Advertisement

மாணவியருக்கு கல்வி உதவித்தொகை

ஏகனாம்பேட்டை:அரசு பள்ளி மாணவியருக்கு, கல்வி உதவித்தொகை வழங்கும் விழா, நேற்று நடந்தது.


வாலாஜாபாத் அடுத்த, ஏகனாம்பேட்டை அரசு மகளிர் மேல் நிலைப் பள்ளியில், நேற்று மாலை நடந்த விழாவிற்கு, முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி தலைமை வகித்தார்.
காஞ்சிபுரம் மாவட்ட கல்வி அலுவலர் மகேஸ்வரி, பள்ளி தலைமை ஆசிரியை சுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


கடந்த ஆண்டு, நடப்பாண்டு படித்து, 80 சதவீதம் மதிப்பெண் பெற்ற, 35 மாணவியருக்கு, டி.சி.எஸ்., மென்பொருள் நிறுவனம் சார்பில், 10.57 லட்சம் ரூபாய் கல்வி உதவித்தொகை காசோலைகளை, முதன்மை கல்வி அலுவலர் வழங்கினார்.கல்வி துறை அதிகாரிகள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் பங்கேற்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement