Advertisement

ஆதார் சாப்ட்வேரை ஹேக் செய்ய முடியும்

புதுடில்லி : தனி நபர் அடையாள ஆணையத்தின் ஆதார் சாப்ட்வேரை ஹேக் செய்து, அதிலிருந்து பொதுமக்களின் ஆதார் விவரங்களை திருட உதவும் சாப்ட்வேர் பயன்பாட்டில் உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த ஹேக்கிங் சாப்ட்வேர்கள் வெறும் ரூ.2,500 க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஆதார் தகவல்கள் திருடப்படுவதாக கூறப்பட்டு வருகிறது. ஆனால் பொதுமக்களின் ஆதார் விவரங்கள் பாதுகாப்பாக உள்ளதாக மத்திய அரசும், ஆதார் ஆணையமும் தொடர்ந்து தெரிவித்து வருகின்றன. எனினும், ஆதார் அடையாள அட்டையின் பாதுகாப்பு குறித்த கேள்விகளுக்கு முறையான பதில்கள் கிடைக்கவில்லை


இந்நிலையில், இணையதள நிறுவனங்களின் பாதுகாப்பை உடைக்க பயன்படுத்தப்படும் ஒரு பிரத்யேக சாப்டவேர் மூலம் ஆதார் விவரங்களை திருடலாம் என ஹஃபிங்டன்போஸ்ட் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. ரூ.2500க்கு கிடைக்கும் அந்த சாப்டவேர், ஆதார் ஆணையத்தின் பாதுகாப்பை உடைத்து, பொதுமக்களின் ஆதார் விவரங்களை காண பயன்படுகிறது. கடந்த சில மாதங்களாக பல்வேறு இணைய நிபுணர்கள் மூலம் அந்த பேட்ச் சாப்டவேரை ஆய்வு செய்து, ஆதார் விவரங்களின் பாதுகாப்பு உடைக்கப்படுவதை உறுதி செய்துள்ளதாக ஹஃபிங்டன்போஸ்ட் தெரிவித்துள்ளது.


ஆதார் விவரங்களை பொதுமக்களிடம் இருந்து பெறும் மையங்கள் பயன்படுத்தும் சாப்ட்வேரை இந்த பேட்ச் மூலம் திருடலாம். மேலும், எந்த ஆதார் மையம் இந்த சாப்ட்வேரை பயன்படுத்துகிறது என்பதை தெரிந்துகொள்ள பயன்படுத்தப்படும் ஜிபிஎஸ் சேவையையும் இந்த பேட்ச் மூலம் செயல் இழக்க செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த பேட்ச் மூலம், எந்த நாட்டில் உள்ளவர்களும், ஆதார் பாதுகாப்பை எளிதாக உடைக்க முடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆதார் கழகம் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டதாக ஹஃபிங்டன்போஸ்ட் இந்தியா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (30)

 • venkat - chennai,இந்தியா

  என்னவோ ஆதார் வலைத்தளம் மட்டும் மிகவும் வலுவற்றது போல ஒரு மாயை கணினி இணைய மென்பொருள் பற்றி ஏதும் தெரியாத பாமரர்கள், உள்நோக்க எதிரிக்கட்சிகள் புரளி செய்தி பரப்பி வருகிறார்கள். நீங்கள் அன்றாடம் பரிவர்த்தனை செய்யும் எந்த வலைத்தளத்தையும் விட ஆதார் uidai வலைத்தளம் ,மற்றும் பின் தகவல் சேமிப்புத் தொகுப்புகள் பாதுகாப்பானவையே. ஆதார் பாதுகாப்பு இல்லை என்ற நிலை உள்ளது என்றால் அதைவிட பல மடங்கு முக்கியத்துவம் வாய்ந்த மக்களின் பணப் பரிமாற்ற விவரங்கள் பாதுகாப்பு இல்லை என்ற நிலையே உள்ளது. அதனால் யாரும் பணப் பரிமாற்றங்களை இணையத்தின் மூலம் செய்வது உலகில் நிறுத்தவில்லை. உலகின் மாபெரும் வலைத்தளங்களில் இருந்து இந்த நூற்றாண்டின் சில முக்கிய தகவல் திருட்டுகள் பட்டியல் >> தகவல் கசிவு யாஹூ - 300 கோடி, Adult Friend - 400 கோடி, ஈபே - 150 கோடி, Equiax - 14 கோடி அமெரிக்கா ஆதாருக்கு இணையான SSN மற்றும் 2 லட்சம் கிரெடிட் கார்டு விவரம் உட்பட, Heartland Payment - 13 கோடி கிரெடிட் கார்டு தகவல், Target Store - 11 கோடி கிரெடிட் கார்டு, TJX - 9 கோடி கிரெடிட் கார்டு, உபேர் - 5.7 கோடி பயனாளி 6 லட்சம் ஓட்டுநர், ஜெ பி மார்கன் - 7.6 கோடி இல்லத்தோர், 70 லட்சம் சிறுவணிகர், US Office of Pers Mgt - 2.2 கோடி அரசு ஊழியர், சோனி play ஸ்டேஷன் - 7.7 கோடி இணைய கணக்குகள் ($ 17 கோடி இழப்பு) .Anthem - 7.88 கோடி வாடிக்கையாளர் விவரம், RSA Sec - 4 கோடி ஊழியர் விவரம், ஈரான் அணு ஆயுத திட்டம், Veri Sign, Home Depot - 5.6 கோடி கிரெடிட் கார்டு விவரம், Adobe - 3 .8 கோடி பயனாளி விவரம் .....இதையெல்லாம் பார்க்கும்போது ஆதார் தகவல் திருட்டு என்பது வெறும் புரட்டுப் புரளிகள்.

 • jagan - Chennai,இந்தியா

  சாப்ட்வேர் வல்லரசு ஹா ஹா ஹா

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  மின்னணு என்றாலே அதை திசை மாற்றமுடியும்... நம் இஷ்டம் போல செயல்படவைக்க முடியும்... புற சாதனங்கள் மூலம் அதை செயலிழக்க வைக்கவும் முடியும்... சொன்னால் யாரும் கேட்பது இல்லை...

 • GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா

  இது தெரிந்த செய்தி தானே ..... இவர்களின் ஆட்சியில் அனைத்தும்.. இழந்த இந்தியர்கள் நாம்....

 • வெகுளி - Maatuthaavani,இந்தியா

  ஆதார் உட்பட உலகின் எந்த ஒரு சாப்ட்வேரையும் ஹேக் செய்ய முடியும்...... உண்ணும் உணவில் ரசாயனம் இருக்கிறது என்பதற்காக பட்டினி கிடக்க முடியுமா?..... முடிந்தவரை குறைகளை களைந்து பாதுகாப்பாக்க வேண்டும்.....

 • Rajhoo Venkatesh - coimbatore,இந்தியா

  He cannot live in jail without wine and women so he will definitely try avoiding jail

 • பிசெபியை அடியோடு வெறுக்கும் ஒன் ஆப் இந்தியன் - அகமதாபாத் டீக்கடை அருகில்,இந்தியா

  இந்த செய்தி ஆதாரை கட்டாயப்படுத்தி மக்கள் மீது திணிக்க மும்முரமாக உழைத்த பிசெபிக்கி சமர்ப்பணம்.திருட்டு பிசெபியால் மக்கள் இம்சையில் இருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை.

 • srikanth - coimbatore,இந்தியா

  "Aadhar safe " இதுக்கு நாங்க guarentee இன்னு வரிசையா உதார் விட்டவங்கள எங்க காணும்

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  அமெரிக்காவின் பெட்டகனின் வலைத்தளத்தையே ஹேக் செய்துள்ளார்கள் .அதற்காக அவர்கள் கணினிகளை தூக்கிவீசவில்லை .

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  வங்கிகளின் கணக்கு ரகசியத்தை பாதுகாப்பது போல ஆதார் தகவல்கள் பாதுகாக்கப்படவேண்டும்.

 • பிரபு - மதுரை,இந்தியா

  ஆதார் தகவல்கள் திரட்டப்பட்டதே, திருடர்களுக்கு கொடுப்பதற்குத்தான். கார்பொரேட் கம்பெனிகள் தங்கள் பொருட்களை மார்க்கெட்டிங் செய்வதற்கே ஆதார் தகவல்கள் அதிகம் பயன்படுத்தப்படுகிறது என்பது நிதர்சனமான உண்மை.

 • பாரதன். - ,

  அட போங்கப்பா... ஹாக்கர்கள் முடியுமென்று சொல்வதும், அரசு முடியாது என்று சொல்வதும் வாடிக்கையாகிவிட்டது. இதில் ஆதார் வழக்கில் உச்சநீதிமன்றம் வேறு விரைவில் தீர்ப்பு வழங்க உள்ளது. இனி எல்லாம் விதி விட்ட வழி.

 • சிற்பி - Ahmadabad,இந்தியா

  இந்த கம்ப்யூட்டர் உலகத்தில் எல்லாம் சாத்தியம். அமெரிக்காவின் உலகத்திலேயே சக்தி வாய்ந்த உளவு அமைப்பின் விபரங்களை திருடுகிறார்கள். அப்புறம் என்ன நாட்டை நம்பாமல் காட்டிக்கொடுக்கும் துரோகிகள் உள்ள இந்தியாவில் ? இந்தியாவில் துரோகிகள் அதிகம், தன் நாட்டை விரும்புவதை விட காசு கொடுப்பவனின் காலை நக்கும் மக்கள் நிறையவே உள்ளனர். அவர்கள் பணத்துக்காகவும் செய்வார்கள். மேலும் வெறுமனே கொள்ளை, கொலை செய்யும் மாபாதகர்கள் நம நாட்டில் இருக்கிறார்கள். கேளிக்கைக்காக செய்வது. அது போல ஆட்களும் நிறையவே உள்ளனர். இவர்கள் தான் வெளி நாட்டு முதலாளிகளுக்கு இலக்கு. அதனால் எதுவும் நடக்கும்.

 • கோமாளி - erode,இந்தியா

  ஆதார் ஒடஞ்சா என்ன ஒடையலனா என்ன.. அதான் மொபைல் இருக்கே.. எல்லா தகவலும் சுலபமா எடுக்கலாம்... 2500₹ செலவு பண்ண தேவையில்ல

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  பெரிய திட்டங்கள் கொண்டு வரும் போது அதன் பாதுகாப்பும் மிக முக்கியம்.

 • புதிய தமிழ்மைந்தன் - Dindigul India,இந்தியா

  என்னைய்யா இந்த நாட்டுக்கு வந்த சோதனை. காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தால் திட்டம் போட்டு ஊழல்கள் மூலமாக மக்களின் பணம் காலியாகுது. இப்போது ஆட்சியில் இல்லை ஆனால் ராகுல் சீனா தூதர் மற்றும் வெளிநாடுகள் சென்று வந்தபின் ஹேக்கர்கள் வேலையை ஆரம்பித்து விட்டார்கள். இதில் தி.மு.க விற்கு 2.6 சதவீதம் மட்டுமே கமிஷனாம்

 • Lawrence Ron - WASHINGTON DC,யூ.எஸ்.ஏ

  we have already built strong concrete wall around aadhar server so nobody can touch it.....Info Minister

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  அரசு அல்லது அந்த அமைப்பு உடாய் இனியும் உண்மையை மறுப்பது / மறைப்பது பொய்க்குச் சமம் ....

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  இந்தியர்களையும் இந்திய பொருளாதாரத்தையும் மொத்தமாக குத்தகைக்கு விட்டு விட்டார்கள். நடுத்தர வர்க்கத்தினர், மீடியம் தொழில் அதிபர்கள் பயப்பட ஆரம்பித்து விட்டார்கள். குருவி மாதிரி சேர்த்து வைத்ததையெல்லாம் யாராச்சும் அள்ளிவிடுவார்களோ என்று பயம். பண முதலைகளுக்கு எந்த பிரச்னையும் கிடையாது.

 • veeraraghavan - thiruvarur,இந்தியா

  ஆதார் மட்டும் இல்லை , எல்லாத்தையும் திருட ஆரம்பித்துவிட்டார்கள் . பிரிட்டிஷ் ஏர்வேஸ் வெப்சைட் ஐ பயன்படுத்தியவர்கள் கிரெடிட் கார்டு , திருடப்பட்ட மக்களுக்கான இழப்பு 500000 பவுண்ட்

 • நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா

  இந்தியாவில் உள்ள பிரச்சனையே இதுதான். எந்த ஒரு நல்ல திட்டம் வந்தாலும் அதில் நிறைய ஓட்டைகள். சில இடங்களில் அவை வேண்டுமென்றே ஏற்படுத்தப்படுகின்றன.

 • R. Vidya Sagar - Chennai,இந்தியா

  சாப்ட்வேர் பெயர் போடாமல் முற்றிலும் ஹேஷ்யங்களின் அடிப்படையில் ஆன செய்தி.

 • christ - chennai,இந்தியா

  ஒட்டுமொத்த இந்தியர்களின் தனிப்பட்ட தகவல்கள் ஹிட்லர் ஆட்சியில் டிஜிட்டல் இந்தியா என கூறிக்கொண்டு விற்கப்பட்டு உள்ளன .

 • Balasubramaniam - Tirupur,இந்தியா

  13 அடுக்கு பாதுகாப்பு என்று தலைவர் போலவே வாயில் வடை சுட்டவர் எப்படி பதில் சொல்வார்? இப்போதும் ஒன்றும் கேட்டுவிடவில்லை. ஒரு அரசு அங்கீகாரம் பெற்ற திறமையான ஹேக்கர் பணி அமர்த்தி ஊடுருவும் வாய்ப்பு கண்டறிந்து நிவர்த்தி செய்ய முடியும். பூசி மெழுகாமல் உண்மையை ஒப்புக்கொண்டு ஆக வேண்டிய செயலை பார்க்கவும்

 • Indian -

  At the end, all our information available at 2500 RS. Poor governance and management

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement