Advertisement

ராஜ்யசபா தேர்தலில் நோட்டா கூடாது: தலைமை தேர்தல் ஆணையம்


புதுடில்லி: பார்லி. ராஜ்யசபா தேர்தலில் நோட்டாவை அறிமுகப்படுத்த கூடாது என அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களின் போது 'நோட்டா' அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் ராஜ்யசபா தேர்தலில் யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை என்பதை தெரிவிக்கும் 'நோட்டா' ஓட்டுச்சீட்டில் இடம்பெறும் என்று தகவல்கள் வெளியானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குஜராத் காங்.கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. கடந்த ஆக்.21ல் விசாரணைக்கு வந்தது. அப்போது நோட்டாவை பயன்படுத்த உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இதையடுத்து டில்லி தலைமைதேர்தல் ஆணையம் மாநில, யூனியன் பிரதேச தேர்தல் ஆணையர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ராஜ்யசபா , மறறும் சட்ட மேலவை தேர்தல்களில் நோட்டாவை பயன்படுத்தக்கூடாது தேர்தலுக்காக பயன்படுத்தப்படும் ஓட்டுச்சீட்டில் 'நோட்டா' பிரிண்டிங் செய்யப்படக்கூடாது எனவும் தெரிவித்துள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (14)

 • a.thirumalai -

  எல்லாருக்கும் காட்ட போறாங்க டாட்டா

 • ஆப்பு -

  நோட்டா சின்னத்தில் நான் போட்டியிடலாம்னு பாக்குறேன்...

 • Meenu - Chennai,இந்தியா

  அவசியம் நோட்டா வேண்டும். அது எந்த சபாவா இருந்தாலும் சரி. இன்றைக்கு தேர்தலில் வெற்றிபெற்றுவிட்டால் ஐந்து வருடம் என்ன கொடுமை செய்கிறார்கள் மக்களுக்கு, நல்லது செய்வதே இல்லை. பணம் கொள்ளை அடிப்பதிலேயே குறிக்கோளாய் இருக்கின்றனர். விலைவாசியை யாருக்கு கட்டுப்படுத்துவதில்லை. தேர்தலில் கவர்ச்சியான வாக்குறுதிகளை சொல்லி எங்களை நம்ப வச்சு ஏமாத்துகின்றனர். உதாரணத்துக்கு பாஜக. தேர்ந்தெடுக்க உரிமை கொடுத்த எங்களுக்கு, அவரை திரும்ப பெற உரிமை கொடுக்கவில்லை. இது நமது சட்டத்தில் உள்ள குறை. தேர்தலில் நிற்பவர்கள் எல்லாம் யோக்யர்களா இல்லை என்று தோணும்போது, வாக்களிப்பவரின் மனநிலையை கொஞ்சம் எண்ணி பார்க்கவேண்டும் தேர்தல் ஆணையம். நோட்டா இல்லாவிட்டால் வேறு வழி இல்லாமல் யாரவது ஒரு அயோக்யனுக்கு இலவசம் வாக்கு வந்து விடும். அப்படி ஒரு சந்தர்ப்பத்தை தேர்தல் ஆணையமே ஏற்படுத்தி தர கூடாது, நீதி மன்றமும் நோட்டாவை கட்டாயம் அமல்படுத்த வேண்டும் என்று கட்டளை இடவேண்டும். இது இந்திய மக்களின் ஒட்டுமொத்த மக்களின் கருத்து. நான் எந்த கட்சியையும் சாராதவன்.

 • கோமாளி - erode,இந்தியா

  நோட்டா பதிவர்கள் மூன்று நான்கு வேட்பாளர்களை தவிர பட்டியலில் இருக்கும் வேறு யாரையும் தெரியாது..

 • Navn - Newyark,யூ.எஸ்.ஏ

  பிஜேபி க்கு இனி போட்டி இல்லை..

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  நோட்டா அவசியம் வேண்டும்... காரணம் விருப்பு வெறுப்புகளை காட்டும் ஒரே சாதனம் அதுதான்... இருபத்தைந்து சதத்திற்கு மேல் நோட்டா பதிவு ஆகி இருந்தால் மீண்டும் தேர்தல் வைக்கவேண்டும்...

 • Balasubramaniam - Tirupur,இந்தியா

  நோட்டா பிஜேபிக்காகவே மக்களால் காட்டப்படும் எதிர்ப்பு. ஊழல் காங்கிரெஸ்க்கும் ஓட்டு போட விரும்பாமல், மத வெறி பிஜேபி க்கும் ஓட்டும்போட விரும்பாமல் மக்கள் போடுவது.

 • Samy Chinnathambi - rayong,தாய்லாந்து

  ஏன் தமிழ்நாட்டுல நோட்டாவுக்கு கீழாய் ஒட்டு வாங்குவோம்னு பயமா? பயப்படாதீங்க.......சும்மா விளையாடி பாருங்க..பிக்பாஸ் ஐஸ்வர்யா மாதிரி மக்களை சந்திக்க பயப்படாதீங்க பாஸ்..........எங்களுக்கு காங்கிரஸ் திமுக ஒரு ஆஃப்ஷன் கிடையாது.........அது திருட்டு கூட்டணி.............

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  நோட்டா புழக்கம் தவறு நோட்டுபுழக்கம் ஓகே

 • Praveen - Chennai,இந்தியா

  நோ டு நோட்டா ... :(

 • தமிழன் -

  இங்க போட போற ஓட்டே அதான் ! அதையும் தடை பண்ணுனா மன்னிக்கவும் வாக்களித்தோர் சதவிகிதம் குறையும் !

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement