Advertisement

கேட்பாரற்று கிடந்த பையில் 60 சவரன் நகை

தாம்பரம்:தாம்பரம் ரயில் நிலையத்தில், கேட்பாரற்று கிடந்த பையில், 60 சவரன் நகை இருந்தது. அதை மீட்ட போலீசார், உரியவரிடம் ஒப்படைத்தனர்.


தாம்பரம் ரயில் நிலையத்தில் உள்ள, 7ம் எண் பிளாட்பாரத்தில், நேற்று முன்தினம் இரவு, கைப்பை ஒன்று கேட்பாரற்று கிடந்தது. இதை கண்டு பீதியடைந்த பயணியர், ரயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு, தகவல் அளித்தனர்.


விரைந்து வந்த, ரயில்வே பாதுகாப்பு படையினர், 'மெட்டல் டிடெக்டர்' மூலம், அந்த பையை சோதனை செய்தனர். அதில், வெடிகுண்டு ஏதும் இல்லை என்பது உறுதியானதால், பையை திறந்து பார்த்தனர்.அதில், 60 சவரன் நகை, 2,500 ரூபாய், ஏ.டி.எம்., கார்டுகள் மற்றும்
ஆவணங்கள் இருந்தன.


தொடர் விசாரணையில், அந்த பை, செம்பாக்கத்தை சேர்ந்த, ஜெபவேல்ராஜ் என்பவருக்கு சொந்தமானது என்பதும், ரயில் பயணத்தின் போது தவறவிட்டதும் தெரிய வந்தது.இதையடுத்து நேற்று, அவரை வரவழைத்த போலீசார், பையை, அவரிடம் ஒப்படைத்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement