Advertisement

ஏ.டி.எம்., மிஷின் இல்லை: ஏமாறும் பொதுமக்கள்

காஞ்சிபுரம்:இயந்திரம் இல்லாத, இந்தியன் வங்கியின், ஏ.டி.எம்., மையம் திறந்திருப்பதால், பணம் எடுக்க வரும் வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.


காஞ்சிபுரம் இந்தியன் வங்கியின், சங்கரமடம் கிளை, சாலைத் தெருவில் சங்கரமடத்தையொட்டி அமைந்திருந்தது.வாடிக்கையாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இடவசதி இல்லாததால், ஜூலை மாதம், அதே தெருவில் விசாலமான இடத்திற்கு மாற்றப்பட்டது.அப்போது, சங்கரமடத்தின் வாசல் அருகே இருந்த, ஏ.டி.எம்., மையத்தில் இருந்த இயந்திரங்களும், புதிய அலுவலகத்திற்கு வெளியே இடமாற்றம் செய்யப்பட்டது.


ஆனால், ஏ.டி.எம்., மையம் ஷட்டரால் மூடப்படவில்லை. மேலும், மையம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதற்கான அறிவிப்பு பலகையும் வைக்கவில்லை.இது குறித்து, அங்குள்ள ஆட்டோ ஸ்டாண்ட் ஓட்டுனர் ஒருவர் கூறியதாவது:ஏ.டி.எம்., மையத்தின் ஷட்டர் மூடாமல் உள்ளதால், பணம் எடுக்க வரும், 50க்கும் மேற்பட்டோரிடம், ஏ.டி.எம்., மையம் மாறிவிட்டது என, தினமும் கூறுகிறோம்.


எனவே, ஏ.டி.எம்., மையத்தின் பெயர் பலகையை அகற்றுவதோடு, இயந்திரமே இல்லாத மையத்தின் ஷட்டரை இழுத்து மூட, வங்கி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்
கூறினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement