Advertisement

பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைக்க முடியாது - மத்திய அரசு திட்டவட்டம்

புதுடில்லி: பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைக்க முடியாது எனமத்திய அரசு மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.


அதிகரிப்புபெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.84.05 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.77.13 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (செப்.,11) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. நேற்றைய விலையிலிருந்து பெட்ரோல் 14 காசுகளும், டீசல் 15 காசுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.


கோரிக்கைமத்திய அரசு, பெட்ரோல் மீது லிட்டருக்கு ரூ.19.48 வீதம் உற்பத்தி வரியும், டீசல் மீது லிட்டருக்கு ரூ.15.33 வீதம் உற்பத்தி வரி வசூலிக்கிறது. இதுதவிர, மாநில அரசுகள் 'வாட்' எனப்படும் மதிப்பு கூட்டு வரியை வசூலிக்கின்றன.பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடப்பட்டு வருகிறது.இதை மத்திய அரசு திட்டவட்டமாக நிராகரித்து விட்டது.

சரியான தீர்வு அல்லஇது தொடர்பாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறியது, பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை ஒரு ரூபாய் குறைத்தால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும். நிதி பற்றாக்குறை அதிகரிக்கும். பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வருவதும் சரியான தீர்வு அல்ல. நிதி நிலைமை வலிமை அடைந்தால் மட்டுமே வரி குறைப்பு செய்ய முடியும். அதற்கு வருமான வரி, ஜி.எஸ்.டி. செலுத்துவோர் எண்ணிக்கை உயர வேண்டும்.

சலுகைமத்திய அரசு ஏற்கனவே ரூ.98 ஆயிரம் கோடிக்கு வருமான வரி சலுகையும், ரூ.80 ஆயிரம் கோடிக்கு ஜி.எஸ்.டி. குறைப்பும் அளித்துள்ளது பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்ந்தபோதிலும், பணவீக்கம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. பெட்ரோலிய பொருட்கள் மீது மாநில அரசுகள் 'வாட்' வரி விதிக்கின்றன. அத்துடன், மத்திய அரசின் வரி வருவாயில் 42 சதவீதம் பங்கைப் பெறுகின்றன. இருந்தாலும், மாநில அரசுகளும் 'வாட்' வரியை குறைக்கும் நிலைமையில் இல்லை. இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (60)

 • Snake Babu - Salem,இந்தியா

  எந்த கட்சியும் மக்களை காப்பாற்ற இயலாது. பல வருடங்களாக தொழிலுக்காக அரசியலுக்கு வந்தவர்கள் அரசியலால் சாம்பாதித்த பணத்தில் தொழில் தொடங்கியர்வர்கள் தான் கட்சியில் இருக்கிறார்கள். இவர்கள் எப்படி மக்கள் பணி ஆற்றுவார்கள் என்று நினைத்து ஒட்டு போடுகிறீர்கள். வரும் தேர்தல்களில் உங்களில் ஒருவரை உங்க ஊரில் தேர்ந்து எடுங்கள், சுயேச்சை வேட்பாளர்களாக தேர்ந்து எடுத்து பாராளுமன்றம் சட்டமன்றத்துக்கு அனுப்புங்கள்,அவர்கள் தான் ஒரு முதல் மந்திரி, பிரதமரை தேர்ந்து எடுக்க முக்கிய காரணமாக இருக்க வேண்டும், அப்போதுதான் இந்தியா வளரும். அருமை நன்றி வாழ்க வளமுடன்

 • r.sundaram - tirunelveli,இந்தியா

  நீங்கள் வரியை குறைக்கிறீர்களா இல்லையா என்பது அல்ல பிரச்சனை. ஆனால் பெட்ரோல், டீசல் விலை குறைய வேண்டும் என்பதே பிரச்சனை. இல்லை குறையாவிட்டால், உங்களுக்கு விழும் ஓட்டு குறையும் என்பதை செய்யவும்.

 • THANGARAJ - CHENNAI,இந்தியா

  பெட்ரோல் / டீசல் விலை குறைப்பதும், ஏற்றுவதும் , எங்கள் (மத்திய அரசு) கட்டுப்பாட்டில் இல்லை. இருந்தாலும், பெட்ரோலிய அமைச்சகத்தை நிர்வகிப்பது நாங்கள் தான்..... ஹாய் ஹாய் ஹாய்

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  What's my wonder is: Those who can afford the price hike, can simply carry on. Why they are abusing those who cry against price hike? What are they trying to prove or justify?

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  /வங்கிகளில் கடன் பெற்று கார் மற்றும் இரு சக்கர வாஹனங்கள் வாங்கியுள்ள மக்களே அவைகளை திரும்ப வங்கிகளிடமே ஒப்படைத்தால் நிம்மதியான வாழ்க்கையை வாழலாம் / வங்கியில் கடன் வாங்கி வண்டி வாங்கி டாக்ஸியாக ஓட்டி வாழ்க்கை நடத்துபவர்கள் வண்டியை திருப்பி கொடுத்துட்டு....சாப்பாட்டுக்கு என்ன செய்ய?? ஸ்கூல் பஸ் சார்ஜை விட பைக்கில் பசங்களை கொண்டு விடுவது சீப். அவர்கள் என்ன செய்ய?? வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோன்னு எதையாவது எழுதுவதா?

 • பாமரன் - நம்மூர்தான்,இந்தியா

  .. இந்த வருமானம் குறைவுங்கறது நஷ்ட்டமுன்னு பொருளில்லை.. ஏன்னா 2014 ம் நிதியாண்டில் பெட்ரோலிய பொருட்கள் மூலம் வந்த வரி வருமானம் 120000 கோடி. அதே நடப்பு நிதியாண்டில் 280000 கோடியா அதிகரிச்சிருக்கு. அதாவது சராசரியா போட்டால் கடந்த நான்கு ஆண்டுகளில் மொத்தமா பெட்ரோலிய பொருட்கள் மூலம் மட்டுமே எகிறிய வரி வருமானம் ஆறு லட்சம் கோடிகளுக்கு மேல். இந்த கொள்ளை வருமானத்தில்தான் கொஞ்சம் குறைக்க சொல்லுது. சரி ... இந்த ஆறு லட்சம் கோடி வருமானம் 2014 ம் ஆண்டுக்கு முன்பு இல்லாத ஒன்று. இதன்மூலம் நாட்டுக்கு / நாட்டு மக்களுக்கு என்ன நன்மை ஏற்பட்டுதுன்னாவது சொல்ல முடியுமா??? நாங்க ஒன்னும் 2014 க்கு முன் பிச்சை எடுத்துக்கிட்டு இல்லை... இப்போ இருக்கும் அதே / அதைவிட பெட்டரான வாழ்க்கைதான் வாழ்ந்துகிட்டு இருக்கோம்...

 • vbs manian - hyderabad,இந்தியா

  மக்களின் பெட்ரோல் வாகன மோகம் குறைய வேண்டும்..பக்கத்துக்கு தெருவுக்கு போக கூட ஸ்கூட்டர் மோட்டார் சைக்கிள் வேண்டும்.சைக்கிள் உபயோகம் குறைத்து விட்டது. உடல் ஆரோக்கியமும் போய் விட்டது..பெட்ரோல் வரியிலிருந்துதான் மத்திய மாநில அரசுகள் இலவசங்களை வாரி வழங்குகின்றன. இந்த வரி குறைந்தால் இலவசங்கள் மானியம் ஆகியவை மாயமாகும். இது போராட்ட பித்துகளுக்கும் தெரியும்.ஏற்கனவே உள்ள கடன் சுமையே விழி பிதுங்குகிறது.

 • ramu narayanan - Sydney,ஆஸ்திரேலியா

  2012 வருடம் மோடி காங்கிரசை பெட்ரோல் விலை ஏற்றத்திற்கு கடுமையாக குறைகூறினீர் மற்றும் வெளியேற சொன்னீர். இப்போ எங்க மண் கி பாத் காணோம்? பா ஜ க அறிவாளிகள் எங்கே போனீர்கள் ? சூப்பர் ஸ்டார்டிடம் தொகுதி பங்கீடா அல்லது எந்த கட்சியை உடைக்கனுமுன்னு கூஜா சாமியிடம் ஆலோசனையா ?

 • Power Punch - nagarkoil,இந்தியா

  அதானே..நாங்க குறைத்தால்..அப்புறம் அம்பானியும் Relience பெட்ரோல் விலையை குறைக்க வேண்டும்..அதனால் நாங்கள் விலையை குறைக்க மாட்டோம்..

 • Sakthi Vel - chennai,இந்தியா

  முள்ளை முள்ளால்எடுப்பது போல,தினம்தோறும் பேருந்து,ரயில் விமானம் கட்டணம் கட்டணம் பெட்ரோல் டீசல் விலையை போல் மாறவேண்டும்,அதனால் வலி அனைவருக்கும் ஏற்படும்,இதற்கு தீர்வு ஏற்படும்.

 • Sivaprakasam Manickam - Chennai,இந்தியா

  வங்கிகளில் கடன் பெற்று கார் மற்றும் இரு சக்கர வாஹனங்கள் வாங்கியுள்ள மக்களே அவைகளை திரும்ப வங்கிகளிடமே ஒப்படைத்தால் நிம்மதியான வாழ்க்கையை வாழலாம் அனாவசியமாக பெட்ரோல் டீசல் விலை உயர்வை குறித்து போராட வேண்டியதில்லை.2008 ல் அமெரிக்காவில் வங்கிகள் திவாலான கதை வீடு வாங்க வீடு கட்ட கடன் வாங்கிய அனைவருமே ஒரு கட்டத்தில் தங்கள் வீடுகளை திரும்ப ஒப்படைத்துவிட்டார்கள்அவர்களால் கடனை திருப்ப செலுத்த முடியவில்லை.

 • Viswanathan - karaikudi,இந்தியா

  அரசுக்கு வருமானம் வேண்டும் என்றால், பார்க்கிங் இடம் இல்லாமல் நாடு முழுதும் அனைத்து நகரங்களிலும், கிராமங்களிலும் , சாலைகளை அடைத்து கொண்டு நிறுத்தி வைக்க படும் வாகனங்களுக்கு மாதம் 3000 ரூபாய் வரை வரி வசூல் செய்யலாமே. பெட்ரோல் , டீசல் விலையை குறைக்கலாமே

 • A.Robet - chennai,இந்தியா

  வரியை குறைப்பதால் மக்களுக்கு கிடைக்கும் பயனை அரசு தன்வசமே வைத்துக்கொள்ள விரும்புகிறது

 • chails ahamad - doha,கத்தார்

  மக்கள் நலன் விரும்பும் ஆட்சியாளர்களால் மட்டுமே வரி குறைப்பு பற்றி சிந்திக்க முடியும், தற்போது நடைபெறுவதோ மக்கள் விரோத ஆட்சிகள் என்பதால், மக்களை வதைப்பதே முதன்மையான பணியாக சிந்தையில் கொண்டு ஆணவ ஆட்சியை அதிகார மமதையில் செயல்படுத்தி கொண்டுதான் இருப்பார்கள் என்பதே நிதர்சன உண்மையாகும், இவர்களது அட்டூழியங்கள் ஒழிந்திட மக்களனைவரும் ஒன்றுபட்டு வரும் தேர்தலில் பா ஜ வுக்கு இறுதி யாத்திரை நடத்திடுவதாக முடிவு செய்துள்ளது மனதுக்கு நிறைவாக உள்ளது .

 • Kumar - Tbilisi,தெற்கு ஜார்ஜியா

  We will put our vote against BJP in 2019 election. After that we will erase BJP from India.

 • sam - Doha,கத்தார்

  இப்படி தான் மக்களை வதைக்க வைத்து கார்பொரேட் இக்கு உதவி செய்ய வேண்டியிருந்தால் , மக்களுக்கு எதற்கு அரசாங்கம். அதையும் corpotate மேனேஜ் செய்யலாம்.

 • Krishnan (Sarvam Krishnaarpanam....) - Chennai,இந்தியா

  பிஜேபியை எதிர்க்கும் அத்தனை பேரும் பெட்ரோல் டீசலை புறக்கணித்து மின்சார அடுப்புகள் மற்றும் மின்சார வாகனங்கள் வாங்குங்கள். அது தான் இவர்களுக்கு சரியான பாடமாக இருக்கும். வெறும் கண்டனம் தெரிவிப்பதால் எந்த பலனும் இல்லை.

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  எல்லாக்கட்சியும் வாக்குவங்கிக்காக போலியாகவாவது போராட்டம்  நடத்துகின்றன. ஆனால் வாக்குவங்கியைப் பற்றி கவலைப்படாமல் நாட்டின் நீண்டகால வளர்ச்சியைப் பற்றிமட்டும் நினைத்து வரியைக்  குறைக்கமாட்டோம் என சொல்லவே தைரியம் வேண்டும். போலித்தனமாக வளைந்துகொடுக்காததற்கு பாராட்டுக்கள்.

 • Rajesh - Chennai,இந்தியா

  உலக சந்தையில் கச்சா எண்ணை விலை குறைந்த பொழுது இந்தியா அரசாங்கம் குறைக்காமல் லாபத்தை அனுபவிக்கும் பொழுது மக்கள் சும்மா இருந்து விட்டு இப்பொழுது விலை ஏறும் பொழுது அதை நாம் அனுபவித்து தான் ஆகா வேண்டும்

 • Visu Iyer - chennai,இந்தியா

  தேர்தல் வருகிறது.. பெட்ரோல் கூப்பன் தந்து வாக்கு சேகரிக்க போறாங்க..

 • Visu Iyer - chennai,இந்தியா

  4 சக்கர வண்டிக்கு பெட்ரோல் விலை குறைவாகவும்.. 2 சக்கர வண்டிகளுக்கு பெட்ரோல் விலை அதிகமாவும் வைத்தால் இதனை சரி செய்ய முடியும்... காரணம் பெரிய வண்டி அதிகமாக பெட்ரோல் குடிக்கும். சின்ன வண்டி குறைவாக பெட்ரோல் குடிக்கும் இல்லையா

 • Visu Iyer - chennai,இந்தியா

  500ரூபாய் ஒரு லிட்டர் என்று சொன்னாலும் வாங்க தயார்.. விலையை உயர்வை பற்றி கவலை இல்லை.. விலை 500 வந்ததும் மக்கள் வாங்குவார்கள்.. அப்போ தான் நாம் வளர்ந்து இருக்கிறோம் என்று பொருள்..

 • துயில் விரும்பி - coimbatore,இந்தியா

  எந்த கட்சியும் மக்களை காப்பாற்ற இயலாது. பல வருடங்களாக தொழிலுக்காக அரசியலுக்கு வந்தவர்கள் அரசியலால் சாம்பாதித்த பணத்தில் தொழில் தொடங்கியர்வர்கள் தான் கட்சியில் இருக்கிறார்கள். இவர்கள் எப்படி மக்கள் பணி ஆற்றுவார்கள் என்று நினைத்து ஒட்டு போடுகிறீர்கள். வரும் தேர்தல்களில் உங்களில் ஒருவரை உங்க ஊரில் தேர்ந்து எடுங்கள், சுயேச்சை வேட்பாளர்களாக தேர்ந்து எடுத்து பாராளுமன்றம் சட்டமன்றத்துக்கு அனுப்புங்கள்,அவர்கள் தான் ஒரு முதல் மந்திரி, பிரதமரை தேர்ந்து எடுக்க முக்கிய காரணமாக இருக்க வேண்டும், அப்போதுதான் இந்தியா வளரும்.

 • Raj - Chennai,இந்தியா

  மத்திய மாநில அரசு ஊழியர்களின் சம்பளம், பென்ஷன் மற்ற உபயோகமற்ற ஆடம்பர செலவுகளை சமாளிக்க மத்திய மாநில அரசுகளுக்கு நிதி தேவை அது மட்டும் முன் தேதியிட்ட ஊதிய உயர்வு அதும் 100 % மேலாக இதை எல்லாம் விட்டு குடுக்க அவர்களுக்கு மனது வராது,

 • ramesh - chennai,இந்தியா

  பிஜேபி அரசு விலையை குறைக்க முடியாது என்று திட்டவட்டம்.தேர்தலில் உங்களுக்கு ஓட்டு போடமுடியாது.பொதுமக்களாகிய நாங்களும் திட்டவட்டம்.

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  சனங்கள்ட்ட இவுனுங்க இந்தமாரி பணத்தெ கொள்ளையடிக்கறதே அந்தெ உமாபாரதி, கட்கரி & மத்த இத்யாதிங்கல்லாம் "ச்சொச்ச பாரத்", Clean Ganga , etc இந்தமாரி திட்டங்கள ஆரமிச்சி அவுனுங்கள வளப்படுத்திக்கத்தான்...

 • Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  மானிய விலையில் பெட்ரோல் கிடைக்காமல் பெரிதும் அவதி படும் பெறுபான்மை கும்மல் யாரு என்று நேற்றய பந்த் பிறகு தெரிந்து விட்டது,

 • கட்டத்துரை - ahmadabad ,இந்தியா

  என்ன ஒரு சில சொம்புகள் தவிர வேற யாரையும் காணோம்? நம்ம சொம்புகள் எல்லாருமே பெட்ரோலிய துறை அமைச்சர்கள் ஆயிற்றே.. அமைச்சருக்கே தெரியாதே விஷயங்கள் எல்லாம் சொல்லுவார்கள்.. ...எங்க காணோம்...

 • R Sanjay - Chennai,இந்தியா

  பெட்ரோல் டீசல் விலை குறைப்பில் மாநில அரசு மத்திய அரசை கைகாட்டுகிறது, மத்திய அரசு மாநில அரசை கைகாட்டுகிறது. கடைசியில் இரண்டு பேருக்குமே மக்கள் டாட்டா காட்டி ஒரேடியாக வீட்டுக்கு அனுப்பப்போவது மட்டும் உண்மை. ஆனால் ஏற்கனவே ஆண்ட கேடுகெட்ட காங்கிரஸ்/பிஜேபி கட்சிகள் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது. உண்மையில் மக்களிடம் நெகடிவ் எண்ணங்களே அதிகம் காணப்படுகிறது. அந்த நெகடிவ் எண்ணங்களுக்கு ஏற்பவே நெகடிவ் MLAக்கள் MPக்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். தற்போது ஆட்சியில் இருப்பவர்களுக்கு வருமானத்தை பெருக்குவதற்கு சாராயம்/பெட்ரோல்/டீசல் வரியை தவிர வேறு எதுவும் தெரியாது. இவர்கள் போன்றவர்களை வைத்துக்கொண்டு இந்தியா என்று வல்லரசாகப்போவதுமில்லை என்பது தான் உண்மை. மாற்று சிந்தனைகள் உடைய நேர்மையான நல்ல இளைஞ்சர்களே இந்நாட்டிற்கு தேவை

 • துயில் விரும்பி - coimbatore,இந்தியா

  என்னதான் நீங்க சொல்றது உண்மையாகவே இருந்தாலும் நீங்க கொடுத்த வாக்கை காப்பாற்றமாடீர்கள், நீங்களும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைதான் என்று மக்கள் நினைத்து விட்டார்கள். தேர்தல் தோல்வி தான் பாடம் புகட்டும் என்றால் என்ன செய்வது. வயதான அரிசியல்வாதிகள் நோய் மறதி இயலாமை முடியாமை சிற்றாசை சிறுபிள்ளைத்தனம் ஆகிய குனங்களால் நாடும் நாட்டு மக்களும் அவதி படுகிறார்கள்.

 • ديفيد رافائيل - کویمبٹور,இந்தியா

  இது எப்பவோ தெரிஞ்சது தானே (நான் தான் முன்னமே சொன்னேன்ல பந்த் நடந்தாலும் அது waste தான்)

 • Rao -

  increase in fuel prices will be death knell for BJP in next election.

 • J.Isaac - bangalore,இந்தியா

  வரியை குறைக்க முடியாது . மக்கள் வலியை குறைக்க முடியாது. ஆனால். தேர்தல் நேரத்தில் மக்கள் வலியை கொடுப்பார்கள் .

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  உணவுப்பண்டங்களில் விலையில் டீசல் விலை உயர்வு ஓரிரு சதவீதமே பாதிக்கும் .ஆனால் இந்தாண்டு நாடெங்கும் நல்ல மழைப் பெய்திருப்பதால் உணவு உற்பத்தி பெருகி விலைகள் குறைகின்றன . இதனால் அவற்றில் பெட்ரோல் டீசல் விழாக்களின் தாக்கமேயில்லை .பொதுவாக பருவமழை நன்றாக இருக்கும் காலங்களில் தேர்தல் ஆளும்கட்சிக்கு சாதகம்தான். இந்தபயம்தான் ராகுலையும் மற்ற எதிர்கட்சிகளையும் வாட்டுகிறது

 • பிசெபியை அடியோடு வெறுக்கும் ஒன் ஆப் இந்தியன் - அகமதாபாத் டீக்கடை அருகில்,இந்தியா

  பாசிச பிசெபி ஒழிக

 • VOICE - CHENNAI,இந்தியா

  கார்பொரேட் கம்பெனிகள் சொல்லுவதை கேட்டு எல்லா தொழிலையும் நசுக்கினால் எப்படி பொருளாதாரம் வளரும். தமிழ்நாடு அரசு டாஸ்மாக் வச்சு பொழப்பு நடத்துவது போல மத்திய அரசு பெட்ரோல் டீசல் வைத்து தான் அரசும் தனியார் எண்ணெய் நிறுவனங்களிடம் கமிஷன் பெற்று கட்சியும் நடத்துகிறது. முழுக்க முழுக்க ரிலையன்ஸ் கம்பெனி ஒன்றை தவிர வேறு எவரும் இந்த ஆட்சியில் வளர்ச்சி அடைந்ததாக தெரியவில்லை. RBI முதற்கொண்டு ரிலையன்ஸ் கம்பெனி சேர்ந்தவரை கவர்னராக வைத்து கொண்டு கறுப்பை வெள்ளையாக மாற்ற 50 % கமீஸின் வைத்து கொள்ளையடித்தார்கள் என்று பலர் பேசி கேட்டதுண்டு அது எந்த அளவிற்கு உண்மை என்பது ஞாயமான உண்மையான ஒரு அரசு மத்தியில் வராதவரை சாத்தியம் இல்லை. காங்கிரஸ் வந்தால் பிஜேபி மீது நடவெடிக்கை எடுக்காது இரண்டும் கூட்டு களவாணிதான். மக்களை ஏமாற்ற சண்டை போட்டு கொள்கிறார்கள்.

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  எண்பதுகளில் தங்கம் விலை ( உலக மார்க்கெட் குளறுபடியால் ) வேகமாக உயர்ந்தபோது அய்யயோ இந்தியாவில் மட்டும் தாலிக்கு தங்கமில்லை என இதே காங்கிரஸ் அழுதது .கருணா வீதிவீதியாகப் போராடினார் .பிறகு அதனைப்பற்றி மூச் .அப்போதைவிட இப்போது தங்கம் விலை நான்கைந்து மடங்கு அதிகம் .எனவே இதெல்லாம் சீசன் போராட்டம் . நிலைமை சீரடைந்தால் இருக்கவே இருக்கு டாஸ்மாக் சரக்கு விலை உயர்வு எதிர்ப்புப்போராட்டம் ஆனால அதில் .திமுக கலந்துகொள்ளளது ஏனெனில் முக்கிய டாஸ்மாக் உற்பத்தியே அவர்கள் கையில்

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  மற்ற பண்டங்கள் விலையுயர்ந்தால் விற்பனை குறையும் பெட்ரோல் விற்பனையோ நாளுக்குநாள் ஏறுகிறது ,தனியார் வாகன விற்பனை விண்ணில் பறக்கிறது .ஒரு பொருளின் விற்பனை ஓஹோவென இருக்கும்போது எந்த வியாபாரியாவது விலையைக்குறைப்பானா?

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  காங்கிரஸ் கூட்டணி ஆளும் கர்நாடகத்திலும் கம்மிகள் ஆளும் கேரளத்திலும் தான் சமீபத்தில் பெட்ரோலுக்கான வரியை ஏற்றியிருக்கிறார்கள். அவர்கள் தான் நேற்று போராட்டமும் பந்தும் நடத்தியிருக்கிறார்கள் .மக்களே விழித்தெழுங்கள்

 • Shanu - Mumbai ,இந்தியா

  We can not vote BJP in 2019 election.

 • Samy Chinnathambi - rayong,தாய்லாந்து

  இந்த ஆயில் விற்பனையில் அறுபது சதவீதம் அரசிடமும் நாற்பது சதவீதம் தனியாரிடம் இருக்கிறது............இந்த நாற்பது சதவீதம் ரென்டெ கம்பெனிகளிடம் இருக்கிறது.. ரிலையன்ஸ் மற்றும் எஸ்ஸார்........இந்த ரெண்டு கம்பெனிகளும் கடுமையான லாபம் சம்பாதித்து வருகிறது....ஆனால் அரசு சொல்வது விலையை குறைத்தால் கம்பெனிகள் நஷ்டம் அடையும் என்று........ லாபத்தில் தான் சிறிது நஷ்டம் வருமே உண்மையான நஷ்டம் வராது................அது போக மாநில அரசுகளும் ஓவராக வரி போடுகின்றது.. அத்தனையும் குறைக்க வேண்டும்...தமிழக அரசு, ஆந்திர அரசு மற்றும் பஞ்சாப் அரசுகள் தான் அதிக பட்ச வரியை போடுகின்றது 35%

 • Susainathan -

  all the best

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  பெட்ரோல் விலையேற்றத்துக்கு அரசே காரணமென்றால் சமீப காய்கறி பருப்பு விலை கிடுகிடு குறைவுக்கும் அரசுதானே காரணம் ? ஒப்புக்கொள்வார்களான? டீசல் விலையேற்றம் ஏன் இந்த விலைகுறைவை தடுக்கவில்லை ? சிந்தியுங்கள். சராசரியாக ஒரு பொருளின் போக்குவரத்து செலவு ஐந்துமுதல் பத்து சதவீதம் வரையே டீசல் விலை 10 சதவீதம் கூடினாலும் பண்டத்தின் மொத்தவிலையில் அது, ஓரிரு சதவீத தாக்கத்தையே ஏற்படுத்தும் என்பதையே இது காட்டுகிறது ..முந்தைய ஆட்சியைவிட இப்போது பணவீக்கமும் மொத்தவிலைக்குறியீடும் வெகுவாகக் குறைந்திருப்பதை அனைத்து உலகப்பொருளாதார நிறுவனங்களும் சொல்கின்றன 1947 இல் ஒரு டாலர் ஒரு ரூபாயாக இருந்தது . இந்த ஆட்சி வருவதற்குமுன் அது அறுபது ரூபாயை தாண்டிவிட்டது. அப்போது இரண்டணா இருந்த பெட்ரோல் விலை எழுபது ரூபாய்க்கு மேல் ஆகியிருந்தது முதலில் . அதற்கான பொறுப்பை காங்கிரசும் திமுகவும் தீவீரவாத மார்க்கத்தவரும் ஏற்கட்டும்

 • ஆப்பு -

  பெட்ரோல் வரியைக் குறைச்சுட்டு வேறு ஏதாவது வரியைப் போட்டு உருவ வேண்டியது தானே? உங்களுக்கு தெரியாத உருவலா?

 • தம்பி - பொள்ளாச்சி ,இந்தியா

  அரசு இப்படி சொல்கிறதே என கவலை வேண்டாம் அடுத்த 50 வருடங்களுக்கு பாஜக ஆட்சி தான் அப்போது பெட்ரோல் டீசல் விலையை அரசு கண்டிப்பாக குறைக்கும் மீண்டும் ஆதரவு தாருங்கள்

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  எல்லாப் பண்டங்களுக்குமே மானியம் கொடுப்பதும் அது ஏழை எளியவர்களுக்கு மட்டும் சரியாகப் போய்ச் சேரவைப்பதும் நடக்காத காரியம். வசதியானவர்களுக்கு வரிபோட்டாலும் அவர்கள் பரம்பரைச்சொத்தை விற்றுக்கட்டப் போவதில்லை.அவ்வரியையும் தாம் விற்கும் பண்டங்கள் /சேவைகள் விலையையேற்றி வைத்து சாதாரணர்கள் தலையில்தான் கட்டுவர் .சுயதொழில்புரிவோர் ஓட்டும் சாதாரண வாகனங்களுக்கு ஒரு விலையும் மற்ற ஆடம்பர வண்டிகளுக்கு உயர் விலையுமாக வைத்து பெட்ரோல் டீசல் விற்கவே முடியாது துஷ்பிரயோகம்தான் நடக்கும். பெட்ரோல் டீசல் வரியைக்குறைத்தால் அந்த வரி வருமான இழப்பை வேறெந்த ஆடம்பரப் பண்டத்தின்மீது போட்டு பல லட்சம் கோடி வசூல் செய்யமுடியும்? உணவு மானியம் வீட்டுவசதி போன்ற்வை மூலம் ஏழைகளுக்கு வேறு வகையான வீட்டுச்செலவுகளைக்குறைக்க உதவலாம் .அது மட்டுமே சாத்தியம் . மற்றபடி ஆட்சிமாற்றமும் பெட்ரோல் விலையைக்குறைக்கவே குறைக்காது..சமீபத்து உலகப்பொருளாதாரப் போர் ஓயும்வரை அனைவருமே பொறுத்துக்கொள்ள வேண்டியதுதான் .அவரவர் ஆத்திரத்தைத் தீர்த்துக்கொள்ள கருத்தெழுதி திட்டலாம் அவ்வளவே

 • krishnan - Chennai,இந்தியா

  மோடி இதை மேடையில் வந்து 56 இஞ்சி மார்பை உயர்த்தி அவர் பாணியில் வீராவேசமாக கை உயர்த்தி இதை சொல்லவும்

 • Mannan - Madurai,இந்தியா

  //நிதி நிலைமை வலிமை அடைந்தால் மட்டுமே வரி குறைப்பு செய்ய முடியும். அதற்கு வருமான வரி, ஜி.எஸ்.டி. செலுத்துவோர் எண்ணிக்கை உயர வேண்டும். // - தேர்தல் நெருங்கும் நேரத்திலும் இப்படி பேச ஒரு அரசுக்கு துணிவு வேண்டும். நேர்மையான அரசுக்கு மட்டுமே இத்தகைய துணிவு வரும். ஆன்டி மோடிஸ் வழக்கம் போல் அவர்களுக்கு விதிட்டப்பட்ட அஜெண்டாவை பேசட்டும்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement