Advertisement

கருணாநிதி அழைத்தும் செல்லவில்லை ஆதரவாளர்களிடம் அழகிரி தகவல்

மதுரை: ''தி.மு.க., தலைவர் கருணாநிதி இருந்த போது, கட்சியில் சேர அழைத்தும் நான் செல்லவில்லை,'' என, முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி, அவரது ஆதரவாளர்களிடம் தெரிவித்தார்.தி.மு.க., முன்னாள் தலைவர் கருணாநிதி நினைவாக, சென்னையில், 5ம் தேதி அமைதி பேரணியை, அவரது மூத்த மகன் அழகிரி நடத்தினார். நேற்று முன்தினம் அவர், மதுரை திரும்பினார். நேற்று தேனி மாவட்டத்தினரை சந்தித்தார்.

அவர்கள் மத்தியில் அழகிரி பேசியதாவது: கட்சியில் நம்மை சேர்க்க, அவர்கள் தயாராக இல்லை. கருணாநிதி இருந்த போது, அவரை அடிக்கடி பார்க்க செல்வேன். 2016 சட்டசபை தேர்தல் வேட்பாளர் பட்டியல் குறித்து, அவரிடம் அதிருப்தி தெரிவித்தேன்.
அப்போது, 'இவர்கள், நிர்வாகம் தெரியாதவர்களாக உள்ளனர். உனக்கான நேரம் வரும்; அப்போது வா. தோல்வியுற்ற பின், அவர்களே உன்னை தேடி வருவர். அதுவரை காத்திரு' என தெரிவித்தார். அப்போது தான், 'கட்சி அவரது கட்டுப்பாட்டில் இல்லை' என்பதை நான் அறிந்தேன்.
கடைசி நேரத்தில், கருணாநிதியின் உடல்நலம் கருதி, எவ்வித நிர்ப்பந்தமும் கொடுக்காமல் அமைதி காத்தேன். கருணாநிதி அழைத்தும், செல்லாமல் இருந்து விட்டேன். மாவட்ட வாரியாக, ஆதரவாளர்களை சந்திக்க ஏற்பாடு செய்யுங்கள்.
இவ்வாறு அவர்
பேசினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • Vilathur Nandhiyar - THANJAVUR ,இந்தியா

    உதயநிதி ஸ்டாலின் தான் திமுகவை வழி நடத்த சிறந்த தலைவர் அதன்பிறகு இன்பநிதி

  • Muruga Vel - Chennai,இந்தியா

    கோடாலி காம்பு ….

  • Bhaskaran - Chennai,இந்தியா

    உம்ம புளுகை நம்புற நிலையில தமிழ் சனங்க இல்லை ஐயா

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement