Advertisement

ரோட்டரி 'இன்ட்ராக்ட்' நிர்வாகிகள் பதவியேற்பு

அவிநாசி:பள்ளியில், ரோட்டரி இன்டராக்ட் கிளப் துவக்க விழாநடந்தது. அவிநாசி, பழனியப்பா மெட்ரிக் பள்ளியில், அவிநாசி ரோட்டரி சார்பில், 'இன்டராக்ட் கிளப்' துவக்க விழா நடந்தது.தமிழக மண்டல, இன்டராக்ட் கிளப் மாவட்ட கவர்னர் ரவீந்திரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று துவக்கி வைத்தார். இன்ட்ராக்ட் கிளப் தலைவராக பள்ளி மாணவியர் திவ்யதர்ஷினி, செயலாளராக சிவநந்தினி, நிர்வாகிகள் பதவியேற்று கொண்டனர். விழாவில், பள்ளி முதல்வர் உமா மகேஸ்வரி, ரோட்டரி உதவி கவர்னர் சின்னசாமி, திட்ட இயக்குநர் சரவணன், ரோட்டரி தலைவர் பாலசந்திரன், செயலாளர் அருணாசலம் உட்பட பலர் பங்கேற்றனர்.--கார் மோதி ஒருவர் பலிவெள்ளகோவில்:கார் மோதியதில், பைக்கில் சென்ற இளைஞர் பலியானார்.வெள்ளகோவில், பட்டத்திபாளையம், புதுக்காலனியை சேர்ந்தவர் செல்வகுமார். 25. நேற்று முன்தினம் இரவு, புதுப்பை கடைவீதியிலிருந்து ஊருக்கு, தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது புதுப்பை அமராவதி ஆற்றுப்பாலம் அருகில், எதிரே வந்த கார் பைக் மீது மோதியது. பலத்த காயம் ஏற்பட்டு அதேயிடத்திலேயே அவர் இறந்தார். வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர். இறந்த செல்வகுமாருக்கு கண்மணி என்ற மனைவியும், சம்யுக்தா என்ற 2 வயது குழந்தையும் உள்ளனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement