Advertisement

உறவு மேம்பட பாக்.,கிற்கு அமெரிக்கா நிபந்தனை

வாஷிங்டன்: பயங்கரவாதிகள் மீது எடுக்கும் நடவடிக்கைகளை பொறுத்தே பாகிஸ்தானுடனான உறவு மேம்படும் என அமெரிக்கா கூறியுள்ளது.

பேச்சளவில் கூடாதுஇது தொடர்பாக தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான முதன்மை துணை செயலர் ஆலிஸ் வெல் கூறுகையில், ஆப்கனில் ஸ்திரத்தன்மை ஏற்பட பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட அமெரிக்கா விரும்புகிறது. பயங்கரவாதிகளுக்கு ஆதரவு தருவதையும், தனது மண்ணில் பயங்கரவாதிகள் செயல்படுவதை தடுத்து நிறுத்த பாகிஸ்தான் எடுக்கும் நடவடிக்கைகளை பொறுத்தே இரு நாடுகளுக்கு இடையிலான உறவு மேம்படும். பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை வெறும் பேச்சளவில் மட்டுமல்லாமல், அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகள் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையிலும், புரிந்து கொள்ளக்கூடிய வகையிலும் இருக்க வேண்டும்.

பேச்சுவார்த்தைஇந்தியா, அமெரிக்கா பாதுகாப்பு அமைச்சர்கள் இடையில் பேச்சுவார்த்தை நடந்த போது, ரஷ்யாவுடனான, அந்நாட்டின் நட்பை நாங்கள் புரிந்து கொண்டோம். ரஷ்யாவிடம் இந்தியா ஆயுதம் வாங்குவது குறித்தும் பேச்சுவார்த்தை நடந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (11)

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  நாங்கள் மீண்டும் உங்களுடன் வியாபார உத்தரவாதம் வைத்துக்கொள்வோம், தம்பி தம்பி ஒண்ணும் நெனச்சிக்க வேணாம், தயவு செய்து ஒரு அறிக்கை விடுங்கள் நாங்கள் தீவிரவாதத்திற்கு எதிரானவர்கள் என்று அது போதும் என்று அமெரிக்க கெஞ்சுவது போல இருக்கின்றது இது.

 • ArulKrish -

  this way they will loose their loyal customers.

 • Arasu - Ballary,இந்தியா

  the best way to beat pakistan is beat them below the belt. need to stop all the source of funds availability. they will fall in line.

 • Needhiyin Pakkam Nil - Chennai,இந்தியா

  நல்ல மூளை சலவை செய்றீங்க, உங்களை புறக்கணித்துவிட்டு பாகிஸ்தான் ரஷ்யாவுடன் நட்பை உருவாக்க போகிறது என்று தெரிந்தவுடன் வழிய பாகிஸ்தானுக்கு போய் தடுத்தீங்க, இப்போ தீவிரவாதிகளை ஒழித்தால் தான் பாகிஸ்தானுக்கு உதவுவோம் என்று உங்கள் மீடியா பவரை வைத்து உலக மக்களின் மூளையை சலவை செய்கிறீர்களா, நாங்களும் நம்பிட்டோம்...

 • chails ahamad - doha,கத்தார்

  உறவு மேம்பட என்பதின் பொருள் அமெரிக்கா அகராதியின்படி ஆயுத வியாபாரம் மேம்பட , பாகிஸ்தான் தனது அண்டை நாடுகளுடன் யுத்தங்கள் தொடங்கிட , பயங்கரவாதிகள் ஒழிப்பு என்ற பெயரிலே உலகை அடக்கியாள எண்ணுவது போன்றவைகள் அமெரிக்காவின் தந்திரங்களில் ஒன்று என்பதை முந்தைய கால வரலாறுகளில் நாம் அறிந்த உண்மையாகும் . இருப்பினும் நமது பிராந்தியத்தில் ஆட்சி செய்பவர்கள் எவராக இருப்பினும் , எந்த நிலையிலும் பயங்கரவாதிகளுக்கு , நாட்டில் குழப்பம் விளைவிப்பவர்களுக்கு , நம்மிள் பிரச்சனையை துவக்க தூபம் போடுகின்ற அந்நிய நாட்டவர்களுக்கு வாய்ப்பளிக்காது , மக்கள் நலன் போற்றும் ஆட்சியை நடத்திடுவது என்பதே வரலாறில் பெருமைக்கு உரிய சிறப்புமிகு ஆட்சியாக இருந்திடும் என்பது உறுதியாகும்

 • Anand - chennai,இந்தியா

  //பயங்கரவாதிகள் மீது எடுக்கும் நடவடிக்கைகளை// இது நடக்கிற காரியமா? திருடனை காவலுக்கு வைக்கலாமா?

 • புதிய தமிழ்மைந்தன் - Dindigul India,இந்தியா

  விஷம் வாங்கும் உங்கிட்ட எப்படி பால் வாங்க முடியும்

 • Modikumar - Auckland CBD,நியூ சிலாந்து

  நம் பிரதமர் மோடி பலுசிஸ்தானைப்பற்றி உள்ள எதிர்கால திட்டங்கள் ...காஷ்மீர் விடுதலைக்கு காவடிதூக்கும் உள்ளூர் துரோகிகளுக்கு பெரியபதட்டமே வந்துவிட்டது...அதெப்படி மற்ற நாட்டின் விவகாரத்தில் தலையிடலாம் என அரவிந்த் கெஜ்ரிவால், திக்விஜய்சிங் போன்றோருக்கு தங்கள் வாக்குவங்கி விசுவாசத்தை பொங்க செய்தனர்... ஆனால் அதற்கு பின் பெரிய அரசியலே இருப்பது இந்த தெரிய வாய்ப்பில்லை... அதை மோடி நன்றாகவே அறிந்துள்ளார் ‪‎இனி_கேம்_ஸ்டார்ட்‬ நேரம் பார்த்து காத்திருந்தார் மோடி...அதை எதிர்பார்த்து காத்திருந்தது அமெரிக்கா...பலுசிஸ்தான் பிரச்சனை கிட்டதட்ட காஷ்மீர் பிரச்சனை மாதிரிதான். பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் நடுவில் உள்ளது .. எட்டும் தொலைவில் ஈரான்உள்ளது. அதனால் ஈரானில் மாதிரியே இங்கும் ஷியாமுஸ்லிம்கள் அதிகமாக உள்ளனர். காஷ்மீர் மாதிரியே மன்னராட்சி நடந்து வந்த பலுசிஸ்தான் 1947 ல்ஆகஸ்டு மாதம் 11 ம் தேதி ஆங்கிலேய ரிடமிருந்துவிடுதலை பெற்றது. காஷ்மீர் மாதிரியே பலுசிஸ்தானும் இந்தியாவுடனே இணைய விரும்பியது. பலுசிஸ்தானைஆண்டு வந்த அகமத்யா கான் என்கிற ராஜா நம்ம காஷ்மீர் ராஜா ஹரிசிங் மாதிரி இந்தியாவுடன் இணைய வே விரும்பினார். பாகிஸ்தான் காட்டு மிராண்டி களின் சங்காத்தமே எங்களுக்கு வேண்டாம், இந்தியாவில் இணைகிறோம் என்று நேருவுக்கு கடிதம் எழுதினார் ஆனால் நமது நேரு மறுத்து விடடார். நீங்கள் பாகிஸ்தானுடன் இருப்பது தான் நல்லது என்று சொல்லி உலகில் தான் பெரிய சமாதான புறா என்று காட்டி கொண்டார். பலுசிஸ்தானுக்கு அமெரிக்கா ஆதரவு உள்ளது ஏன் தெரியுமா ? இதற்கு பின்னால் இருக்கும் அரசியல் மிக தெளிவானது... பலுசிஸ்தான் மாநிலத்தில் குவாடர் துறைமுகம் உள்ளது. இந்த குவாடர் துறைமுகம் தற்பொழுது சீனாவின் கஸ்டடியில் உள்ளது. இதற்கு பலுசி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஒரு வேளை பலூசிஸ்தான் தனி நாடு கோரிக்கையை உலக நாடுகள் ஏற்று கொண்டால் அதன் பாதிப்பு பாகிஸ்தானை விட சீனாவுக்கு தான் அதிகம். பலுசிஸ்தான் மாகாணத்தை தனி நாடாக்கினால் வளைகுடா நாடுகளிலிருந்து பலுசிஸ்தான் வழியாக சீனாவுக்கு எண்ணெய் எடுத்துச் செல்லப்படுவது சிக்கலாகி விடும். பலுசிஸ்தானை சுற்றி சீனா பின்னியுள்ள வர்த்தக ரீதியிலான திட்டங்கள் அம்போவாகி விடும். இதனால் சீனா தன் 30% பொருளாதாரத்தை இழந்து விடும் அபாயம் உள்ளது.... வல்லரசு போட்டியில் பாய்ந்து செல்லும் சீனாவை தட்டி விட அமெரிக்காவும் நேரம் பார்த்து கொண்டு இருந்தது. இந்நிலையில் மோடி ஆட்சிக்கு வந்தார். பாகிஸ்தானும், சீனாவும் மற்ற ஆட்சியாளர்கள் போல் இந்தியாவுக்கு குடைச்சல் கொடுத்து கொண்டு இருந்தது. நேரம் பார்த்து காத்திருந்தார் மோடி இந்நிலையில் பலுசிஸ்தான் பிரச்சனையை உலக அரங்கில் கொண்டு போவதாக கூறினார். இதைத் தான் அமெரிக்கா எதிர்பார்த்தது. பாக்கிஸ்தான் அலறியது, அலருகிறது. ஏனென்றால் இந்த மாகாணத்தை வைத்து தான் சீனா பாகிஸ்தானுக்கு உதவி செய்கிறது. இது தனி நாடானால் சீன பொருளாதாரம் மிகவும் பின் தங்கி விடும். பாகிஸ்தானுக்கு கடுகளவும் உதவி கிடைக்காது ... இந்த ராஜ தந்திரத்தை மோடி வேகமாக முன்னெடுக்க ஆரம்பித்து விட்டார். அமெரிக்கா இதற்கு பின்பலமாக தீவிரமாக செயல் படுகிறது. நேரு தட்டிவிட்ட பலுசிஸ்தானை மோடி மட்டும் விரும்புகிறார் என்றால் அதற்குள் ஆயிரம் அரசியல் காரணங்கள் உள்ளது. அன்று மட்டும் நேரு பலுசிஸ்தானை நம்முடன் இணைத்து இருந்தால் இன்று சீனா அடையும் 30% லாபம் இந்தியா அடைந்திருக்கும். இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து விரைவில் பலுசிஸ்தானை தனி நாடாக அங்கீகரிக்கும் என்பதில் ஐயம் இல்லை. அப்போது பலுசிஸ்தான் இந்தியாவின் நட்பு நாடாகி விடும். அது ஆசியாவில் இந்தியாவின் ஆதிக்கம் அதிகரிக்க வழி வகுக்கும். மோடி அவர்களை பிரதமராக அடைந்தமைக்கு இந்தியர் ஒவ்வொருவரும் பெருமை கொள்வோம்.

 • Muruga Vel - Chennai,இந்தியா

  ...நிமுத்த முடியாது

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement