பரிகார ஸ்தலங்களில் போலி புரோகிதர்கள்: கலெக்டரிடம் முறையீடு
ஈரோடு: பவானி கூடுதுறை, கொடுமுடி மற்றும் கொடிவேரி போன்ற இடங்களில், போலி புரோகிதர்கள் அதிகரித்து விட்டதாக, கலெக்டர் கதிரவனிடம், பவானியை சேர்ந்த சம்பத் தலைமையில், மக்கள் மனு வழங்கினர்.
மனு விபரம்: பவானி கூடுதுறை, கொடுமுடி மற்றும் கொடிவேரி போன்ற இடங்களில் தர்ப்பணம், திதி, பரிகார பூஜைகள், தோஷ நிவர்த்தி செய்து, மக்கள் வழிபடுகின்றனர். புரோகிதம் படிக்காதவர்கள், மந்திரம் தெரியாதவர்கள் பலரும், மக்களை ஏமாற்றி பணம் பறிக்கின்றனர். பவானியில் சில ஆண்டுக்கு முன், மந்திரம் தெரிந்த புரோகிதர்கள், பிற சமூகத்தினருக்கு மந்திரம் கற்பித்து அடையாள அட்டை வழங்கி, பரிகாரம் செய்ய அனுமதித்தனர். தற்போது, அதை முறையாக கடைபிடிப்பதில்லை. மாவட்ட நிர்வாகம், அறநிலையத்துறையினருடன் பேசி, பரிகாரம் செய்யும் இடங்களில், முறையாக மந்திரங்கள் கற்றவர்களை மட்டும், புரோகிதம் செய்ய அனுமதிக்க வேண்டும். அடையாள அட்டை வழங்கி, பரிகாரத்துக்கான கட்டணத்தை போர்டாக வைக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!