Advertisement

வராகடனின் உண்மை: அம்பலப்படுத்திய ரகுராம் ராஜன்

புதுடில்லி: வங்கிகளின் வராகடன் அதிகரிப்புக்கு, தகுதி இல்லாத, ஊழல் மலிந்த வங்கிகளும், காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஊழல்களும் தான் காரணம் என, ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

ரூ.10 லட்சம் கோடி வராகடன்ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில், ரிசர்வ் வங்கி கவர்னராக நியமிக்கப்பட்டவர் ரகுராம் ராஜன். 2016ம் ஆண்டு செப்டம்பரில் ஓய்வு பெற்றார். வங்கிகளின் வராகடன் 4 லட்சம் கோடி ரூபாயில் இருந்து 10 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு அதிகரித்துள்ளது. இதற்கான விளக்கம் அளிக்கும்படி, மதிப்பீடுகளுக்கான லோக்சபா குழு கேட்டு இருந்தது.


இத்துடன் வராகடன் அதிகரிப்புக்கு ரிசர்வ் வங்கியின் கவர்னராக ரகுராம் ராஜன் இருந்த போது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளே காரணம் என நிதி ஆயோக் அமைப்பின் துணை தலைவர் ராஜிவ் குமார் சமீபத்தில் குற்றம் சாட்டி இருந்தார்.இச்சூழ்நிலையில், மதிப்பீடுகளுக்கான லோக்சபா குழுவுக்கு ரகுராம் ராஜன் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:வங்கிகளின் வரா கடன் அதிகரிப்புக்கு, 2006ம் ஆண்டு முதலே சூழ்நிலை உருவாகி விட்டது. அப்போது காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பதவியில் இருந்தது. 2006ம் ஆண்டு வரை நல்ல லாபத்துடன் இயங்கி வந்த உள்கட்டமைப்பு நிறுவனங்களுக்கு வங்கிகள் ஏராளமான கடனை வாரி வழங்கின. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அந்த கடன் வசூல் செய்ய முடியாத சூழ்நிலைக்கு சென்றன. இதுபோன்ற பிரச்னைகளில் இருந்து வெளியே வருவதில் வங்கிகள் மெத்தனமாக செயல்பட்டன. இதற்கு வங்கி உயர் அதிகாரிகளின் தகுதியின்மையா அல்லது ஊழல் போக்கு காரணமா என்பதை என்னால் கூற இயலவில்லை.

காலஅவகாசம் வழங்கிய வங்கிகள்வசூல் செய்யமுடியாத கடன்களை வராகடனாக தான் அறிவிக்க வேண்டும். ஆனால், கடன் பெற்றவர்களுக்கு காலஅவகாசம் வழங்கி, கடன் வசூல் செய்வதில் வங்கிகள் சுணக்கம் காட்டின.மன்மோகன் சிங் பிரதமராக இரண்டாவது முறையாக பதவியேற்ற பிறகு நிலக்கரி ஊழல் உள்ளிட்ட பல ஊழல் புகார்கள் எழுந்தன. ஒரு புறம் வராகடன் அதிகரிப்பு பிரச்னை இருக்க, மறுபுறம் ஊழல் புகார்களால் பல்வேறு விஷயங்களில் கடினமான முடிவுகள் எடுப்பதில் மத்திய அரசு தயக்கம் காட்டியது. இதனால் செயல்பாட்டில் இருந்த திட்டங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. லாபமும் குறைந்தது; கடன் வசூலும் பாதிக்கப்பட்டது.வரா கடன் பிரச்னையை சமாளிக்க எனது தலைமையிலான ரிசர்வ் வங்கி பல நடவடிக்கைகளை எடுத்தது. ஆனால், வங்கிகள் பிரச்னையை நன்கு உணர்ந்து இருந்த போதும் அதற்கு ஒத்துழைக்கவில்லை. ரிசர்வ் வங்கி, வர்த்தக வங்கி இல்லாத காரணத்தால் ஒரு கட்டத்திற்கு மேல் செயல்படமுடியவில்லை. அதே நேரத்தில், வங்கிகளின் உயர் குழுக்களில் இடம் பெற்று இருந்த ரிசர்வ் வங்கியின் பிரதிநிதிகளும் சரியாக செயல்படவில்லை.


வங்கிகளின் சொத்து தரத்தை ஆய்வு செய்ய ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்தது. ஆனால், விசாரணைக்கு வங்கிகள் பயந்தன. இது கடன் வழங்குவதிலும், கடன் வசூலிலும் பாதிப்பை ஏற்படுத்தியது. கடன் வசூல் தீர்ப்பாயங்களும் மெதுவாக செயல்பட்டன. ஒரு கடனை வசூல் செய்ய, நான்கு ஆண்டுகள் வரை காலம் எடுத்து கொண்டன.இவ்வாறு ரகுராம் ராஜன் கூறினார்.
Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (135)

 • P R Srinivasan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  இதை ரகுராம் ராஜன் பதவியிலிருந்த போது சொல்லியிருந்தால் மிகவும் சிறப்பாக இருந்திருக்கும். அவருடைய புகழ்வாய்ந்த எடுத்துக்கூறு " ஐ டூ வாட் ஐ டூ " உண்மையாக இருந்திருக்கும். பதவி முடிந்து, வெளி நாட்டில் இருந்து கொண்டு அறிக்கை விட்டால் அவ்வளவாக எடுபடாது.

 • s t rajan - chennai,இந்தியா

  ப சிதம்பரம் மற்றும் மன்மோகன் என்ன பதில் சொல்லப் போகிறார்கள். அதுசரி சிதம்பரம் ஒரு ஊழல் நரி பாவம் மன்மோகன் - ஒரு தலையாட்டி பொம்மை. ரெண்டும் சேர்ந்து நாட்டை சூறை யாடிவிட்டது இப்போ தன்னுடைய நீதி மன்ற கைக்கூலிகளை உசுப்பி தப்பிக்க பார்க்கிறது. அந்த அளவுக்கு ஊழல் மலிந்திருக்கிறதுன்னு ராஜன் தான் சொல்றாரே. அது சரி, ஏன் எல்லாரும் பதவியில் இருக்கும் பொது ஜால்றா போட்டுவிட்டு அப்புறம் நல்லவன் மாதிரி நடிக்கிறானுங்க ?

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  காங்கிரஸிடம் இருந்து நான்கரை வருடம் முன்பே பாஜக ஆட்சியை தங்கள் வசம் தக்க வைத்துக் கொண்டுள்ளது. அப்படியிருக்கையில், ஆளும் கட்சியினரும், ரிசர்வ் வங்கியின் முன்னாள், இந்நாள் கவர்னர்களும் இன்னும் காங்கிரஸை குறை கூறிக் கொண்டே இருந்தால் என்ன அர்த்தம்? என்றே புரியவில்லை. கடந்த நான்கரை வருடமாக இவர்கள் என்ன கழட்டினார்கள்? எதற்கு அரசு (மக்களின் வரிப்பணத்தில்) சம்பளம் வாங்குகிறார்கள்? மக்களின் கழுத்தை அறுக்காமல் எல்லோரும் வீட்டுக்கு போய் தொலைய வேண்டியது தானே. (நல்லவேளை வங்கிகளின் வாராக் கடனுக்கு இந்தியாவை முன்பு ஆட்சி செய்த ஆங்கிலேயர்கள்தான் காரணம் என்று சொல்லாமல் விட்டார்களே).

 • Raja - Chennai,இந்தியா

  வங்கிகளை கட்டாயப்படுத்தி வாரா கடன்களின் உண்மை நிலவரத்தை வெளியிட செய்தவர் இவர். அதன் பிறகே 2015 / 2016 இல் எல்லா உண்மையும் வெளியே வந்தது. உடனே கார்பொரேட் கம்பெனிகள் சுப்ரமணியம் சுவாமி மூலம் பிரஷர் கொடுத்து இவரது பதவி நீடிப்பை தடுத்தனர். இல்லையென்றால் demonetization என்ற முட்டாள் தனமான நிகழ்வு நடந்திருக்காது

 • Poygai Nathan - Trichy,இந்தியா

  சுதந்திர ஆனதிலிருந்து 2008 வரை நமது இந்திய வங்கிகள் 18 லச்சம் கோடிதான் கடன் கொடுத்து இருந்தது. ஆனால் 2014 அன்று இந்திய வங்கிகள் கடன் கொடுத்து அளவு 53 லச்சம் கோடி. இந்த 6 வருட இடைப்பட்ட காலத்தில் மன்மோகன் சிங்க் 30 லச்சம் கோடிக்கு மேல் கார்பரேட்களுக்கு கடன் கொடுக்க பட்டது.. அதுவும் கடனை கட்டமுடியாவர்களுக்குஎல்லாம் திரும்பவும் கடன் கொடுக்க பட்டது... 2014 மோடி பதவியேற்கும் போது 9 லச்சம் கோடி வாரா கடனாக இருந்தது.. எவன் வீட்டு பணம் இப்படி வாரி இறைத்தார்கள்..

 • rajan. - kerala,இந்தியா

  ஒரு நாட்டில் நடக்கும் குற்றங்களில் மிக பெரிய குற்றம் என்பது எது? கொலை, பாலியல், திருட்டு, பிக் பாக்கெட், குற்றங்களா இல்லவே இல்லை. ஏனென்றால் இது குறிப்பிட்ட ஒரு சிலரை தான் பாதிக்கும். ஆனால் பொருளாதார குற்றம் இருக்கே அது ஒரு நாட்டின் இறையாண்மை சார்ந்த மக்களின் சந்ததிகள் சார்ந்த நெடுங்கால சீர்கேடுகளுக்கு வழிவகுத்து விடும். இதில் இருந்து நிவாரணம் என்பது எத்தனை வருடங்கள் எத்தனை தலைமுறைகள் தேவை படும் என்பது எந்த பொருளாதார நிபுணனாலும் கணித்து சொல்ல முடியாத ஓன்று. எனவே நாட்டின் பொருளாதாரத்தில் கைவைத்து இன்னும் நான் ஒரு பொருளாதார நிபுணன் என்று பீற்றுபவர்கள் தான் பஞ்சமாபாதகர்கள். இவர்களின் குற்றம் கொடும் தண்டனைக்கு உட்படுத்த வேண்டும் என்பது தான் அர்த்தசாஸ்திர விதிகள் சொல்கிறது. எனவே மக்கள் இந்த இரு பொருளாதார குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பதை பொறுத்து தான் நாம் நம் சந்ததிகளை காப்பாற்ற முடியும். இத்தனை வங்கி சீர்கேடுகளுக்கு வழிவகுத்து பெரும்பான்மை இந்தியர்களை ஊழலுக்கு அடிமையாகிய இந்த காங்கிரஸ், திமுக, அதிமுக இத்தியாதிகளை அறவே ஒழித்து காட்டும் வரை மக்களின் சுபீட்ச்சம் கிட்டாது. இவர்கள் எல்லாம் நம் தேசத்தின் சாபக்கேடுகள்.

 • Vasanth Saminathan - Trivandrum,இந்தியா

  இப்போ மட்டும் என்ன கிழிக்குதாம். அதே நிலைமைதான் தொடருகிறது. ஆமை வேக அரசுகள்.

 • Ponraj Pethanan - kov,பிஜி

  காங்கிரஸும் பிஜேபியம் ஒன்றுக்கொன்று சளைத்ததில்லை இந்த விஷயங்களில்.

 • நாகராஜ் - ,

  இவை எல்லாவற்றிற்கும் அடிப்படை காரணம் வங்கிகளை நாட்டுடைமை ஆக்கியது, அப்போது தானே அரசியல் வாதிகள் அடிக்க முடியும். மொரார்ஜி தேசாய் தடுத்தும் கேளாமல் செய்தவர் இந்திராகாந்தி

 • Ramesh - Chennai,இந்தியா

  இன்னும் சிறிதுநாளில் அப்படி ஒன்றூம் அனுப்பவில்லை என்றூ ரகுராம் ராஜன் சொல்லப்போறார்.

 • Amaidhi maargam - Vivekananda nagar,ஆப்கானிஸ்தான்

  Engalukku adhellaam theriyaadhu. Modi oyiga Modi oyiga

 • G.BABU - HARROW,யுனைடெட் கிங்டம்

  பொருளாதார மேதைகள் "சிதம்பரம் , மன்மோகன்சிங் " உங்கள் ஆட்சியில் ஏற்பட்ட அவலத்தை இன்னும் நீண்ட காலம் நாம் அனுபவிக்க வேண்டி இருக்கும்.

 • கைப்புள்ள - nj,இந்தியா

  சிதம்பரம் மூஞ்சில சாணியை கரைச்சி ஊத்துங்க அந்த மவுனசாமியாரை ஊரை விட்டே விரட்டுங்க.

 • கைப்புள்ள - nj,இந்தியா

  மோடியை, பா.ஜ.க வை கறிச்சு கறிச்சு கொட்டி நாட்டுக்குள் கலவரத்தை உணாடக்குவதற்கென்று திரியும் ஒரு நாசகாரன் கூட வாயை திறக்க மாட்டானுகள் இப்போ.

 • Rpalnivelu - Bangalorw,இந்தியா

  கூப்பிடுங்கள் அந்த மண்ணையும், பசியையும். சோனியாவின் ஊழலுக்கும் பேராசைக்கும் ஒர் அளவே இல்லாமல் கொள்ளையடிக்கப்பட்டது. கூடவே ஊழலின் ஊற்றுக்கண்ணும், மற்ற ஊழல் கான்சர் குடும்ப கட்சிகளும் இந்தியாவை சுரண்டி விட்டன. மோடியினால் இந்தியாவும், பொருளாதாரமும் காப்பற்றபட்டது/ காப்பாற்றப்படுகிறது.

 • N.Purushothaman - Kuala Lumpur ,மலேஷியா

  ஏற்கனவே பதிவு செய்த கருத்தை மீண்டும் கூறுகிறேன் .. ராகு ராம் ராஜன் அவர்கள் கூட சில தவறுகள் செய்துள்ளார் ..அதில் முதன்மையானது சிலரின் பேச்சை கேட்டு இஸ்லாமிக் பாங்கிங் ஐ இந்தியாவில் கொண்டு வருவதற்கு ஒப்புதல் அளித்தார் ..மதசார்பற்ற நாட்டுல இந்த பாங்கிங்க்கு என்ன வேலை ? என்ன அவசியம் வந்தது ? பிரிவினைக்கு வழி வகுக்கும் இந்த செயலுக்கு துணை போனவர் ..

 • புதிய தமிழ்மைந்தன் - Dindigul India,இந்தியா

  காங்கிரஸ் கட்சி ஊழலும் காரணமாக இருந்தது என்று கூறியது உண்மை தான்

 • N.Purushothaman - Kuala Lumpur ,மலேஷியா

  சுதர்சன் ஜி ... நல்லா சொன்னீங்க ...மன்மோகன் , ரகு ராம் போன்றவர்கள் நல்ல திறமைசாலிகள் தான் ..ஆனால் அவர்களிடம் அவர்களுக்கு கீழ் பணிபுரிபவர்களை சாமர்த்தியமாக வேலை வாங்கி அவர்களை வழி நடத்தும் ஒரு தலைமைத்துவ பண்பு இல்லை ...ஆனால் மோடிஜி , அருண் ஜெயிட்லி ,சுஷிமா , கட்காரி , ஜாவடேக்கர் ,ராஜ் நாத் போன்ற பலரிடம் அது அபரிதமாக உள்ளது ...RSS கண்டறியப்பட்டவர்கள் என்றும் சோடை போனது கிடையாது ...

 • NaanPeriyavan - Pudukottai,இந்தியா

  எங்க இங்க எல்லாத்துக்கும் மோடி அவர்களை குற்றம் சொல்லிய கை கூலிகளை காணோம்.

 • A.Robet - chennai,இந்தியா

  வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு கடனை திரும்பி செலுத்தாமல் நாட்டைவிட்டு ஒடிய விஜய் மல்லையா நீரவ் மோடி மற்றும் பலரும் சிறுபான்மையினரா

 • கோகுல்,மதுரை -

  50 லட்சம் கோடிக்கு 10 லட்சம் கோடி வாராகடன். 20% கமிஷனுங்கிறது சரியா தான் இருக்கு. அந்த காசெல்லாம் எத்தன பங்கோ, எந்த எந்த வெளி நாட்டில இருக்கோ? வாரா கடன் நஷ்டம்ன்னு வங்கி 30% வரி கட்டாது. அந்த பளு அரசாங்கத்தின் தலையில தான் விழும். அதன் தாக்கம் பெட்ரோலு, டாலரு, விலைவாசி உயர்வுன்னு ஒவ்வொரு ஜனங்களும் ஜாதி மதம் இனம் மொழி மாநிலம்ன்னு பாராபட்சம் இல்லாம பாதிக்கபடுவானுங்க... குடுத்த காசு வரலன்னா டாலர் பெட்ரோல் மட்டுமில்ல எல்லாமே விலை ஏற தான் செய்யும். விஞ்ஞான ஊழல்ல அடுத்த கட்டத்துக்கே போய்ட்டாங்கே....

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  வங்கிகள் ஒத்துழைக்கவில்லை / குற்றச்சாட்டுகள் காரணமாக முடிவுகள் எடுப்பதில் தயக்கமும் சுணக்கமும் ஏற்பட்டன.என்று தான் சொல்லியிருக்கிறார். பலரும் செய்தி தலைப்பை படித்ததுமே கருத்து போட்டு விடுவார்கள். நேற்று வரை இவரைத் திட்டியவர்கள் இனி பாராட்டு வார்கள்.

 • kumar.s. - bangalore,இந்தியா

  அமைப்புகளில் குற்றமில்லை. அதை நிர்வாகம் செய்வதில்தான் குற்றம். RBI அப்படியான பணிக்கு ஏற்படுத்தப்பட்ட அமைப்பு தான். ஆனால் கடன் கொடுத்த பேங்க்குகள் ஏன் வராக்கடனை வசூல் செய்வதில் சுணக்கம் காட்டின என்பதே பிரச்சினை. இப்பொழுதும் ஏன் slow ரேஸ் என்பதுதான் புரியவில்லை. எல்லோரும் பாவம் செய்கிறார்கள்.

 • நக்கல் -

  இந்த நாட்டில் நடந்த அத்தனை அயோக்யதனத்துக்கும் காரணம் இந்த காங்ரெஸ் தான்... அவர்கள் நாட்டை ஆள தகுதி இல்லாதவர்கள்... மாநில அளவில் திமுக போன்ற ஒழுக்கம் கெட்டவர்கள் வளர்ந்ததற்கும் அவர்கள்தான் காரணம்.. முற்றிலும் ஒழிக்கபட வேண்டியவர்கள்... இவர்களுக்கும் சுதந்திரத்துக்கு பாடுபட்டவர்களுக்கும் ஒரு சம்மந்தமும் இல்லை. தேச விரோதிகளை தவிர காங்ரெஸ்சை ஆதரிப்பவர்கள் இதை புரிந்து கொள்ளவேண்டும்.. நானும் ஒரு காலத்தில் காங்ரெஸ் ஆதரவாளந்தான்.. நாட்டுக்கு எது நல்லதோ அதை செய்யவேண்டும்.. தேசம் எல்லாதயும் விட பெரியது..

 • Sanjay - Chennai,இந்தியா

  மோடி ஒழிக என்று அக்கப்போர் நீதி கூவுவான்.

 • Sanjay - Chennai,இந்தியா

  இன்று அணைத்து விலை உயர்விற்கு காரணம் காங்கிரஸ் பாவிகள். காங்கிரஸ் ஒரு நாசகார சக்தி, நாட்டை புற்று நோய் போல் கொஞ்சம் கொஞ்சமாக அழித்துவிட்டது.

 • Sanjay - Chennai,இந்தியா

  எங்கே சுடலையாண்டி?

 • Samaniyan - Chennai ,இந்தியா

  I am an ex- banker and I have seen how UPA ministers and other politicians were looting the banks by àsking the bank officials to sanction loans to the most undeserving. Ultimately these loans big and small were never repaid and became NPAs . The blame must be taken by Chiddu, MMS and of course this Rajan who turned a blind eye to what was happening. All in all Congress has looted the country thoroughly.

 • ramakrishnan balasubramanian - Chennai,இந்தியா

  எது எப்படியோ ஏழைகள், நடுத்தர மக்கள் தான் இன்றும் பாதிப்பில் அதிகமாக உள்ளனர். தெரிந்தோ அல்லது தெரியாமலோ வங்கியிலிருந்து நிர்ணயித்த குறைந்த அளவு பணம் இல்லாவிட்டால் அவர்கள் கணக்கிலிருந்து பிடிங்கி பல கோடி ரூபாய் சேர்த்தும் வங்கிகள் லாபம் அடைய முடியவில்லை. தனியார் வங்கிகள் இதைவிட அதிகம் பணத்தை நிர்ணயம் செய்கின்றனர். ஏன் என்று கேட்க ஒருவரும் இல்லை. ஒரே நாடு .... என்று பேசுகிறவர்கள் ஒரே குறைந்த தொகை அனைத்து வங்கிகளுக்கும் இருக்க வேண்டும் என்று வாதாட யாரும்யில்லை இந்த பாரதத்தில். பெரும் தனியார் வங்கிகள் எப்படி வந்து மக்களை இன்றும் துன்பத்தில் ஆழ்த்தி வருகின்றன. "என் கேள்விக்கு என்ன பதில்" என்ற பாடல் தான் நினைவுக்கு வருகிறது.

 • Amaidhi maargam - Vivekananda nagar,ஆப்கானிஸ்தான்

  Modi'ai thittubavargal vandhu ingey oppaari vaikkalaam .. medaikku varavum

 • Bhagat Singh Dasan - Chennai,இந்தியா

  அதற்கு துணை போனதும் நீங்கள் தானே ரகுராம், RBI அதிகாரிகள் வேலை செய்யவில்லை என்றால் அதற்கு தலைமை வகிக்கும் நீங்கள் தான் பொறுப்பு. உண்மை இப்படி இருக்கையில், Demonetisation பற்றி தவறாக வெளி உலகில் நீங்கள் விமரிசனம் செய்ததற்கு யார் காரணம், எங்கு இருந்த யார் மீது இருந்த விசுவாசம்? மோடி ஒழிக Group and தமிழன்டா GROUP இதற்கு என்ன பதில் வைத்துள்ளது??

 • southindian - chennai,இந்தியா

  பசி மற்றும் ரா கா இதில் வேண்டுமானாலும் அடிக்கலாம் . பாவம் ம மோ சி. எல்லாவற்றுக்கும் தலை ஆட்டிவிட்டு இப்பொது மாதிரி விளாசுகிறார் இப்போது காங்கிரஸ் எங்கே கொண்டுபோய் முஞ்சியி வைத்துக்கொள்ளும் ஊழல் ஊழல் மயம் செய்துவிட்டு பசி ஒன்றும் தெரியாதவர் போல் உத்தமன் போல் பேசுகிறார்

 • ganapati sb - coimbatore,இந்தியா

  சோனியாவின் இத்தாலி கான் க்ராஸின் ஒரே சாதனை சிறுபான்மையினர் மக்கள் தொகை பெருக்கத்தை மத மாற்றத்தை ஊக்குவித்தது வேறு எதுவும் இல்லை மற்ற அனைத்திலும் ஊழல் கொள்ளை மோடி சொன்னதுபோல பொருளாதார வல்லுநர் என புகழப்பட்ட மன்மோகன் raincoat அணிந்து bathroom இல் குளிக்கும் கலையை எப்படி கற்றார் நாலாபுறமும் கொள்ளை நடக்கும் பொது நேர்மையாளர் என்ற பெயரை எப்படி பெற்றார் என்பதே

 • vns - Delhi,இந்தியா

  மோடியின் அரசாங்கத்தையும் அவரையும் தங்களுடைய மதம் மொழி மற்றும் சுயநலம் காரணமாக விமர்சிப்பவர்களுக்கு ஒரு செருப்படி. தினமலரில் பிஜேபியை ஆதரித்து இத்தனை பேர் கருத்து எழுதி உள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. சாதாரணமாக பத்து பேருக்கும் குறைவாகவே பிஜேபியை ஆதரித்து தினமலரில் கருத்து எழுதுவர். மோடி என்ற இந்தியர்களை மட்டுமே நேசிக்கும் மாமனிதர் நீண்ட நாள் வாழ்ந்து khancross ஆட்சி மீண்டும் வராமல் நாட்டை காப்பாற்றவேண்டும். நாட்டை நேசிக்கும் நல்லவர்கள் மோடியை ஆதரியுங்கள் அவர் நாட்டிற்காக உழைக்கிறார் வாழ்கிறார் .

 • Sathiya Moorthy - Salem,சவுதி அரேபியா

  நாட்டை கெடுத்து குட்டி சுவராக்கி விட்டார்கள் சிறுபான்மையினர் நல மற்றும் மதசார்பற்ற கட்சிகள். கடன்கள் வராது என தெரிந்தும் அரசியல் செல்வாக்கினால் கடன் கொடுத்தது, கடன் பாத்திரங்கள் கொடுத்து எரிபொருள் எண்ணையை வாங்கி நாட்டிற்குள் விலை ஏற்றம் ரொம்ப செய்யாமல் மொள்ளமாரி தானம் செய்தது, தினம் தினம் ஒரு ஊழல் அதுவும் இந்தியதிருநாட்டிலேயே முதன் முறையாக லக்ஷகோடிகளை, தனது குடும்பத்திற்கும், மு க குடும்பத்திற்கும், அது போக அணைத்து கூட்டணி கட்சிகளுக்கும் வாரி வாரி கொடுத்திருக்கிறார்கள். இதிலே பொய் புரட்டு வேறு. சிறுபான்மையினர் எப்படியானாலும் B J P யை ஆதரிக்க போவதில்லை. அதனால், இந்துக்கள் அனைவரும் ஒன்றுபட்டு தேசத்தின் நலனை மட்டும் முன்னிறுத்தி சிந்தித்து வாக்களிக்க வேண்டும். இனி ஒரு முறை போலி மதசார்பின்மை கூட்டணி ஆட்சிக்கு வரவே கூடாது. அது ஒரு கொள்ளை கூட்டணி.

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  இனியும் காங்கிரஸ் அரசியலில் இருப்பது சரியல்ல.. விடுங்கடா ஒடுங்கடா ,காந்தி காங்கிரசை கலைக்கச் சொன்னது நியாயமாகிவிட்டது. சில விஷயங்களில் தீர்க்கதரிசித்தான் அவர்

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  இத்தனைநாள் இவரை காப்பாற்றிக்கொண்டிருந்த காங்கிரஸுக்கே வேட்டு வைத்துவிட்டார். எந்த அந்நிய நாடோ முதலீட்டாளரோஇனி இந்திய அரசையோ ரிசர்வ் வங்கியையோ நம்புவார்களா? நாணயம் நம்பகத்தன்மைக்கே உலைவைத்துவிட்டார்கள் .அடடா இரண்டு பொருளாதார மேதைகளும் சேர்ந்து என்னவொரு சாதனை படைத்துவிட்டார்கள் ?

 • Prasanth K - Coimbatore,இந்தியா

  Banks should have not given loans to those people, Banks Give loans if he is a big shot and suffer to get back from them. Pls dont blame Government for that, its bank officers who are responsible for it, for giving loans of crores to big shots, RBI should have made strict regulations on giving loans from 2006 when you know that.

 • nabikal naayakam - கேவலமான தூத்துக்குடி,இந்தியா

  நான் வங்கிப்பணியில் 36 ஆண்டுகள் இருந்தவன். விருப்பு வெறுப்பின்றி கூறுகிறேன். வங்கிகளின் இந்த நிலைமைக்கு சந்தேகமே இல்லாமல் காங்கிரசும் சிதம்பரமும் மண்மோகனுமே முழுக்காரணம். மோடி மட்டும் வந்திருக்காவிட்டால் கண்டிப்பாக திவாலாகி இருக்கும்.

 • கோகுல்,மதுரை -

  1. உள்கட்டமைப்பு நிறுவனங்களுக்கு ஏராளமான கடன் வாரி வழங்கப்பட்டது. 2. கடன் வசூல் செய்வதில் வங்கிகள் சுனக்கம் காட்டின. 3. கடினமான முடிவு எடுப்பதில் மத்திய அரசு தயக்கம் காட்டியது. 4. ரிசர்வ் வங்கியின் பிரதிநிதிகளும் சரியாக செயல்படவில்லை. 5. கடன் வசூல் தீர்ப்பாயங்களும் மெதுவாக செயல்பட்டன.... கூட்டு களவானிகள் என்பது தெளிவாக தெரிகிறது.

 • rajan. - kerala,இந்தியா

  இந்தியாவின் பொருளாதார ஜோக்கர் தான் இந்த கல்லாப்பெட்டி சிங்காரம். ஆட்டைய போடுறதுல நம்மூர் தலையை விட சிகரம் கண்டவன் இந்த பொருளாதார கோமாளி கல்லாப்பெட்டி சிங்காரம்.

 • rajan. - kerala,இந்தியா

  இந்த பதிவானது மிக தெளிவாக காட்டுவது என்னவென்றால் எப்படி ஒரு நிர்வாக திறமை இல்லாத ஊழல் ஒன்றையே குறிக்கோளாகாக கொண்டு செயல் பட்ட இரு உலக பொருளாதார நிபுணர்கள் என கூறிக்கொள்ளும் PC & MM இனிதிராவின் இறையாண்மை மிக்க துறை ஆகிய பொருளாதாரம், RBI சார்ந்த வங்கி பொருளாதாரம் எப்படி எல்லாம் சீரழிக்க பட்டது என்பதை திரு. ரகுராம் ராஜன் விளக்கமளித்துள்ளார். இது தான் இவர்கள் தான் இந்திய பொருளாதாரத்தின் உண்மையான கோமாளிகள் என்பதே தெளிவாகி விட்டது. UNFORTUNATE FACES OF INDIAN ECONOMY IS NOW IDENTIFIED

 • Idithangi - SIngapore,சிங்கப்பூர்

  காங்கிரஸ் மற்றும் தி மு க வரிசையாக வந்து மோடி ஒழிக, பி ஜெ பி ஒழிக என்று கூவுங்கள்.

 • rajan. - kerala,இந்தியா

  THE REAL FACE OF SO CALLED WORLD RENOWNED ECONOMISTS MANMOHAN & P.CHIDEMBARAM ARE THE CLOUNISH ACTORS WHO SPOILED THE FUNDAMENTALS OF RBI AS WELL THE ENTIRE BANKING TEM OF INDIA IS SMARTLY SLAPED BY MR.RAGURAM RAJAN THE EX-RBI GAVERNOR. IT IS CRISTAL THAT HOW THE EX- FINANCE MINISTER IS CARELESS AND INEFFICIENT OR EVEN A JACK FOR CORRUPITON? NOW IT IS CLEAR THAT WHO SPOILED INDIAN ECONOMY.

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  காங்கிரெஸ்க்காரர்கள் சுருட்டிய பணத்தை அரசு கஜானாவில் சேர்த்தால் இந்தியாவின் பொருளாதார நிலை உயரும்.

 • Muthukumaran - Kinshasa,டெம் ரெப் ஆப் காங்கோ

  சூடு சொரணை மானம் ரோஷம் இருந்தால் காங்கிரஸ் பதில் சொல்லட்டும். மண்ணு சிங்கு, பப்பு மற்றும் கல்லாப்பெட்டி சிங்காரம் பதில் கொடுப்பார்களா?????

 • vbs manian - hyderabad,இந்தியா

  பொருளாதாரத்தை குட்டிச்சுவர் ஆக்கியது யார் ஏன் வெளிச்சம் போட்டு கட்டிவிட்டார். இப்போது காங்கிரஸ் பெரிசுகள் என்ன சொல்லும்.

 • KSK - Coimbatore,இந்தியா

  கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் இந்த மட சாம்பிராணிகள், ச்சே, மதசார்பின்மையாளர்கள் போர்வையில் விஷம் கக்கும் கும்பலில் ஒருவரையும் காணோமே? என்ன செய்கிறார்கள் ?

 • N.Purushothaman - Kuala Lumpur ,மலேஷியா

  இது எல்லாத்தையும் கருத்தில் கொண்டு தான் பா.ஜ திருத்தப்பட்ட திவால் சட்டம் மற்றும் வாராக்கடன் சட்டம் கொண்டு வந்தது ..இந்த சட்டத்தின் மூலம் சம்மந்தப்பட்ட நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வங்கிகள் விளம்பரம் எதுவும் செய்ய வேண்டியதில்லை ..புகார் அளித்தால் போதும்...உடனடி விசாரணை ஆரம்பிக்கப்பட்டு சொத்துக்கள் உடனே ஜப்தி செய்யப்படும்...கிடுக்குப்பிடியான இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தவுடனேயே நல்ல பலனை கொடுக்க ஆரம்பித்து உள்ளது ..ஒரே வாரத்தில் இந்த சட்டம் மூலம் வங்கிகளுக்கு ஒரு லட்சம் கோடி நிதி திரும்பி வந்தது .,,கடன் வாங்கிய நிறுவனங்கள் தங்கள் அசையா சொத்துக்கள் ஜப்தி செய்யப்பட்டுவிடுமோ என்கிற அச்சத்தில் கடனை திரும்ப கொடுத்து கொண்டு இருக்கின்றனர் .,,நேர்மையான இந்த நடவடிக்கையை பல தரப்பும் பாராட்ட ஆரம்பித்து உள்ளனர் ...IBC 2016 ( Insolvency and Bankruptcy Code ) மே 5 வருடம் 2016 அருண் ஜெயிட்லி அவர்களால் தாக்கல் செயப்பட்டு அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைமுறைக்கு வந்தது ..,

 • Ayappan - chennai,இந்தியா

  தமிழ் மக்களே ஒன்றை புரிந்துகொள்ளுங்கள் .. இந்த மனிதனை ( மோடியை ) கடந்த பல வருடங்களாக ( இருபது வருடத்திற்கும் மேல் ) இந்த கான்+கிராஸ் தொல்லை கொடுத்தது கொஞ்ச நஞ்சமல்ல ... அமெரிக்கா விசா வரை தடுத்தார்கள் .. எவளவு கேவலமாக இறங்கி தாக்க முடியுமோ அவ்வளவு. ஆனால் கர்மா யாரையும் சும்மா விடுவதில்லை . எல்லாரும் ஒரு மனிதனை மோசமாக ஏத்திகிறார்கள் என்றால் அந்த மனிதன் நல்லவனாக இருக்க வேண்டும் அர்த்த சாஸ்திரம் சொல்கிறது

 • வெகுளி - Maatuthaavani,இந்தியா

  உண்மைகளை கூறும் ரகுராம் ராஜன் ஆரியரா அல்லது ஆரிய அடிமையா என்ற ஆராய்ச்சியை துவக்குங்கள் ப்ரோ ஸ்......

 • Cheran Perumal - Radhapuram,இந்தியா

  சிதம்பரம் அடித்த கொள்ளையை மட்டும் வெளியில் சொல்ல மாட்டார். ஏனெனில் அவருக்கும் அதில் பங்குண்டு.

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  MODI DOWN DOWN🤣😂😀😗😆😅

 • venkatan - Puducherry,இந்தியா

  இந்த வங்கிகளை எல்லாம் நிர்வகிக்க RBI யால் முடியவில்லை என்றால்,1.எல்லா வங்கிகளையும் ஒன்றாக்கி விடலாம்.2.நிபுணர்களைக்கொண்ட தன்னாட்சி அமைப்பை ட்ராய் போல நிறுவி monetary control க்கு மேலதிக அதிகாரம் தரப்படவேண்டும்.3.இந்த அமைப்பு பார்லிமென்டின் கூட்டுப்பொருப்புக்கு மட்டும் கட்டுப்பட்டது.3 கடுத்தமான பொருளாதார நடவடிக்கைகளை தக்க சமயத்தில் இதுவே எடுக்கவேண்டும்.அரசியல் சார்ந்த நபர்களான பிரதமர்,மந்திரிகள் கையில் நடவடிக்கைகள் எடுக்கப்படலாகாது

 • மணிமாறன் - trichy,இந்தியா

  " 2006ம் ஆண்டு வரை நல்ல லாபத்துடன் இயங்கி வந்த உள்கட்டமைப்பு நிறுவனங்களுக்கு வங்கிகள் ஏராளமான கடனை வாரி வழங்கின. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அந்த கடன் வசூல் செய்ய முடியாத சூழ்நிலைக்கு சென்றன. இதுபோன்ற பிரச்னைகளில் இருந்து வெளியே வருவதில் வங்கிகள் மெத்தனமாக செயல்பட்டன. இதற்கு வங்கி உயர் அதிகாரிகளின் தகுதியின்மையா அல்லது ஊழல் போக்கு காரணமா என்பதை என்னால் கூற இயலவில்லை. "........வங்கிகளே இதற்கு முழு பொறுப்பு...அடுத்து வரும் வேறு ஆட்சியில் இந்த ஐந்து ஆண்டுகளில் நடந்தது வெளிச்சத்திற்கு வரும்...

 • sickularist sickular - sikim,பூடான்

  காங்கிரஸ் கூட்டணி ஆட்சிதான் இந்த நிலைமைக்கு காரணம் என்பது தெள்ள தெளிவு எல்லாவற்றுக்கும் மோடியை குறை சொல்லும் பப்புவின் பதில் என்ன ஜனங்கள் தெளிவாக உள்ளனர்

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  வாங்கடா வந்து திட்டிட்டு போங்க....

 • lazyhoneybee - Chennai,இந்தியா

  இதில் வருந்தத்தக்க செய்தி என்னவென்றால், இன்றைய எரிபொருள் விலை உயர்வு மற்றும் வங்கிகளின் வராக்கடன் ஆகியவை முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சியின் போது உருவானவைதான். இன்றைய சூழலில் மேற்குறிப்பிட்ட இரண்டையும் உடனடியாக கட்டுக்குள் கொண்டு வருவது இயலாத காரியம். பெரும்பான்மையான மக்கள் நாட்டின் வங்கி கட்டமைப்பின் மீது நம்பிக்கை இழந்து விட்டார்கள். தற்போதைய தேசிய ஜனநாயக கூட்டணி அரசும் தேசிய மயக்கப்பட்ட வங்கிகளை கூட தம் போக்கில் செயல்பட விட்டு விட்டார்கள். எடுத்துக்காட்டிற்கு, பாரத ஸ்டேட் வங்கியின் குறைந்த இருப்பு தொகை கணக்கில் இல்லை என்றால் அபராதம் விதிக்கும் முறையினை கூறலாம். வங்கிகளின் அடிப்படை நோக்கமான சேவை, சேமிப்பு முக்கியமற்றதாக ஆகிவிட்டது. ஆனால் அரசுக்கும் வங்கிகளுக்கும் சேவை வரி மற்றும் சார்புடைய கட்டணங்கள் முக்கிய நோக்கமாக மாறி விட்டது,

 • Amaidhi maargam - Vivekananda nagar,ஆப்கானிஸ்தான்

  Modi Rajan kazhuthil.kaththi vaithu mirattugiraar. MGR Nambiyar padam maadhiriye Modi seigiraarnu sollida viyadhu dhaane? Poraalies enga?

 • ஆப்பு -

  இவுரு சொல்லிட்டா உண்மையாயிடுமா? இவரால வசூலிக்க முடியலேன்னா அப்பவே போயிருக்க வேண்டியது தானே...இவரே கையாலாகாதவர்..இவரைக் கெளப்ப மோடி வரவேண்டியிருந்தது. கடன்கள் வசூலாவது பொருளாதார வளர்ச்சியைப் பொருத்தது. 2006 க்கு முன்னாடி நல்லாத்தானே வசூலாச்சு. அப்புறம் அமெரிக்க பொருளாதாரம் விழுந்தப்புறம் இந்தியப் பொருளாதாரம் விழுந்துச்சு. அங்கே ஓபாமா 100க்கு மேல சின்ன வங்கிகளை முழுகடிச்சு பெரிய வங்கிகளை நோட்டடிச்சுக் குடுத்து வாழவெச்சார். இங்கே சோசலிசமா கடனை வசூலிக்காம உட்டாங்க. 2016ல நிலமை சரியானதும் மோடி வந்து ராஜனைத் தூக்குனாரு. தன்னோட திறமையின்மை, உலகப் பொருளாதாரம், இந்திய சோசலிசம் எல்லாம் சேந்து வாராக்கடனாச்சு. பதவில இருந்த வரை அனுபவிச்சாச்சு. இது புரியாம, பி.ஜே.பி சொம்புகள் ஆடுனா என்ன செய்யமுடியும்? சொம்புங்க போய் மோடிஜீ யிடம் பெட்ரோல் விலைய குறைக்கச் சொல்லுங்க.

 • Sivagiri - chennai,இந்தியா

  துக்ளக் சோ சொர்க்கத்தில் இருந்து எழுதுவது :- குஜராத்தில் மோடி முதலமைச்சராக இருக்கும் போதே பின்னாளில் தான் பிரதமராக வரும் போது பழி வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஏதோ சதி செய்து மத்திய காங்கிரஸ் கம்பெனி அரசை ஊழல் செய்யவும் - வங்கிகள் செயல்பட முடியாதவாறும் ஏதோ மோடிமஸ்தான் வேலை செய்து விட்டார் . . . எனவே ஊழலுக்கும் வங்கிகள் கடனுக்கும் காங்கிரஸ் கம்பெனி அரசு பொறுப்பாக முடியாது . . . சொல்லப் போனால் அவை எல்லாம் கடனே அல்ல . . . அனைத்துமே நாட்டு நலனுக்காக வங்கிகள் மூலமாக காங்கிரஸ் செய்த தர்ம காரியம் ஆகும் . . . ( ஆ ராசா 2 -ஜி யில் சொன்னது போல ) . . .

 • Amaidhi maargam - Vivekananda nagar,ஆப்கானிஸ்தான்

  Rizwan maatheen Narayan Muthu Mani v Singapore jaigindupuram aapu matrum pugahzh Petra sombugal engirundhaalum medaikku varavum

 • Shan - kuwait,குவைத்

  60 வருஷம் நாட்டை ஆண்டு குட்டிச்சுவர் ஆகிட்டானுங்க இந்த காங்கிரெஸ்க்காரர்கள்.அனால் அவனுங்க மட்டும் 10 தலைமுறைக்கு கொள்ளை அடிச்சு சொத்து சேர்த்துவச்சிட்டானுங்க.

 • Sudarsanr - Muscat,ஓமன்

  நேத்து ஒருத்தர் நகைச்சுவையை பத்தி பேசினார்... அந்த உத்தமர் எங்கப்பா... அவர்தானே அப்போ நிதி அமைச்சரை இருந்தாரு..

 • சூரிய புத்திரன் - வெள்ளைக்காரன் பட்டி , கிர்கிஸ்தான் , ,கிரிகிஸ்தான்

  // வங்கிகளின் வராகடன் அதிகரிப்புக்கு, தகுதி இல்லாத, ஊழல் மலிந்த வங்கிகளும், காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஊழல்களும் தான் காரணம் என, ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.// எஇதற்கு என்ன பதில் மண்ணு ஜிங்கு, வியாபாாி பா.சி, மற்றும் கான்கிராஸ் சொம்புகள், திருட்டு தீராவிட கொத்தடிமைகள்.

 • San - Madurai ,இந்தியா

  Modi rightly said that loan given to 12 highly defaulters by UPA and shame on the opposition

 • நாஞ்சில் நாடோடி - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  இதற்கெல்லாம் காரணம் சிதம்பரத்தின் சதி. மல்லையாவையும், நிரவ் மோடி போன்றவர்க்குக்கு கடன் கொடுத்து வங்கிகளை சீரழித்தது காங்கிரஸ் கட்சி. நாட்டில் அழித்து ஒழிக்கப்பட வேண்டியது ஊழலை மட்டும் அல்ல காங்கிரஸ் கட்சி யையும் சேர்த்துதான் ...

 • Balasubramaniam - Tirupur,இந்தியா

  . 50 கோடிக்கும் மேல் உள்ள அனைத்து கடன்களை மீட்பது எளிது. 2006இல் கொடுத்த அடமான சொத்துக்கள் இன்று பல மடங்கு ஏறி உள்ளது. எனவே பறிமுதல் செய்து விற்றால் போதும். தேவை விவசாய மற்றும் சோறு தொழில் கடன் சலுகைகள். பெரும் பணக்கார தொழில் கடன் கடுமை.

 • S VENKATESAN - MADURAI,இந்தியா

  இப்போ கல்லா பெட்டி சிங்காரமும், பாகுல் பூந்தியும் இந்த குற்றச்சாட்டுக்கு ஆதாரத்துடன் விளக்கம் அளிப்பார்களா?

 • Sudarsanr - Muscat,ஓமன்

  உண்மையை சொல்லி இருக்கிறார். இங்கு பல வாசகர்கள் ஏற்கனவே கூறி உள்ளதை அப்படியே திரு. ராஜன் அவர்கள் சொல்லி உள்ளார்கள். அனால் இங்கு விஷத்தை கக்கும் சில அறிவுஜீவிகள் இதற்கும் பிஜேபியை திட்டுவார்கள்.... கான் + கிராஸ் அரசின் செயல்படாத தன்மை, கடன் வசூலில் காட்டிய மெத்தனம் ஆகியவையே இதற்கு காரணம்.. இந்த ஆட்சியில் அதை வசூல் செய்ய ஆரம்பித்தவுடன் சிலர் வெளிநாட்டிற்கு தப்பி விட்டனர்... இதுதான் உண்மை. சரி. நண்பர்களே வருக... வந்து பிஜேபி மற்றும் மோடி அவர்களை திட்டி உங்கள் காயத்திற்கு மருந்து போட்டுக்கொள்ளவும்... ஆனால் உண்மை எப்போதுமே கசக்கும்... இப்பொழுது நாட்டிற்க்கு அறுவை சிகிச்சை தேவை அடுத்த ஆண்டு தேர்தல் ஆண்டு அதை மனதில் கொள்ளாமல்... நாட்டு நலன் மட்டுமே அக்கறை கொண்டு செயல்படும் பிஜேபி மீண்டும் வெல்ல வேண்டும். மக்களே எதிர்காலத்தை நினைத்து பார்த்து வரும் தேர்தலில் வாக்களியுங்கள்... நல்ல ஊழல் இல்லாத அரசு அமைய வேண்டும்..

 • N.Purushothaman - Kuala Lumpur ,மலேஷியா

  இந்த செய்தி நேற்றே வெளியாகிவிட்டது .,.நிதி ஆயோக் அமைப்பின் துணை தலைவர் திரு ராஜீவ் குமார் கூறியது உண்மை என்பது நிரூபிக்கப்பட்டு உள்ளது ...ஆனா ஒன்னு ...உண்மையான தேச சேவகன் மோடிஜி என்கிற நல்ல ஆத்மாவை எந்த அளவிற்கு காயப்படுத்த முடியுமோ அந்த அளவிற்கு அதை செய்து கொண்டு இருக்கிறார்கள் ....எதிர்ப்பாளர்கள் நிதானத்துடன் இருப்பது நல்லது ....

 • Srikanth Tamizanda.. - Bangalore,இந்தியா

  ஒரு வழியாக தன் கையாலாகா தனத்தையும், கை கட்சி மௌன மோகன் மற்றும் இத்தாலிய மாஃபியா செய்த ஊழல்களும் காரணம் என்று சொல்லி விட்டார்...இனி போலி காந்தி குடும்ப அடிவருடிகளும், இவர்கள் சொம்புகளும் இவரை கழவி ஊத்துவார்களா??

 • பாரதன். - ,

  இப்போ தெரிகிறதா... காங்கிரஸ் ஆட்சி தான் காரணம் என்று. காங்கிரஸ் கட்சியால் நியமிக்கப்பட்ட ரிசர்வ்வங்கி கவர்னரே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். இவர்கள் கொடுத்த கடனை வசூலிக்கும் கடினமான பணியைத்தான் பிஜெபி ஆட்சி செய்து வருகிறது.

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  திராவிடம், சிறுபான்மை பேசிய அரசியல்வாதிகள் மற்றும் அவர்களது அடிமைகள் முகத்தில் கருப்பு பெயிண்ட் அடித்துவிட்டார் ரகுராம் ..... இது வரை இவரைப் புகழ்ந்து வந்த திராவிட, சிறுபான்மை அரசியல்வாதிகளின் எடுபிடிகள் இனி இவரது வகுப்பு குறித்து கேலி பேசுவார்கள் ..... பாஜக -வின் அடிவருடியாக ஆகிவிட்டார் என்பார்கள் ....

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கையாலாகாதனத்தை அவர்கள் மெச்சிய ரகுராம் ராஜனே சொல்லிவிட்டார். இனியென்ன கிளம்புங்கள் இத்தாலிக்கு.

 • Sivak - Chennai,இந்தியா

  காங்கிரஸ் சொம்புகள் எங்கு ஒளிந்து கொண்டிருந்தாலும் வெளியில் வரவும் ... வந்து பதில் சொல்லவும் ....

 • vidhya - mumbai,இந்தியா

  இதற்கும் இங்கு வந்து ஒரு பத்து பேர் மோடியை குற்றம் சாட்டுவார்கள்

 • Prakash Elumalai - Edison, NJ,யூ.எஸ்.ஏ

  எங்கே என் அருமை டுபாகூர் போராளீஸ் மற்றும் மோடியை மட்டும் திட்டும் கூட்டம் ?? இப்போ பூனைக்குட்டி வெளிய வந்துடிச்சி ..இப்போ காட்டுங்கள் உங்கள் மோடி எதிர்ப்பை

 • Anand - chennai,இந்தியா

  இவரது கூற்றின்படி, 2006 முதல் காங்கிரஸ் ஆட்சியில் மாபியாக்கள் ராஜ்ஜியம் தான் நடந்துள்ளது. தற்போதய அரசுதான் நடவடிக்கை எடுத்து ஒவ்வொன்றாக வெளி கொண்டுவருகிறது. ஆதாலால் தான் மோடி அரசுக்கு குறிப்பாக மோடி என்கிற ஒருவருக்கு எவ்வளவு தனிமனித தாக்குதல்கள் தொடுக்க முடியுமோ அவ்வளவும் தொடுக்கிறார்கள் இந்த கயவர்கள். இந்தியாவிற்கு மோடியால் கண்டிப்பாக விமோசனம் கிடைக்கும். காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டுகளவாணிகள் விரைவில் அழிவார்கள். ஜெய் ஹிந்த்

 • ஆலயம்.எஸ்.ராஜா ஹிந்துஸ்தானத்தின் சேவகன் - ERODE,இந்தியா

  இதுக்கெல்லாம் மோடி போபியாக்கள் குரல் கொடுக்க மாட்டார்கள்..... காரணம் செலக்டிவ் அம்னீசியா.... உங்கள் பிரச்னை நாட்டு நலன் அல்ல.. மோடியே என்பது நன்கு புலப்படுகின்றது.... இந்த பசி அப்படின்னு அறிவு ஜீவி சுத்திகிட்டு இருந்திச்சே...யாராவது பார்த்தீங்களா....

 • சுப்பையா, கருப்பட்டி வியாபாரம். - முடிவைத்தானேந்தல் ,இந்தியா

  தரமான சம்பவம் நடந்திருக்கு .... திமுக, காங்கிரஸ் சொம்பு தூக்கிகள் எங்கிருந்தாலும் வரவும்....

 • Raju Ramasamy - Tirupur,இந்தியா

  ஆக பாதிப்பு மக்களுக்குதானே தவிர காங்கிரசுக்கு அல்லவே. தக்க தண்டனை மக்கள் தான் குடுக்க வேண்டும்.

 • C.Elumalai - Chennai,இந்தியா

  உயர்ந்தநோக்கத்தில் அன்னை இந்திரா, வங்கிகளை நாட்டுமையாக்கினார். சோனியாவலையில் இந்தியா சிக்கியதும் வங்கிகள் சுரண்டல் லாட்டரியாகி விட்டது.

 • San - Madurai ,இந்தியா

  What Modi said loan given in UPA on 12 defaulters is correct now and ashame on Chidambaram and Manmohan

 • Vaideeswaran Subbarathinam - Bangalore,இந்தியா

  The cat is out of the bag now.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement