இதயங்களான இந்தக் கிராமங்களுக்கு சாலைகள் அமைக்க வேண்டும் என்று திட்டம் கொண்டு வந்தவர் யார் தெரியுமா? - நாற்கரச் சாலை நாயகன் அடல் பிகாரி வாஜ்பேயி - 2000 மாவது ஆண்டில்- பிரதம மந்திரி கிராமப்புற சாலை மேம்பாட்டுத் திட்டம் (PMGSY)_ அதற்கு முன்பெல்லாம் குதிரைகள் கழுதைகள் மூலம் விவசாயிகள் தங்கள் பொருட்களை சந்தைகளுக்குக் கொண்டு செல்வார்கள் - உண்மையில் ஒரு ஐநூறு பேர்களுக்காக கோடிக்கணக்கில் செலவு செய்து சாலைகள் போட வேண்டுமா அந்தப் பணத்தை அவர்களுக்கு கையில் கொடுத்து விட்டால் ஓட்டுப் போடுவார்களே என்று கருணா போன்ற ஆட்கள் சிந்திப்பார்கள் - ஆனால், ஒவ்வொரு கிராமத்திற்கும் சாலை வசதி, மின் வசதி, ஒவ்வொரு வீட்டிற்கும் கழிப்பிட வசதி என்பதே நமது பாரதப் பிரதமரின் இலக்கு- இந்தக் கிராமப்புறச் சாலைத் திட்டங்களுக்கு மட்டும் 2017-18 - ஆம் நிதி ஆண்டில் 1,09,042.45 கோடி ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளது - இது 2013-14-ம் நிதி ஆண்டை விட மும்மடங்கு அதிகம் - விவசாய சந்தைகளுக்கு சாலைகள் எவ்வளவு அவசியம் என்று ஒரு விவசாயிக்குத் தான் தெரியும் - அது மட்டுமல்ல மின்சாரத்தையே கண்களில் பார்க்காத 19,000 கிராமங்களுக்கு மின்சாரம் கொடுத்து ஒளி பரவச் செய்துள்ளார் மோடி - மேலும், ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வீட்டிற்கும் கழிப்பறை கட்ட 12,000 வழங்கப்படுகிறது - ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு கட்ட 2,30,000 வழங்கப்படுகிறது - ஆனால், நமது பொருளாதார மேதைகள் பெட்ரோல் வரி 11 லட்சம் கோடி வசூல் ஆகியிருக்கிறதே அது எங்கே என்று கேள்வி கேட்கிறான்கள் - என்னவோ இந்தத் திராவிடத் திருடன்களைப் போல அவர் தனது சொந்த அக்கவுண்டில் போட்டுக் கொண்டதைப் போல - இந்தியா முழுவதும் வரிகட்டுவோரே வெறும் 3 கோடி பேர்தான் - அதிலும் மோடியின் நடவடிக்களால் புதிதாக இணைந்த ஒன்றரைக் கோடி பேரைச் சேர்த்து - இவன்கள் கேள்வி கேட்கிறான்கள் - இதில் அந்த மனிதர் தமிழக நெடுஞ்சாலைகளுக்கு மட்டும் 75,000 கோடிகள் ஒதுக்கியுள்ளார் - அங்கும் வந்து சாலை போடவிடாமல் கொடிப் பிடிக்கிறான்கள் - தயவு செய்து இதைப் படிக்கும் என் பாரத தேச மக்களே - பிரதமரைப் புரிந்து கொள்ளுங்கள் -

 • தமிழர்நீதி - சென்னை ,இந்தியா

  தலையை சுற்றி மூக்கை தொடாமல் , 43 ரூ பெட்ரோலுக்கு 45 ரூ வரி அதிகம் கொடுக்கும் முறையை மாத்துங்க ப்ளீஸ் .

 • ஜெயந்தன் - Chennai,இந்தியா

  போய் வேலைய பாருங்கப்பா... பிஜேபி காரனுங்க நம்மை எல்லாம் காமெடி பீசுன்னு நினைச்சி தினம் ஏதாவது புளுகி கொண்டே இருக்கிறர்கள் .. தேர்தல் அன்று தெரியும் யார் காமெடி பீஸ் என்று...

 • tamil - coonoor,இந்தியா

  இதை இவர் சொல்லவேண்டிய இடத்தில் சொல்ல முயற்சிக்க வேண்டும், பாவம் அவருடைய நிலைமை எப்படியோ தெரியாது, அவராலும் பிரதமரை சந்திக்க இயலவில்லை போலும்

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  ஆளத்தெரியாதுன்னு நாலர வருசமா prove பண்ணிட்டிருக்கானுங்க...

 • R Sanjay - Chennai,இந்தியா

  2014 இருந்து மத்திய அமைச்சர்கள் மற்றும் பிரதமர் எல்லோரும் உயிரி எரிபொருளுக்கு என்ன நடவடிக்கை எடுத்தீர்கள். வெறும் காங்கிரெஸ்ஸை குறைகூறிவிட்டு விஞ்சான முறையில் நாட்டில் ஊழல் செய்தீர்கள். பெட்ரோலிய பொருட்கள் இறக்குமதியை குறைத்துக்கொண்டு உயிரி எரிபொருக்கான தேடல்களை 2014 இல் தொண்டங்கவில்லை இதை நான்கு வருடத்திற்கு முன் பிருந்தே கூறிவருகிறேன். கடைசியில் ஆட்சி பரலோகம் செல்லும் காலத்தில் மின் சிக்கனம் சீக்கிரம் என்று பிஜேபி அரசு பிதற்றுகிறது. அரசாங்கத்துக்கு வருமானத்தை வேறு விதத்தில் மக்கள் மனம் நோகாதவண்ணமே சம்பாதிக்க தெரிந்திருக்கவேண்டுமே ஒழியே மக்கள் நெஞ்சில் வேளை பாச்சி வரி என்ற பெயரில் பிடுங்க கூடாது.

 • மணிமாறன் - trichy,இந்தியா

  இவருக்கும் பெட்ரோலிய துறைக்கும் என்ன சம்பந்தம்.....நமக்கு வாய்த்த பிஜேபி மந்திரிகள் மிக மிக திறமைசாலிகள்...வாயில் வடை சுடுவதில் ...........

 • ஜெயந்தன் - Chennai,இந்தியா

  தற்போதைய அவலத்தை திசை திருப்பும் முயற்சி இது.. அத்தைக்கு மீசை முளைக்கும் போது பார்க்கலாம்.. இப்போது இவ்வளவு அளக்கும் இவர்கள் தேர்தலின் போது " நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரு லிட்டர் பெட்ரோல் 40 /50 ரூபாயில் நிறுத்தி விடுவோம்" என்று கூவினர்களே..இதெல்லாம் அப்போது தெரியாதா...

 • K E MUKUNDARAJAN - Chennai,இந்தியா

  பெட்ரோல் ரூபாய் 83 இல் மூல பொருள் ரூ 34 , மதிய வரி 13 , மாநில வரி 30 , டீலர் கமிஷன் 06 . இப்போ சொல்லுங்க யாரு விலை குறைக்கணும் என்று. பேசாம ஜீ எஸ் டி ல பெட்ரோலை கொண்டு வந்தா எல்லாம் சரி ஆகிவிடும். இந்தியா பூரா ஒரே ரேட் ஆகும். திட்டினாலு ஒருத்தனையே திட்டலாம்.

 • Meenu - Chennai,இந்தியா

  மழை இல்லை அதனால் விவசாயம் குறைந்து வருது, விலை நிலத்தை பிளாட் போட்டு விக்க அனுமதி கொடுத்துடீங்க, பிறகு எப்படி கோதுமை வைக்கோல், கரும்பு சக்கை எல்லாம் தாராளமாய் எத்தனால் தயாரிக்க கிடைக்கும்... அப்படியே கிடைத்தால், நம் நாட்டில் உள்ள அவ்வளவு வாகனங்களுக்கும் இதனால் எரிபொருளை சப்ளை தடையில்லாமல் வழங்க முடியாது... பேசுங்க பேசுங்க... எங்களையெல்லாம் பார்த்தல் எங்கள் வாழக்கையை பார்த்தல் உங்களுக்கு தமாஷா தெரியுது... ஏன்னா உங்கள மேல உட்கார வச்சுட்டோமில்ல..... நீங்களும் கடந்த நாலரை வருடமா சம்பாதிச்சுடீங்கள்ல ...

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  அரசு உடனடியாக மின்சார வாகனங்களை முக்கியத்துவம் அளிக்கவேண்டும். முதலில் மின்சார இருசக்கர வாகனங்களுக்கு வரி குறைக்க வேண்டும். தற்போது பெட்ரோல் வண்டிக்கு 11 சதவிகிதம் வரியும் , மின்சார வண்டிக்கு 12 சதவீத வரியும் உள்ளது தவறான செயல். பெட்ரோல் வண்டிக்கு இரண்டு வரி முறை கொண்டுவாருங்கள் 100 சிசி க்குள் இருந்தால் 18 சதவிகிதம் அதற்கு மேல் இருந்தால் 28 சதவிகிதம், மின்சார வாகனத்திற்கு 5 சதவிகிதம். இதுதான் சரியான வழிமுறை.

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  சீக்கிரம் மாற்று வழி ஆராய்ந்து செயல்படுத்தவும்

 • vns - Delhi,இந்தியா

  பாதாம் பருப்பு 1 கிலோ ரூ.900. குட்கா 1கிலோ ரூ. 4300. முந்திரி பருப்பு1கிலோ ரூ 800 சிகரெட் 1கிலோ ரூ. 5000. பசு நெய் 1 கிலோ ரூ. 600 புகையிலை 1கிலோ ரூ.1700. ஆப்பிள் பழம் 1கிலோ ரூ.100 பாக்கு 1 கிலோ ரூ.600 பால் 1 லிட்டர் ரூ.50 மதுபானம் 1 லிட்டர் ரூ.560. ஆனால் விலைவாசி ஏற்றத்தால் நல்ல உணவு உட்கொள்ள முடியவில்லை என்று புலம்புகிறோம். நம் நாடு மோசமான நிலையில் இல்லை... மாறாக நம் பழக்க வழக்கங்கள் மோசமான நிலையில் உள்ளது. நாம் ஒழுங்காக இல்லாமல் அரசை குற்றம் கூறுகிறோம்

 • பாமரன் - நம்மூர்தான்,இந்தியா

  வழக்கம் போல தன் மினிஸ்ட்ரிக்கு சம்பந்தமில்லாத ஸ்டேட்மென்ட். இவர் மினிஸ்டரியில நடக்கிற டோல் கேட் கொள்ளையை பற்றி வாய் திறந்தா நல்லாயிருக்கும். வாஜ்பாயி கொண்டு வந்த தங்க நாற்கர சாலையின் சாராம்சமே சாலைகளில் தனியார் முதலீட்டை ஊக்குவிக்க அதிகபட்சம் 15 வருடங்களுக்கு தனியாருக்கு டோல் வாங்கும் உரிமையை கொடுத்து அதன் பிறகு படிப்படியாக குறைத்து freeway ஆக்கப்படும் என்பது...அதிலும் வசூலித்த பணம் 15 வருடங்களுக்கு முன்பே செலவழித்த பணம் + லாபத்தை எட்டிவிட்டால் டோல் வசூல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.. ஆனால் நடப்பது என்ன...??? வருடா வருடம் ஒரிஜினல் கட்டணத்தையே ஏத்திக்கிட்டு போறாங்க.. எவ்வளவு வசூல் ஆனதுன்னு எந்த கணக்கும் வெளிப்படுவதில்லை.... இவருக்கும் இவர் குடும்பத்துக்கு சொந்தமான கம்பெனிகளும்கூட இந்த கொள்ளையில் ஈடுபட்டிருப்பதால் சும்மாயிருக்கார். கண்டத்துக்கும் கண்டனம் தெரிவிக்கும் நிதிமான்கள் எங்களை மட்டும் கவனிச்சு விட்டுடுங்கன்னு ஆர்டர் போடுறாங்க... எந்த கட்சிக்காரனும் இது சம்பந்தமா வாயே திறக்க மாட்டானுங்க... ஏன்னா அந்தந்த ஏரியாடோல் கலெக்ஷன் பண்ணுறது அவனுங்க கம்பெனிங்க.... நம்ம டவுசர் தாஸ் மட்டும் இந்த விஷயத்தில கொஞ்சம் அசந்துட்டதால அப்பப்போ குரல் கொடுப்பார்.. பங்கு வந்ததும் மரம்வெட்ட கெளம்பிடுவார்.. பாதிக்கப்படுவது பாமரன்க மட்டுமே...

 • Balasubramaniam - Tirupur,இந்தியா

  இதை 2050இல் அமல்படுத்துவோம். இதை விட்டு விட்டேர்களே. 2012இல் பெட்ரோல் விலை உயர்வு கொடுமை. அனைத்து டவுசர்கள் வீதிக்கு வந்து போராடினர். இப்போது உல்டா. கொள்ளைக்காரன் இருந்து சைக்கோ நாடக கம்பெனியிடம் சிக்கி தவிக்கும் மக்கள். 4 வருஷமா ஒட்டிட்டிட்டு இன்னிக்கு நடிப்பை பார்

 • rajan. - kerala,இந்தியா

  நமது நாட்டில் இன்று ஓடி கொண்டிருக்கும் வாகனங்கள் எல்லாமே எத்தினால் கலப்பு இல்லாத எரிபொருளுக்குரிய தொழில் நுட்பம் சார்ந்தது. அப்படி இருக்கையில் ஏத்தினால் கலப்பால் என்ஜின் பாதிப்புகள் என்ன என்பதை முதலில் தெளிவு படுத்துங்கள். அதே சமயம் மின்சக்தி வாகனங்களை ஊக்குவிக்கும் வகையில் அரசின் கொள்கைகளை வரையறுத்து மின்வாகனங்களை சந்தை படுத்துங்கள். இது தான் நல்ல தீர்வாக அமையும்.

 • Sakthi Vel - chennai,இந்தியா

  நல்ல அறிவு ஜீவன் இதை மோடி அருண் ஜெட்லி ஐயாவிடம் சொல்லலாமே, இவர்கள் ஆச்சிதான் என்பதை யாரு நினைவூட்டுவது ராம ராம

 • biju Thumparapulli - kERMAN,ஈரான்

  வாயிலே வட சுடுறது...

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  சாதாரண வண்டி எதனால் கலந்த பெட்ரோலில் ஓடாது. அதற்கு வண்டியின் ஓட்ட அமைப்பை மாற்ற வேண்டும் . இவர் சொல்லியிருக்கும் தாவரங்களை வளர்க்க நிறைய நீர்வளம் வேண்டும். மெத்தனாலை சிலர் கள்ளசாராயத்தில் கலக்கும் ஆபத்துமுண்டு. உலகமே பொதுப்போக்குவரத்து சைக்கிள். நடை என மாறும் காலத்தில் வீட்டுக்கு இரண்டு வண்டி வாங்கி பக்கத்து தெருவுக்கும் தற்பெருமைக்காக வண்டியில் போகிறோம். எல்லோர் வீட்டிலும் அவசியமோ அவசியமில்லையோ பத்துப் பதினைந்து இறக்குமதி அந்நிய மின்னணு சாதனங்கள்? மாதமொரு புது மொபைல். இறக்குமதிப்பொருட்களின் பயன்பாட்டைக் குறைக்காவிடில் விரைவில் பிச்சையெடுப்போம்.

 • RAVICHANDRAN -

  எப்பஜி 2201லயா

 • SENTHIL NATHAN - DELHI,இந்தியா

  அப்ப ராமர் பிள்ளை அவர்களை ஊக்குவிக்க வேண்டியது தானே ???

 • Devanatha Jagannathan - puducherry,இந்தியா

  கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது இது தானோ?

 • N.Murugan - Nagercoil,இந்தியா

  வாயால் சுட்ட வடை நல்ல சூடாக இருக்கு

 • Sivabalan Balan - Mumbai,இந்தியா

  கிரேட் சார் ... நல்ல முயற்சி...

 • Sudhakar Subramaniam - chennai,இந்தியா

  போகாத ஊருக்கு வழி ..... 80 ரூபாய் பெட்ரோல் விலையில் 43 ரூபாய் வரி ..... இது எந்த நாட்டிலும் நடக்காது....

 • துயில் விரும்பி - coimbatore,இந்தியா

  இதெல்லாம் எங்களுக்கு கேட்டு கேட்டு புளிச்சி போச்சி. நீர் பழைய சுங்கச்சாவடி எல்லாம் மூடப்படும் னு சொன்னியே தமிழ்நாட்ல ஒண்ணுகூட மூடின பாடு இல்ல அடிக்கறாங்க கொள்ள 15 வருஷம் மேல நகரத்துக்குள்ளயே வளைச்சி வளைச்சி காசு புடுங்கறாங்க. போங்க மினிஸ்டர் உங்களுக்கு நிறைய பிசினஸ் இருக்கு னு ஊருக்கே தெரியும், நடுல கொஞ்சம் அரசியல் டைம் பாஸ்க்கு பண்றீங்கன்னு தெரியும்.

 • Visu Iyer - chennai,இந்தியா

  விரைவில் ரூ.500 வர வேண்டுவோம்..

 • Jaya Ram - madurai,இந்தியா

  எப்போ 2033 இல் தயாராகி விடும் இல்லையா

 • சிற்பி - Ahmadabad,இந்தியா

  அதன் விலை இப்போது ஐம்பது. விலைக்கு வரும் போது.. சொல்ல முடியாது. காரணம் பெட்ரோல் அடக்க விலை நாற்பது. மத்திய வரி பதினான்கு ரூபாய். மாநில வரிகள் இருபத்தொன்பது ரூபாய். மாநில அரசுகள் எதற்கும் அசைந்து கொடுக்காமல் போராட்டம் மட்டுமே செய்கின்றனர். அது போல இந்த புதிய வழிமுறை டீசல் பெட்ரோல் வந்தாலும் அதையும் வரி விதித்து நூறு ரூபாய்க்கு ஏற்றி விடுவர் நம் மாநில குறுநில மன்னர்கள்.

 • கோமாளி - erode,இந்தியா

  கரும்பாலையில் எத்தனால் தயாரிக்குறதுக்கு பதிலா தான் சாராயம் காச்சுறாங்களே.. அவங்க ஒத்துக்க மாட்டாங்க

 • RGK - Dharapuram,இந்தியா

  ஐயோ மோடி ஒழிக

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement