Advertisement

சொத்துக்காக தந்தையிடம் தகராறு விஷம் குடித்து மகன் தற்கொலை

சேத்தியாத்தோப்பு:சேத்தியாத்தோப்பு அருகே நிலத்தை தனது பெயருக்கு எழுதித் தரும்படி தந்தையிடம் தகராறு செய்து விஷம் குடித்த மகன் இறந்தார்.


சேத்தியாத்தோப்பு அடுத்த வத்தராயன்தெத்து மேலவெளியைச் சேர்ந்தவர் பால்ராஜ், 65; இவருக்கு மகன் முரளி, 36; மகள் புனிதா என இருவர் உள்ளனர்.பால்ராஜ் தனக்கு சொந்தமான சாக்காங்குடியில் உள்ள 19 ஏக்கர் நிலத்தை இருவருக்கும் தலா 6 ஏக்கர் வீதம் பிரித்து கொடுத்து விட்டு மீதமுள்ள 7 ஏக்கர் நிலத்தை தனது பெயரில் வைத்திருந்தார். அந்த நிலத்தையும் தனது பெயரில் எழுதி தரும்படி முரளி, தனது தந்தையை வற்புறுத்தி வந்தார்.


இந்நிலையில், கடந்த 7ம் தேதி, சாக்காங்குடியில் தனது மகள் வீட்டில் தங்கியிருந்த பால்ராஜிடம் மீண்டும் சொத்தை எழுதி தருமாறு கேட்டு, தகராறில் ஈடுபட்ட முரளி, பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார்.உடன், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லுாரி மருத்துவக்கல்லுாரி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த முரளி, நேற்று மதியம் இறந்தார்.ஒரத்துார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement