Advertisement

இ.எஸ்., செவிலியர் கல்லூரி வேலைவாய்ப்பு முகாம்

விழுப்புரம்:விழுப்புரம் இ.எஸ்., செவிலியர் கல்லுாரியில் இறுதியாண்டு செவிலிய மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.


பேராசிரியர் மேனகாகாந்தி தலைமை தாங்கி, முகாமை துவக்கி வைத்தார். மனிதவள மேலாண்மை மேலாளர் பிரசாந்த் பால், மாணவர்களுக்கு மியாட் மருத்துவமனை வரலாறு மற்றும் அங்கு நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் பற்றி விளக்கமளித்தார்.
சென்னை மியாட் பல்நோக்கு மருத்துவமனை செவலிய கண்காணிப்பாளர் தீனலட்சுமி, செவிலிய கல்வியாளர் மினி ஆப்ரகாம், மனிதவள மேலாண்மை குழு உறுப்பினர் மேரி பிரியதர்ஷினி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.


முகாமில், 130 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். பின், மாணவிகளுக்கு எழுத்து தேர்வு, நேர்முக தேர்வு நடைபெற்றது. இதில் தேர்வாகிய மாணவிகளுக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement