Advertisement

5 கோப்பைகளை வென்று அசத்தல்

மேலுார்:மாவட்ட அளவிலான செஸ் போட்டியில் மேலுார் மாணவிகள் 5 கோப்பைகளை வென்றனர்.மதுரை காந்தி மியூசியத்தில் ஆனந்தி செஸ் அகாடமி சார்பில் நடந்த இப்போட்டியில் 8 - 14 வயது பிரிவுகளின் கீழ் நடந்த போட்டியில் அ.வல்லாளபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி 6ம் வகுப்பு மாணவிகள் கோகிலா, வெற்றிச்செல்வி ஆகியோர் 12,13 வயதுக்கான பிரிவுகளில் முதல் இரு இடங்களை இருமுறை வென்றனர்.செட்டியார் பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி 5ம் வகுப்பு மாணவி கலைசெல்வி 2ம் இடத்தை வென்றார். வெற்றி பெற்ற மாணவர்களை வல்லாளபட்டி அரசு மேல்நிலைபள்ளி தலைமை ஆசிரியர் கிறிஸ்டோபர் ஜெயசீலன், பயிற்சியாளர் செந்தில்குமார், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியை மணிமேகலை ஆகியோர் பாராட்டினர்.ஒரே நாளில் அரசு பள்ளி மாணவர்கள் மூன்று போட்டிகளில் மூன்று பேர் கலந்து கொண்டு 5 கோப்பைகளை வென்றது குறிப்பிடத்தக்கது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement