Advertisement

ரேஷன் கடை ஊழியர் சாலை விபத்தில் பலி

ஆர். கே.பேட்டை:இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில், ரேஷன் கடை விற்பனையாளர் இறந்தார்.


ஆர்.கே.பேட்டை ஒன்றியம், கோபாலபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர், நைனா மகன் சவுந்தர்ராஜன், 43; இவர், சந்திரவிலாசபுரம் ரேஷன் கடை விற்பனையாளராக பணி செய்து வந்தார்.இந்நிலையில், நேற்று காலை, சவுந்தர்ராஜன். ரேஷன் கடைக்கு, இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தார்.


அப்போது, சந்திரவிலாசபுரம், அருந்ததி காலனி பகுதியில் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதிக் கொண்டன. இதில், ரேஷன் கடை விற்பனையாளர், சவுந்தர்ராஜன், சம்பவ இடத்திலேயே இறந்தார். மற்றொரு வாகனத்தில் வந்த முனுசாமி, படுகாயம் அடைந்து, சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement