Advertisement

புகை கக்கும் வாகனம் சுற்றுச்சூழலுக்கு கேடு

பல்லடம்:பல்லடம் என்.எச்., ரோடு வழியாக சென்ற புகை வண்டி லாரியால், வாகன ஓட்டிகள் நேற்று கடும் அவதிக்குள்ளாயினர்.பல்லடத்தில், போக்கு வரத்து நிறைந்த என்.எச்., ரோட்டில், பஸ், லாரி, கார், டூவீலர், ஆம்புலன்ஸ் உட்பட, ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. போக்கு வரத்து நிறைந்த இந்த ரோட்டில், நேற்று காலை, இரும்பு உதிரி பாகங்கள் ஏற்றியபடி, லாரி ஒன்று, கோவையை நோக்கி சென்றது. பனப்பாளையத்தில் துவங்கி, என்,எச்.,ரோடு வழியாக வந்த லாரி, எறும்பு போல், ஊர்ந்து கொண்டே, புகை கக்கியபடி சென்றது. அதிலிருந்து வெளியான கரும்புகை, வாகன ஓட்டிகளின் கண்களை பதம் பார்த்தது. வாகன ஓட்டிகளோ, புகையின் பிடியிலிருந்து தப்பிக்க, ரோட்டோரத்தில் தடுமாறி சென்றனர். புகை கக்கும் இதுபோன்ற வாகனங்களால், பாதை தெரியாமல், விபத்து ஏற்படும் ஆபத்து உள்ளது. ஏற்கனவே, பல்லடம் என்.எச்.,ரோட்டில், விபத்துகள் அதிகரித்து வரும் நிலையில், அதிகாரிகள் இதுபோன்ற வாகனங்களை கண்டறிந்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement