Advertisement

ஓடும் பஸ்சில் தீ: தப்பிய பயணிகள்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் இருந்து, விழுப்புரத்துக்கு, நேற்று காலை, 7:30 மணிக்கு, அரசு விரைவு பஸ் ஒன்று, 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்டு சென்றது. திருவண்ணாமலை அடுத்த, வேட்டவலம் கடை வீதியில் சென்று கொண்டிருந்தபோது, பஸ்சின் டீசல் டேங்க்கில் இருந்து கசிவு ஏற்பட்டு, தீப்பற்றியது. பஸ் நிறுத்தப்பட்டு, டிரைவர், கண்டக்டர் உட்பட அனைத்து பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர். வேட்டவலம் தீயணைப்புத் துறையினர், தீயை அணைத்தனர். 30க்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement