Advertisement

தி.மு.க., ஆட்சி ஊழல்கள் பட்டியல் வெளியாகும்

ஓமலுார் : ''தி.மு.க., ஆட்சியில் நடந்த தவறுகள், இனி வெளியாகும்,'' என, முதல்வர் பழனிசாமி எச்சரித்துள்ளார்.


பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க, சேலம் வந்த, தமிழக முதல்வர் பழனிசாமி, விமான நிலையத்தில் அளித்த பேட்டி: மேகதாது அணை கட்டக்கூடாது என்பது, தமிழக அரசின் நிலைப்பாடு. கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டபோது, தண்ணீர் இருப்பு இருந்தும், கர்நாடகா வழங்கவில்லை.


பாலாறு அணையில் தடுப்பணை குறித்து, சட்ட ரீதியாக சந்திப்போம். அமைச்சர்கள் மீது, புகார் எழுந்தவுடன், குற்றவாளியாக கருத முடியாது. மக்களிடையே, அ.தி.மு.க., செல்வாக்கு அதிகரிப்பதால், வேண்டுமென்றே திட்டமிட்டு, தடை செய்ய முயற்சிக்கின்றனர். அது முடியாததால், இப்படி குற்றச்சாட்டை எழுப்புகின்றனர்.


எந்த துறையிலும், தவறு நடந்துள்ளதாக புகார் வரவில்லை. ஜெயலலிதா ஆட்சியில், குற்றச்சாட்டு தெரிவித்ததும், நடவடிக்கை எடுக்கவில்லை என்பது எனக்கு தெரியும். அரசை பொறுத்தவரை, சிறப்பாக செயல்படுகிறது. கடந்த கால, தி.மு.க., ஆட்சியில், பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. இனி, அவை வெளியே வரும்.


தேர்தலின்போது, கூட்டணி குறித்து அறிவிக்கப்படும். பெட்ரோல் விலையில், மதிப்பு கூட்டுவரியை, மத்திய அரசு குறைக்க வேண்டும். தமிழகத்தில், நிதி பற்றாக்குறையாக உள்ளது. ஒவ்வொரு துறையிலும், நிதி ஆதாரத்தை பெருக்க வேண்டிய சூழல் உள்ளது.


சி.பி.ஐ., ரெய்டுக்கு, மத்திய அரசே காரணம் என கூறியது, தம்பிதுரை கருத்து; அரசின் கருத்து இல்லை. தமிழக அரசு, மத்திய அரசோடு இணக்கமான சூழலில் உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (31)

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  //ஊழல்வாத கட்சி என்று, அதனால்தான் தனியா நின்று வெற்றி பெறும் தைரியம் இல்லை..// ஊர் ஊராக கூட்டணி க்காக அலைகிற பீஜேபிக்கும் இது பொருந்துமல்லவா? திமுக ஊழல் என்று பலரும் பிலாக்கணம் பாடிக்கொண்டே இருக்கிறார்கள் பாவம் ஆதாரங்கள் இல்லாமல் எடுபடவில்லை.

 • Nakkal Nadhamuni - Chennai,இந்தியா

  சர்காரியா கமிசன் விசாரனை :- 27 ஆயிரம் சர்க்கரை மூட்டைகளை திருடி விற்றுள்ளார் கருணாநிதி என்று வாதம் நடந்துகொண்டு இறுக்கிறது. 27 ஆயிரம் சர்க்கரை மூட்டைகள் எங்கு போனது என்று நீதிபதி சர்க்காரியா கேட்டதற்க்கு, கருணாநிதி கூலாக பதில் சொல்கிறார் எறும்புகள் தின்றுவிட்டது என்று.நீதீபதியும் வழக்கறிஞ்சரும் வாயைடைத்து போய்விடுகிறார்கள். ஒரு வாரகாலம் வழக்கு தள்ளிவைக்கபடுகிறது. 27 ஆயிரம் மூட்டை சர்க்கரை ஏழை எளிய மக்களுக்கு செல்லவேண்டியதை திருடி விற்றுள்ளார் எப்படியாவது தண்டனை பெற்றேகொடுக்கவேண்டும் என்று நீதிபதிக்கு மனகுமறல். அரசு வழகறிஞ்சரை கூப்பிட்டு ரகசியமாக பேசுகிறார் ஒரு ஊழல்வாதி தப்பிக்கவே கூடாது. இந்த கேள்வியை கேள் அவன் மாட்டி கொள்வான் தண்டனை கொடுத்து விடலாம் என்கிறார். வழக்கு அடுத்தவாரம் விசாரனைக்கு வருகிறது. வக்கில் கேட்கிறார் 27 ஆயிரம் மூட்டை சர்க்கரையும் எறும்பு தின்றதா என்று ஆமாம் என்கிறார். அப்படி என்றால் அந்த 27 ஆயிரம் சாக்கு கோணிகள் எங்கே என்று கேட்கிறார்? யோசிக்காமல் பதில் சொன்னார் கருணாநிதி "அந்த 27 ஆயிரம் கோணிகளை கரையான் தின்ற பிறகே சர்க்கரையை எறும்புகள் தின்றன" என்று. வழக்கறிஞர் இதயத்தை ஒரு கையால் பிடித்துக்கொண்டு அமைதியாக தன் இருக்கையில் போய் அமர்ந்து கொண்டு நீதிபதியை பார்த்தார். நீதிபதியின் முகத்தில் ஈ ஆடவில்லை. உடனே பேனாவை எடுத்தார் ஊழல் நடந்துள்ளது , அது விஞ்ஞானபூர்வமான ஊழல். ஆதாரத்துடன் நிருபிக்க முடியததால் விடுதலை செய்கிறேன் என்று சொல்லிவிட்டு மனவேதனையுடன் சென்றுவிட்டார் அந்த உயர்ந்த மனிதர். A.ARIVARASAN, MA BL ADVOCATE VELLORE.

 • Malick Raja - jeddah,சவுதி அரேபியா

  மாண்புமிகு முதலமைச்சர் அவுகளே .. நீங்கள் பேசுவதெல்லாம் இனி எடுபடாது . அமைச்சர்களில் பெரும்பாலோர் ஆட்டையை போட்டதெல்லாம் இனி வெளியே வருமுங்கோ .. நீங்க எப்பிடிங்கோ முதலமைச்சர் ஆனிங்கோ .. சசிகலா தானுக முதல் அமைச்சராக உங்களை உக்கார வைத்தார் .. நீங்கள் அவர் காலில் விழுந்து வணங்கியதை உலகமே பார்த்து பதிவு செய்து வச்சிருங்க்க்காங்கோ .. இப்போது மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் வெளியே அனுப்புங்கோ நீங்களெல்லாம் ஆட்டோமேட்டிக்கா உள்ளே போயிடுவிங்கோ தெரியுமான்களோ .. விஜய பாஸ்கர் நல்லமனிசன் இல்லிங்கோ . ரொம்ப நல்ல மனுஷனாமுங்கோ .. நீங்க பாட்டுக்கு கம்முனு போன கொஞ்சநாள் இன்னும் சம்பாதிக்க வழிஇருக்கும்ங்கியோ .. இல்லாட்டி அம்போ தானுங்க .. புரிஞ்சி போசாக்கும் ..

 • truth tofday - india,இந்தியா

  அணை கட்டாமல் மணி மண்டபம் கடுக்குகிறார்கள் கமிசஉன்க்கு 8 வழி சாலை எத்தனியோ இடங்களில் வாகனங்கள் நகர முடியாமல் உதாரணத்துக்கு சினைஇகோ அல்லது பெரும் நகரங்கள் நுழைவாயிலில் பல மணி நேர போக்குவரத்து நெரிசல் உள்ள இழ்டங்களில் மேம்பாலம் கட்ட வில்லை ஆனல் கமிஷனுக்கு உடனே எட்டு வழிச்சாலை போடா துடிக்குபோதே அதில் எதனை commission எங்கு போவது என்று பாருங்கள் இந்த திருட்டு பயலைகளுக்கு துணிச்சல் எவ்வளவு ஓப்பனாக திருடுகிறார்கள் கோடிக்கணக்கில் விழா எடுக்கிறார்கள் எல்லாம் கஜானாவை திருடுவதிலேயே மும்மரமாக இருக்கிறார்கள் மக்கள் ஆதரவு என்ற போர்வையில்

 • பிரபு - மதுரை,இந்தியா

  இப்போவெல்லாம் அ.தி.மு.க.,காரவுங்க வீட்டுக்கு அடிக்கடி சி.பி.ஐ ரைடு வருது. அதை செய்தித்தாள்களிலும் போடுறாங்க.மக்களும் படிக்கிறாங்க.உங்க வண்டவாளமெல்லாம் தண்டவாளம் ஏறிறுச்சு. அதை திசை திருப்ப இப்படி ஏதாவது சொல்லவேண்டியது தான். தி.மு.க.,கரவுங்க கிட்ட ஊழல் இருந்தா ஆட்சிக்கு வந்த அப்பவே சொல்லிருப்பீங்க. நீங்களாவது இவ்வளவு நாளா விட்டு வச்சிருக்கிறாதாவது. ஏதாவது நல்ல ஆதாரமா இருந்தா தேடுங்க.

 • A.Gomathinayagam - chennai,இந்தியா

  இருவருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். இருவரும் இன்னும் 20 ஆண்டுகள் வழக்குகளை இழுத்தடிப்பார்கள். அவர்களிடம் கொள்ளை அடித்த பணம் இருக்கிறது, யாரை வேண்டுமானாலும் விலைக்கு வாங்க முடியும். அப்பாவி வாக்காளர்கள் தான்

 • ஆப்பு -

  எத்தனையோ டி.எம்.சி தண்ணீரை கடலுக்கு அனுப்பிடு, மறுபடியும் பழைய பல்லவி பாட ஆரமிச்சுட்டாங்களே...இவிங்க ஆட்சி மாறும் வரை தமிழகம் உருப்படாது.

 • kowsik Rishi - Chennai,இந்தியா

  சூப்பர் அண்ணாதிமுக இப்படி தான் மு.கருணாநிதி கு.க. திமுக மு.க ஸ்டாலின் சாறோடு பேசவேண்டும் அரசியல் ஒரு திமுக காரனையாவது அதிமுகவில் சிறைக்கு அனுப்ப முடியும் என்றால் அது தான் உங்கள் வெற்றி செல்வி ஜெ ஜெ கூட வேஸ்ட் அன்று மு. கருணாநிதியை மிக மிக துல்லியமாக திட்டமிட்டு சிறைக்கு அனுப்பியிருக்கவேண்டும் அதை சொதப்பியது அதிகாரிகள் தான் ( திமுக ஏவல்கள்) போகட்டும் தொடர் ஆட்சி என்று வந்தபிறகும் செல்வி ஜெ ஜெ வாழமுடியாமல் செய்த மு.கருணாநிதி கு.க. திமுகவை ஒரு சிறை ஒரு ஆள் என்று அண்ணாதிமுக செய்யாததால் தான் செல்வி ஜெ ஜெ வை நேசிக்கும் மக்களுக்கு கொஞ்சம் ஆறுதல் எங்கள் தங்கம் இந்த தொடர் ஆட்சி காலம் வரையாவது வாழ்ந்து - தமிழ் நாட்டின் நிரந்தர முதல்வர் என்று மக்கள் போற்றும் - பாரத ரத்னம் ஆசிய தங்கஜோதி - இந்தியாவின் பெருமைப்பெண் என்று ராஜபாட்டை தனி பெரும் நினைவிடம் என்று விடை பெற்றிருக்க வேண்டும் பாவி மு.கருணாநிதி எல்லாத்தையும் அரசியல் என்று சொல்லி நாசம் செய்துவிட்டார்

 • adalarasan - chennai,இந்தியா

  இவ்வளவு நாட்கள் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்? அவர்களைப் பற்றி, உங்களுக்கு தெரியாதா என்ன? அரசாங்கம் உங்கள் கையில், தைரியம் இருந்தால், தகுந்த சாட்சிகளுடன், அவர்கள் மேல் சட்டப்படி, நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே?சட்டம், வொழுங்கு, மாநிலம் கையில் தான் இருக்கிறது? சும்மா பூச்சிக்காட்டி என்ன பயனும் இல்லை? அவர்கள், உங்கள் கட்சியினரின் மேல் கேஸுகள் போடவில்லையா?

 • புதிய தமிழ்மைந்தன் - Dindigul India,இந்தியா

  ஆதாரங்களையும் கோப்பக்களையும் தெரியாமல் எடுத்துச்செல்வதில் தி.மு.வினர் கில்லாடிகள். எனவே ............இவருக்கு மட்டும் மத்திய அமைச்சர் பதவி எக்காரணம் கொண்டு வழங்கக்கூடாது என தலையாட்டு பொம்மை பிரதமரே கோபப்பட்டு சொன்னதை இங்கே சுட்டிக் காட்டுகிறேன்

 • Balaji - Thanjavur,இந்தியா

  ஆக அரசியலில் எவனும் யோக்கியன் இல்லை. என் முறை வந்துள்ளது...நான் என்னால் முடிந்ததை கொள்ளையடித்துக்கொண்டுள்ளேன்...உன் முறை வரும்போது நீ திருடிக்கொள் என்பதுதான் இந்த இரண்டு கயவர் கும்பலின் நோக்கம்.

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  பத்து ஆண்டுகளாக ஆட்சியில் இருப்பது அதிமுக. இதுவரை எதுவுமே செய்ய முடியவில்லை. ஏனெனில் எதுக்கும் ஆதாரமே இல்லை. அனைத்தும் காழ்ப்புணர்ச்சியை சொல்லப்பட்ட போலியான குற்றச்சாட்டுகள். திமுக வின் ஊழல்களை பட்டியல் எடுத்து சாம்பிராணி புகை போட்டு பூஜை பண்ணிக்கிட்டு இருக்காரா? இவர்களின் ஊழல்கள் ஆதாரங்களுடன் வெளி வருகிறதே அதற்க்கு விளக்கம் சொல்லாமல், பத்து ஆண்டுகளுக்கு முன்னால் ஆண்ட திமுக வின் பட்டியலை வெளியிடுவாராம். அநத பட்டியல் எந்த ஆதாரமும் இல்லாத போலிப் பட்டியலாகத் தான் இருக்கும்.

 • skv(srinivasankrishnaveni) - Bangalore,இந்தியா

  திமுக ஓட்டைப்பானை அதிமுக ஒடஞ்ச ஆப்பை

 • Dr Kannan - Yaadum Voorae,யூ.எஸ்.ஏ

  சபாஷ் சரியான போட்டி ஆரம்பிக்கட்டும் குழாயடிச்சண்டை குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா இது கொள்ளையாடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா இதயம் திருந்த மருந்து சொல்லடா இதயம் திருந்த மருந்து சொல்லடா இருக்கும் அறிவை மடமை மூடிய இருட்டு உலகமடா வாழ்வில் எந்த நேரமும் சண்டை ஓயாத முரட்டு உலகமடா தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா இதயம் திருந்த மருந்து சொல்லடா

 • skv(srinivasankrishnaveni) - Bangalore,இந்தியா

  மாப்பிள்ளை உன்னை எய்சச்சுட்டேன் என்று மணமகள் சொல்ல மாப்பிள்ளை சொன்னான்னாம் இங்கே என்ன வாழுதுன்னு அர்த்தம் (மணமகளுக்கு போலியோவால் கை கோணல் மாப்பிள்ளளைக்கு பிறவியிலே கால் முடம்)திமுக கொள்ளையர் கூட்டம் என்றால் அதிமுக அண்டம் முழுங்கும் கொள்ளையர்கள் இந்த ரெண்டுக்குமே மாறிமாறி வோட்டு போடும் மக்களோ உலகமகா ஏமாளிகள் , இவா தரும் நோட்டுகளை வச்சுண்டு என்ன செய்யமுடியும் குடிப்பவனும் குடிச்சே தீர்ப்பான் அடுத்து தேர்தல் வருமான்னு தேவுடுகாப்பான் பொம்பளேகள் கைலே காசு இருந்தால் கிடைக்கும் காசுக்கு சீலை வாங்கிடுவா அவ்ளோதான் நான் வெஜ் திண்றவா அதை வாங்கி துண்ணுவாங்க வந்த வேகமாலே காசு அவுட்டானதும் பழையபடி இருப்பாளுங்க இதுவரை நடந்த தேர்தல்களிலே காசு கொடுக்காமல் ஜெயிச்சவன் யாரு தொடுக்கம்மாள் முக்குத்தி ன்னு வழங்கினாலும் அதையும் வித்து துருன்னுடுவாளுக இவனுக்குள்ளே ஏவானய்யா தன மூஞ்சிக்கு வோட்டுவாங்கிருக்கான் கேவலமான பணம் பன்றதுகளேதான் தேர்தல்லே நிக்குறாங்க விட்டபணத்தை மந்திரியானதும் நாலுமடங்க பெருக்குவானுக

 • POPCORN - Chennai ,இந்தியா

  டீலா.. நோ டீலா?

 • Aruna -

  மக்களுக்கு தெளிவாக்குவது இரு கழகங்களின் கடமை. மாறி மாறி பத்திரிகைகளில் வாக்குமூலம் தரலாம். Ready start .

 • tamil - coonoor,இந்தியா

  நித்தம் நித்தம் ஏதோ ஒரு ஊழல் குற்றச்சாட்டுக்கள் வந்துகொண்டே இருக்கின்றது, அதை பற்றி முதல்வருக்கு எந்த ஒரு கவலையும் இல்லை, வெளிப்படையாகவே சிங்கிள் டெண்டர் முறையில் இவருடைய சம்பந்திகள் அரசு ஒப்பந்தத்தை எந்த ஒரு போட்டியும் இன்றி எடுத்து வருகிறார்கள், அவர்களுக்கு தகுதி இருக்கு செய்கிறார்கள் என்று முதல்வரே பெருமை பேசுகிறார்,.அனைத்து ஒப்பந்தங்களும் கோவையில் அமைச்சரின் பினாமிகள் தான் ஆண்டு அனுபவித்து வருகிறார்கள் இது ஊரறிந்த விஷயம், திசை திருப்ப முடியாது, வழக்குகளை சந்தித்தே ஆகவேண்டும், இப்படி போடப்பட்ட வழக்குகள் தான் ஜெ அவர்களுக்கு தண்டனை கிடைக்க காரணமானது என்பதை முதல்வர் தெரிந்து கொள்ள வேண்டும்

 • Subramanian Srinivasan - valrokaiya ,இந்தோனேசியா

  உங்க ஆத்தா இருக்கும்வரை ஒன்றும் செய்யாமலா இருந்திருப்பார்?கலைஞரை கைது செய்தபின்னர் காரணம் தேடி ஒன்றும் கிடைக்காமல் நீதிமன்றம் வெளியே விட்டவர்தான் ஜாமீன் ராணி உங்காத்தா?

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  நீ செய்த ஊழலை நாங்கள் கொண்டு கொள்ளாமல் இருக்க வேண்டும் என்றால் நாங்கள் செய்த செய்கின்ற ஊழலை கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டும்...

 • Rajhoo Venkatesh - coimbatore,இந்தியா

  உங்கள் ஊழல் சாம்ராஜ்யம் வெளியே வந்ததும் தீ மு கா வின் ஊழலை வெளியே விடப்போறாராம் இந்த ஊழலை பெருச்சாளி .அவங்க செஞ்சதுக்கு தான் அவர்களை வீட்டுக்கு அனுப்பிச்சே. அடுத்தது நீங்க.

 • S.Pandiarajan - tirupur,இந்தியா

  தலைமை செயலக வழக்கு என்ன ஆச்சு சென்னையில் பாலம் கட்டியது ஊழல் என்று உங்க அம்மா சொல்லியது அது என்ன ஆச்சு ஒன்னும் நிரூபணம் பண்ண முடியாமல் சும்மா கிடக்கு ஆனால் குட்கா ஊழல் நிரூபணம் ஆகி விசாரணையில் உள்ளது சிங்கப்பூரில் இருந்து எழுதுபவர்கள் எதையும் தெரியாமல் எழுத கூடாது அங்க என்ன வேலையா போனீங்களோ அதை பாருங்க

 • Ivan -

  Eps nalathan chinna kattumaram innum thenaritu iruku. Hats off to Eps.

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  திமுக மெகா திருடர்கள் என்பது உலகறிந்தது - ஆனால் அவர்களின் விஞ்ஞான ரகசியங்களை அறிந்தவர்களை உயிருடன் விட்டு வைக்க மாட்டார்கள்... இரகசியங்கள் தெரிந்தால் வெளியிடாமல் மிரட்டுவது முதல்வர் பதவிக்கு அழகல்ல - அது தமிழக மக்களுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம்... வெளியிடவில்லை என்றால் கூட்டுக்களவாணிகள் என்று புரிந்துகொள்ள வேண்டும்...

 • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

  அப்படிப்போடு அரிவாளை சும்மா எடுத்து விடுங்கள். தீயமுக கட்சியின் வண்டவாளங்கள் எல்லோருக்கும் தான் தெரியுமே. ஆதாரத்துடன் வழக்கு போடுங்கள்.

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  "நாங்கள் ஊழல் செய்வதைப் பற்றி பேசினால், திமுக ஆட்சியில் செய்த ஊழல்களை வெளியிடுவோம்".

 • கும்புடுறேன் சாமி - பன்னிமடை கோவை,இந்தியா

  தி.மு.க ஆட்சியில் தவறுகள் நடந்திருந்தா அவங்கல புடிச்சு ஜெயில்ல இல்ல போடணும் ? போலீஸ் துறை மாதிரியே இத செய்யலைன்னா வேற யார் செய்வா ?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement