Advertisement

வடக்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம்

திண்டிவனம்:விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க.,செயற்குழு கூட்டம் திண்டிவனத்தில் நேற்று முன்தினம் மாலை நடந்தது.


கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார்.மாவட்ட செயலர் மஸ்தான், விழுப்புரத்தில் வரும் 15ம் தேதி நடைபெறும் முப்பெரும் விழாவில், வடக்கு மாவட்டத்தின் சார்பில் கட்சியினர் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி பேசினார்.
கூட்டத்தில் எம்.எல்.ஏ.,க்கள் மாசிலாமணி, சீத்தாபதிசொக்கலிங்கம், மாவட்ட துணை செயலர்கள்வசந்தா, ரவிக்குமார், தீர்மானக்குழு உறுப்பினர் சிவா, பொருளாளர் ரவி, பொதுக்குழு உறுப்பினர் ரமணன், திண்டினம் நகர செயலர் கபிலன், வழக்கறிஞரணி ஆதித்தன், அருணகிரி, ஒன்றிய செயலர்கள் சொக்கலிங்கம், ராஜாராம், மணிமாறன், மாணவரணி தயாளன், முஸ்தபா, ஆறுமுகம், முன்னாள் ஒன்றிய செயலாளர் காளிதாசன், அணி அமைப்பாளர்கள் சின்னச்சாமி, செந்தில், சக்திசரவணன், பிரபு, ராஜசக்தி, மொக்தியார் அலி, அன்சாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், விழுப்புரத்தில் வரும் 15ம் தேதி நடைபெறும் தி.மு.க., முப்பெரும் விழாவில் வடக்கு மாவட்டம் சாரபில் திரளாக பங்கேற்பது. வரும் 18 ம் தேதி, குட்கா ஊழலில் தொடர்புடைய அமைச்சர், போலீஸ் அதிகாரிகள் பதவி விலக வலியுறுத்தி திண்டிவனத்தில் நடைபெறும் ஆர்பாட்டத்தில் திரளாக பங்கேற்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement