Advertisement

மஹாராஷ்டிராவில் பர்பஹானியில் ''ரூ. 90'' ஐ தொட்டது பெட்ரோல் விலை


பர்பஹானி( மஹாராஷ்டிரா):: மஹாராஷ்டிரா மாநிலம் பர்பஹானி மாவட்டத்தில் பெட்ரோல் விலை ரூ. 90 ஐ வரை எகிறிவிட்டது. இதுவே இந்தியாவில் முதன்முறையாக பெட்ரோல் விலை ரூ.90 வரை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
பெட்ரோல், டீசல்விலை உயர்வை கண்டித்து காங், உள்ளிட்ட 20 எதிர்க்கட்சிகள் நேற்று வேலை நிறுத்த போராட்டம் நடத்தின. இந்நிலையில் மஹாராஷ்டிரா மாவட்டம் பர்பஹானி மாவட்ட பெட்ரோல் விநியோகஸ்தர் சங்க தலைவர் சஞ்சய் தேஷ்முக் கூறியது, இம்மாவட்டத்தில் நேற்றை நிலவரப்படி பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ. 89.97, டீசல் லிட்டர் ரூ.77.92 என விலை .உயர்ந்துவிட்டது. இதன் மூலம் இந்தியாவில் இம்மாவட்டத்தில் முதல்முறையாக பெட்ரோல் விலை ரூ.90 ஐ தொட்டு விட்டது என்றார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (13)

 • ramu narayanan - Sydney,ஆஸ்திரேலியா

  பி ஜெ பி சொம்புகளா உங்களுக்கு ஆட்சி செய்ய தெரியலைனு சொல்லிட்டு போங்க. காங்கிரஸ் ஆட்சியில் கட்சா எண்ணெய் விலை 130 டாலர் இருக்கும் போது பெட்ரோல் விலை ரூ. 70 . பி ஜெ பி ஆட்சியில் கட்சா எண்ணெய் விலை 78 டாலர் இருக்கும் போது பெட்ரோல் விலை ரூ. 90

 • ديفيد رافائيل - کویمبٹور,இந்தியா

  இது என்ன ஆச்சரியம் ₹100 ஐயும் தொட்டுடும் (இன்னும் இருபது நாளில்)

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  //எல்லாம் இலவசமா வேணும் என்று கேட்டு கொண்டே இருங்க,// மத்திய அரசிடம் யார், எதை இலவசமாக கேட்டாங்க? எதை குடுக்கறாங்க? யாருமே கேட்காத சமையல் வாயுவை இலவசமாக ஒரு கோடிப்பேருக்கு குடுத்ததா எல்லா பெட்ரோல் பங்கிலும் பேனர் வெச்சிருக்காங்க. அதில் பாதிப்பேர் ரெண்டாவது சிலிண்டர் வாங்க முடியாம முதல் இலவச சிலிண்டரை ஓரங்கட்டிட்டாங்க. ஆளத் தெரியவில்லை பொருளாதாரம் புரியவில்லை. மக்கள் விரோத ஆட்சி நடக்கிறது.

 • Mannan - Madurai,இந்தியா

  தனக்கு காலையில ஒழுங்கா போலேன்னா அதுக்கும் மோடி தான் காரணம்ங்குற மாநிலம் இது. இத்தாலி Pakistan மாதிரி மத்த நாடுகள்ல பெட்ரோல் என்ன விலைன்னு Google பண்ணி பார்க்கவும்.

 • ஆப்பு -

  அச்சே தின் ஹை...பெட்ரோல் உச்சம் ஹை...ரூவாய் மதிப்பு உச்சம் ஹை...சீக்கிரம் பெட்ரோலும் 100 ரூவாயும் , டாலர் 100 ரூவாயும் ஆகும் ஹை... யாரும் வெல்ல முடியாது ஹை.... கெவுர்மெண்ட் எதுக்கும் காரணம் இல்லை ஹை...எல்லாம் நம் தலை எழுத்து ஹை...

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  பி ஜெ பி ஆட்சி நிறைவுறுதலும் பெட்ரோல் விலை நூறை எட்டுதலும் ஒரே நாளில் நடக்கும்

 • கைப்புள்ள ரசிகன் - Nj,இந்தியா

  இருங்கய்யா.. இதுக்கே இப்படி ஷாக்கானா எப்படி? தோ, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 72.66 ஆயிடுச்சி.. கூடிய சீக்கிரமே 100 ஆயிடும்னு பேசிக்கிறாங்க. அதுக்கு எவ்ளோ ஷாக்காவீங்க? போய் சேர்ந்துடுவீங்க போலயே... எல்லாம் எங்க மோடிஜி ஆட்சியில இந்தியா புது உச்சத்தை தொட்டுடுச்சினு பொறாமை.. ஆன்..ட்ட்டி இந்தியன்ஸ்.

 • nicolethomson - bengalooru,இந்தியா

  எல்லாம் இலவசமா வேணும் என்று கேட்டு கொண்டே இருங்க, எங்கிருந்து காசு வரும் என்று யோசிக்குமா அந்த இலவச கூட்டம்?

 • thiru - Chennai,இந்தியா

  இதெல்லாம் ஒரு பெருமையா விரைவில் தேர்தல் வரும் முன்னர் ₹100, 200 என்று பெட்ரோல் டீசல் விலை போட்டி போட்டுக்கொணடு அதிகமாகும் .. இநத காரணத்தை வைத்தே தேர்தலில் பாஜக ஆபரமாக வெற்றி பெரும்..

 • G.BABU - HARROW,யுனைடெட் கிங்டம்

  இந்தியாவில் இவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அளவில்,சர்வதேச சந்தையில் கச்சாய் எண்ணெய் விலை அதிகரித்துவிடவில்லை.. டாலரின் விலையும் அதிகரித்து செல்கிறது இது இந்தியாவின் பொருளாதாரம் ஓர் சிறு பின்னடைவை சந்தித்துள்ளது என்பதையே காட்டுகிறது. சமநிலையற்ற அதிக இறக்குமதி ....குறைந்த ஏற்றுமதியும் ஓர் காரணமாக இருக்கலாம்.

 • ManiS -

  adhu 100 thottalum OK... Congress DMK engalukku vendam. Avanunga vandhum idhe paattu padduvaanunga... onnum pudunga poradhilla. enga kitta irundhu nilam miratti vaangaradhula naanga thapipom. Nilam mattum illa... thirumba vandha innum ennathavellam ezudhi kepaanungannu theriyaadhu. Indha ariveena makka paavam.

 • Karthik - Chennai,இந்தியா

  எங்க நம்ம மகாராஷ்டிரா முதல்வர். கூப்பிடீங்க. மாநிலவரி குறைக்க சொல்லுங்க. உடனே 20 ரூபா குறைத்துவிடுவார்கள். மேலும் மஸ்தான் 10 ரூபா குறைப்பார் என்று கனவு கண்டேன்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement