Advertisement

ஒருவழிப்பாதையில் கனரக போக்குவரத்து ரயில்வே சாலையில் நெரிசல்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ரயில்வே சாலை, ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டாலும், லாரிகள், வேன், கார்கள் செல்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.


காஞ்சிபுரம் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதற்கு தீர்வு காண, கடந்த ஆண்டு, அப்போதைய காவல் துணைக் கண்காணிப்பாளர் நடவடிக்கையால், காந்தி சாலை, மூங்கில் மண்டபம் ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டது.காலை, மாலையில் அனைத்து வாகனங்களும், ஒருவழியில் செல்ல அனுமதிக்கப்படும்.


மதியம், குறிப்பிட்ட நேரத்திலும், இரவு, 9:00 மணிக்கு பின்னரும், வாகனங்கள் வழக்கம் போல் செல்லலாம்.பேருந்து நிலையத்தில் இருந்து செங்கல்பட்டு, தாம்பரம், மாமல்லபுரம், உத்திரமேரூர், திருவண்ணாமலை, திருச்சி, மதுரை போன்ற நகரங்களுக்குச் செல்லும் அனைத்து பேருந்துகளும் ரயில்வே சாலை வழியாகச் சென்று, காந்தி சாலை, ரங்கசாமி குளம் வழியாக பிரிந்து செல்லும்.


இதனால், ரயில்வே சாலை ஒருவழிப்பாதையாக இருப்பதால், பேருந்துகள் செல்ல வசதியாக இருந்தது.தற்போது அந்த சாலையில் லாரி, வேன், கார்கள் மார்க்கெட் வழியாக பேருந்து நிலையம் நோக்கிச் செல்கிறது.அந்த சாலையின் இருபுறமும், வாகனங்கள் நிறுத்தப்படுவதால், சாதாரண நாட்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இதை போக்குவரத்து போலீசார் கண்காணிக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement