Advertisement

அறிவியல் ஆயிரம்

கொழுக்கட்டை மந்தாரை



தாவர வகைகளில் 'கொழுக்கட்டை மந்தாரை' என்ற ஒரு மரம் உள்ளது. இது அந்தி மந்தாரையிலிருந்து மாறுபட்டது. இதன் பூக்கள் மஞ்சள், இளஞ்சிவப்பு, வெள்ளை நிறத்தில் இருக்கும். பூக்களின் நடுவில் காபிக்கொட்டை நிறத்தில் உள்ள அமைப்பு கொழுக்கட்டையில் பூரணம் வைத்ததை போன்று இருப்பதால் 'கொழுக்கட்டை மந்தாரை' என பெயர் பெற்றது. இந்த மரத்தில் ஆண் மரம், பெண் மரம் என இரு வகைகள் உள்ளன. பெண் மரம் பூ பூக்கும். ஆண் மந்தாரையின் பெரிய இலைகள் உணவு உண்ணும் இலைகள் தைக்க பயன்படும்.

தகவல் சுரங்கம்



திலகரின் விநாயகர் சதுர்த்தி



சமய விழாவான விநாயக சதுர்த்தியை 1893ம் ஆண்டிலிருந்து, சமூக விழாவாக மாற்றியவர் பால கங்காதர திலகர். முதன் முதலில் புனேயில் கொண்டாடப்பட்ட விநாயகர் சதுர்த்தி, பின்பு தான் மும்பைக்கு பரவியது. பேஷ்வாக்களின் குலதெய்வமாக விநாயகர் இருந்தார். பேஷ்வாக்களின் வீழ்ச்சிக்கு பின், விநாயகர் சதுர்த்தி வீட்டுக்குள் கொண்டாடப்படும் விழாவானது. பிரிட்டிஷ் ஆட்சியில் திலகர் இதனை மீண்டும் சமூக விழாவாக மாற்றினார். இது தேச உணர்வை வளர்க்க உதவும் என நம்பினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement