Advertisement

ஓட்டுனர்களுக்கு கத்திக்குத்து மொபைல் திருடர்கள் கைது

திருவொற்றியூர்:கன்டெய்னர் லாரி ஓட்டுனர்கள் இருவரை, கத்தியால் குத்தி, மொபைல் போன்களை பறித்த, இரண்டு திருடர்களை, போலீசார் கைது செய்தனர்.


பீஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர் தினேஷ், 40. இவர், சென்னை, திருச்சிணாங்குப்பம் அருகே, நேற்று காலை, கன்டெய்னர் லாரியில் அமர்ந்திருந்தார். அங்கு, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், தினேஷின் மொபைல் போனை பறிக்க முயன்றனர்.தடுக்க முயன்றதால்,
கையில் கத்தியால் குத்திய மர்ம நபர்கள், அவரது மொபைல் போன், 1,000 ரூபாயை பறித்து
தப்பினர்.


அதே தெருவில், சற்று துாரம் தள்ளி, தேனியைச் சேர்ந்த ஓட்டுனர் முருகேசன், 29, என்பவர், கன்டெய்னர் லாரி அருகே நின்றிருந்தார். அவரிடம் வந்த மர்ம நபர்கள், கையில் கத்தியால் குத்தி, மொபைல் போன், 800 ரூபாயை பறித்து தப்பினர்.ரோந்து பணியிலிருந்த திருவொற்றியூர் போலீசார், மர்ம நபர்களை துரத்திச் சென்று, தாங்கல், தியாகராயபுரம் அருகே மடக்கி பிடித்தனர்.
விசாரணையில், நேதாஜி நகரைச் சேர்ந்த ராம்குமார், 29, மதன், 23, என்பது தெரியவந்தது.
இருவரையும் கைது செய்த போலீசார், இரண்டு மொபைல் போன்கள் மற்றும், 1,800 ரூபாயை பறிமுதல் செய்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement