Advertisement

மலையில் உருண்டது பஸ் : தெலுங்கானாவில் 52 பேர் பலி

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில், மலைப் பாதையில் சென்ற பஸ், உருண்டு விழுந்ததில், இரண்டு கர்ப்பிணிகள், ஆறு குழந்தைகள் உட்பட, 52 பேர் பலியாகினர்.தெலுங்கானா மாநிலத்தில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதியின் காபந்து ஆட்சி நடக்கிறது.
கோர விபத்து : இங்குள்ள, ஜக்தியால் மாவட்டத்தில், கொண்டகட்டு என்ற மலை கிராமத்தில், பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. செவ்வாய் கிழமை தோறும், இந்தக் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருவர். நேற்றும் இந்த கோவிலில் கூட்டம் அதிகமாக இருந்தது.தரிசனம் முடித்த சில பக்தர்கள், அங்கிருந்து, ஜக்தியால் புறப்பட்ட அரசு பஸ்சில் ஏறினர். நேற்று காலை, ௧௧:௦௦ மணிக்கு, ௮௦ பயணியருடன், அந்த பஸ் புறப்பட்டது.சனிவாரபேட் என்ற கிராமத்துக்கு அருகே, வளைவில் திரும்பும்போது, அங்கிருந்த வேகத்தடையை டிரைவர் கவனிக்கவில்லை. இதனால், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், ௨௫ அடி பள்ளத்தில் உருண்டு விழுந்தது.இந்த கோர விபத்தில், ஆறு குழந்தைகள் உட்பட, ௨௫ பேர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவர்களில், இரண்டு பேர் கர்ப்பிணிகள்.ஒரு பெண்ணுக்கு, பஸ் உருண்டதிலேயே பிரசவம் ஏற்பட்டு, குழந்தையும், அந்த பெண்ணும், பரிதாபமாக உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த, மற்ற பயணியர் மீட்கப்பட்டு, அருகிலுள்ள பல்வேறு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களில், மேலும், ௨௭ பேர் இறந்ததால், உயிரிழந்தோர் எண்ணிக்கை, ௫௨ ஆக அதிகரித்தது. காயமடைந்துள்ள மேலும் சிலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதால், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக் கூடும் என, அஞ்சப்படுகிறது.பஸ் டிரைவர் ஸ்ரீநிவாஸ், இரு கால்களும் நசுங்கிய நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். தீயணைப்பு படையினர் சம்பவ இடத்தில், மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.நிவாரணம்விபத்து பற்றி அறிந்த தெலுங்கானா மாநில, காபந்து முதல்வர், சந்திரசேகர ராவ், காயமடைந்தோருக்கு உயர்தர சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார். பலியானோர் குடும்பத்துக்கு, தலா, 5 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார்.தெலுங்கானாவில் நடந்த கோர விபத்து பற்றி அறிந்த, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் ஆகியோர், விபத்தில் பலியானோரின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துஉள்ளனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement