Advertisement

அனைத்து தேர்தல்களிலும் பா.ஜ.,வுக்கே வெற்றி: அமித் ஷா

ஜெய்பூர் : 'அனைத்துத் தேர்தல்களிலும் நாங்கள் வெற்றி பெறுவோம்' என பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்தார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் பா.ஜ., தொண்டர்கள் மத்தியில் அவர் பேசியதாவது: தேர்தல் வரும்போதெல்லாம் எதிர்கட்சிகள் அவதூறு பரப்புவதை கொள்கையாக கொண்டுள்ளனர். மாட்டிறைச்சி விவகாரத்தில் பா.ஜ., மீது அவதூறு பரப்புகின்றனர். வரும் தேர்தலிலும் எதிர்கட்சிகளின் இத்தகைய முயற்சியை முறியடித்து பா.ஜ., அபார வெற்றி பெறும்.

காங்., கட்சிக்கு ஓட்டு வங்கி குறித்தே கவலை; நாட்டைப்பற்றிய கவலை இல்லை. மனித உரிமை மற்றும் நாட்டின் பாதுகாப்பு பற்றி காங்., அக்கறை கொள்வதில்லை. அனைத்து பயங்கரவாத தாக்குதல்களும், குண்டு வெடிப்புகளும் காங்., ஆட்சியில் தான் நடந்துள்ளன. வங்க தேசத்தவர் ஒருவர் கூட இங்கு தங்கியிருக்கக்கூடாது. எதிர்கட்சிகளின் எதிர்ப்பை சமாளித்து வங்க தேசத்தவர்களை இந்தியாவை விட்டு விரட்டுவோம். இவ்வாறு அவர் பேசினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (22)

 • ஜெயந்தன் - Chennai,இந்தியா

  ஏதோ பெரிய பிளானோடு தான் இருக்கிறார்கள்.. மக்கள் விழிப்பாக இருந்து விரட்டி அடிக்க வேண்டும்.. இவர்கள் மீண்டும் வந்தால் நம் சோற்றில் மண் தான்

 • Balasubramaniam - Tirupur,இந்தியா

  நோயாளிக்கு என்ன பிரச்சினை என்று கூட தெரியாமல் ஆபரேஷன் செய்வதில் வல்லவர் பிஜேபி. 8 வழி சாலை என்று கூப்பாடு போட்டு அது இல்லாவிட்டால் பொருளாதாரம் சீரழிந்து விடும் என்ற ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்து இப்போது 6 வழி சாலை போதும். 10000 கோடி இல் 2700 கோடி ஆராய்ச்சியில் செலவாகி விட்டது என்று பல்டி அடித்து விட்டார்கள். GST 450 மாற்றம் செய்தும் இன்னும் ஒழுங்குக்கு வரவில்லை. 2 வருடம் திருப்பி திருப்பி எண்ணிய செல்லாத நோட்டு நூற்று கணக்கான பேரை கொன்றது தானே தவிர ஒரு பிரயோஜனம் இல்லை. கருப்பு பணம் ஒரு ஆளுக்கு 15 லட்சம் அளவில் இருக்கும் என்று சொல்லிவிட்டு இப்போது 5 சதவீதம் கூட உள்ளே கொண்டு வர முடியவில்லை. மோடி அமித்ஷா நாடக கம்பனி நடிப்பால் புண்ணை பவுடரை பூசி மறைக்கும் மேக்கப் மட்டும் செய்ய முடிகிறது. சரி செய்ய முடியாது. எண்ணென்றால் சரி செய்ய தெரியாது. கொள்ளகாரர்கள் ஆட்சியில் பெட்ரோல் காஸ் விலை அதிகம் என்று கூப்பாடு போட்ட நாடக கம்பனி இன்று விலை உயர்வு கூட வளர்ச்சி என்கிற ரேஞ்சுக்கு கதை சொல்கிறார்கள்.

 • viswasam - Al Khobar,சவுதி அரேபியா

  அப்படினா வாக்கு எந்திரம் எல்லாம் தயார் ஆக உள்ளது , எது பட்டனை அழுத்தினாலும் அது எங்க சின்னதுக்கே ஒட்டு விழும் என்று அர்த்தம்

 • ஜெயந்தன் - Chennai,இந்தியா

  காங்கிரஸிற்கு தான் ஒட்டு வங்கியை பற்றி கவலை..எங்களுக்கு இல்லை.. அதனால் எங்களுக்கு ஒட்டு போடாதீர்கள்..

 • பொன் வண்ணன் - chennai,இந்தியா

  " காங்., கட்சிக்கு ஓட்டு வங்கி குறித்தே கவலை நாட்டைப்பற்றிய கவலை இல்லை"...ஹா..ஹா.. யார் சொல்றது பாரேன்.....மொத்த இந்தியாவுமே கவலைக்கிடமாக இருக்கிறது... இதுல இவனுங்க காமடி வேற....

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  இதெல்லாம் ரொம்ப ஓவர். பிஜேபி யின் திறனற்ற ஒருதலைப்பட்சமான தவறான முடிவுகள், சட்டங்களால் நாட்டின் எல்லாத் துறைகளிலும் பெரும் தோல்வியை அடைந்திருக்கிறது. இருந்தும், இதை சுட்டிக் காட்டுபவர்களை, நீ பேசாதே உனக்கு பேச உரிமை இல்லை, கேள்வி கேட்க தகுதி இல்லை, பதில் சொல்ல அவசியமில்லை என்று ஆணவத்துடன் அகம்பாவத்துடன் இயங்குகிறார்கள். சுப்ரீம் கோர்ட் முதல் தேர்தல் ஆணையம் வரை எல்லாமே பிஜேபி யினுடையதாக்கி விட்டதால் எல்லாத் தேர்தல்களிலும், ஏன் நடக்காத தேர்தல்களிலும் இவர்களே ஜெயிப்போம் என்று சொல்லிக் கொள்கிறார்கள்.

 • JIVAN - Cuddalore District,இந்தியா

  ஆபத்து.... ஆபத்து.... பாதுகாப்பான இடம் நோக்கி செல்லுங்கள்.

 • sampath, k - HOSUR,இந்தியா

  more complex not good to BJP

 • பாமரன் - நம்மூர்தான்,இந்தியா

  வங்கதேச புல்லுருவிகளை வெளியேற்றுவோம்ன்னு சொன்னதை செஞ்சால் பாராட்டுவோம். மத்தபடி கனவு காண அவருக்கு முழு உரிமை உண்டு...

 • A.Robet - chennai,இந்தியா

  உங்களுக்கு ஓட்டுவங்கி இல்லையா அப்படி என்றால் தேர்தலுக்கு தேர்தல் ராமர் கோவில் கட்டுவோம் என்று சொல்கிறீர்கள் நீங்கள் ஆட்சியில் இருந்த காலத்தில் கோயில் கட்டுவதைப்பற்றி பேசுவதில்லை தேர்தல் வந்தால்தான் உங்களுக்கு ராமரும் இந்து மக்களும் தெரிகிறார்கள் அவர்கள் மீது அவ்ரங்கசீய்ப்பைவிட கொடிய வரியை விதிக்கிறீர்களே மதம் என்ற போதையை ஊட்டுகிறீர்களே

 • tamil - coonoor,இந்தியா

  மக்களை பயமுறுத்துவது போல தெரிகிறது,

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  குசராத்துலவே உங்க கும்பலால 99 த தாண்ட முடில... பேச்சு ஒரு கேடா. ...? இனி தேய்பிறை தாண்டா ....

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  ஆசை அளப்பறியாதது

 • Rajhoo Venkatesh - coimbatore,இந்தியா

  பா ஜ க வுக்கு வெற்றி மேல் வெற்றி மக்களுக்கோ ஆப்பு மேல் ஆப்பு ,உன் மகனின் சொத்து மட்டும் எப்படி இவ்வளவு சீக்கிரம் பலமடங்கு உயர்ந்தது என்று இன்று வரை பதில் சொல்ல வில்லையே ஏன்.?

 • கட்டத்துரை - ahmadabad ,இந்தியா

  இதிலென்ன கஞ்சத்தனம்.. உலகம் எங்கும் நடக்கும் தேர்தலிலும் பிஜேபியே வெற்றி பெறும் என்று கூறவேண்டியது தானே.. அதுதானே சால பொருந்தும்...

 • ramu narayanan - Sydney,ஆஸ்திரேலியா

  பெட்ரோல் விலையேற்ற சதவீதம் குறைந்துள்ளதாக பாஜக கூறுவது மக்களை முட்டாளாக்கும் செயல்.

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  "மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் இருப்பதால் அனைத்துத் தேர்தல்களிலும் நாங்கள் வெற்றி பெறுவோம்".

 • chails ahamad - doha,கத்தார்

  திரு . அமித்ஷா அவர்கள் எந்நேரமும் கனவுலகிலேயே மிதக்கின்றார் தன்னை மறந்தே பிதற்றுகின்றார் , இந்த நான்கு ஆண்டு காலத்திலே பா ஜ ஆட்சியிலே மக்கள் பட்ட வேதனைகள் ஏராளம் என்பதை கவனத்தில் கொள்ள மறுப்பதாலே எந்நேரமும் பா ஜ வெற்றி பெறும் என்பதாகவே பிதற்றுகின்றார் , பட்டபாடுகள் ஏராளம் இழப்பதற்கும் மிஞ்ச வில்லையாம் வேதனைகளின் உச்சத்திலே விரக்தியுற்று இருக்கும் மக்கள் மறப்பதாக இல்லையாம் வைப்பார்களாம் ஆப்பு தேர்தலிலே . இனி ஒரு காலத்திலேயும் பா ஜ என பெயர் கூறி எவர் வீட்டிலும் ஓட்டு கேட்டு போய் விட வேண்டாமே, மக்களை பற்றிய கவலைகள் இல்லாதவர்கள் மதமும் மாடுமே குறியாக கொண்டவர்கள் நாடாள தகுதியற்றவர்கள் இந்த பா ஜ கட்சியினர் என்பதை மக்கள் வைத்திடும் முத்திரை தேர்தலிலே பிரகாசிக்குமாம் .

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement