Advertisement

'ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ்' ரூ.1 லட்சம் கட்டணம்

தமிழக சுகாதாரத்துறை செயல்படுத்த உள்ள, 'ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ்' சேவைக்கு, ஒரு மணி நேரத்திற்கு, 1 லட்சம் ரூபாய், கட்டணம் வசூலிக்க, அரசு முடிவு செய்துள்ளது.

மாவட்டங்களில் இருந்து, உயர் சிகிச்சைக்காக, சென்னை போன்ற நகரங்களுக்கு அழைத்து வர, ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவையை செயல்படுத்த, சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. இதன் வாயிலாக, நோயாளியை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முடியும். இந்த சேவைக்கான, திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு, தமிழக அரசின் அனுமதிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இது குறித்து, சுகாதாரத்துறை திட்ட அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள, மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் அருகே, 'ஹெலிகாப்டர்' இறங்கு தளங்கள் அமைக்கும்படி, கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த சேவையை செயல்படுத்த, தமிழக அரசு அனுமதி அளித்த பின், ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவை அளிக்கும், தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்படும். இதையடுத்து, மத்திய அரசிடம் அனுமதி பெற்று, சென்னை, மதுரை, திருச்சி போன்ற விமான நிலையங்களில், ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் நிறுத்தி வைக்கப்படும்.

நோயாளிகளின் தேவைக்கு ஏற்ப, ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் பயன்படுத்தப்படும். இந்த சேவைக்கு, ஒரு மணி நேரத்திற்கு, 1 லட்சம் ரூபாய் கட்டணம் வசூலிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. துாரம், நேரத்திற்கு ஏற்ப, கட்டணம் மாறுபடும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (13)

 • ديفيد رافائيل - کویمبٹور,இந்தியா

  கண்டிப்பா பணத்துல குளிப்பவர்கள் மட்டுமே இதனை பயன்படுத்த முடியும் (அரசியல்வாதிகளுக்கு இலவசம் தானே)

 • திண்டுக்கல் சரவணன் - ஓசூர்,இந்தியா

  1 மணி நேரத்துக்கு 1 லட்சம் ? ஹெலிகாப்டரில், பெங்களூர் ஏர்போட்டில் இருந்து எலெக்ரோனிஸ் சிட்டி வர 3000 கட்டணம் என நினைக்கிறேன். யாருக்காக இதை அரசு செயல்படுத்த வேண்டும். எந்த அரசானாலும் பணக்காரர்களுக்கு தான் என்பது இதன் மூலம் மேலும் ஒருமுறை உறுதியாகிறது. பணக்காரர்களுக்கான சேவை என்றால் இதை தனியாருக்கு விட்டுவிடலாம்.

 • பஞ்ச்மணி - கோவை,இந்தியா

  இந்த வசதியை ஏழை மக்கள் பயன்படுத்த மிகவும் சிரமப்படுவார்கள் ஆகவே தயவு கூர்ந்து கொஞ்சம் போல விலையை குறைக்க வேண்டி கேட்டுக்கொள்கிறேன்

 • VOICE - CHENNAI,இந்தியா

  உன் ஹெலிகாப்டர் நீயே வச்சிக்க. குறைந்த செலவில் ட்ரான் மூலம் மருத்துருவமனை மேல்தளத்தில் இறங்கும் அளவிற்கு இன்று தொழில்நுடபம் உள்ளது. இதற்கு எதற்கு ஹெலிகாப்டர் ? 1 மணிநேரத்திற்கு 1 லட்சம் ?

 • raghavan - Srirangam, Trichy,இந்தியா

  ஏழைகளின் உறுப்பை மூளைச்சாவு என்று சொல்லி உடனடியாக உருவலாம். ஒரு லட்சம் செலவு செய்து, எண்பது லட்சம் எடுக்கலாம்.

 • Sekar KR - Chennai,இந்தியா

  ஒரு லட்சம் கொடுத்து ஆம்புலன்சில் வரவன் ஏன் அரசு மருத்துவமனைக்கு வரான்?

 • raghavan - Srirangam, Trichy,இந்தியா

  ஊழல் பெருச்சாளிங்கதான் இந்த எலிகாப்டரை உபயோகபடுத்த முடியும்.

 • அருணா -

  துணை முதல்வரின் உறவினரினருக்கு பின் தான் இப்படி ஒரு முடிவோ?

 • புதிய தமிழ்மைந்தன் - Dindigul India,இந்தியா

  நீயும் செய்ய மாட்டாய் ஆனால் செய்யறவங்களையும் விடமாட்டாய் என்ன புத்தி இது

 • ஆப்பு -

  இந்த ஆயுஷ்மான் காப்பீடு, முதல்வர் காப்பீடு திட்டமெல்லாம் எதுக்கு? நோயாளிகளுக்கு வயத்துவலி மாத்திரைக்கு மட்டும்தானா?

 • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

  ஒரு மணி நேரத்திற்கு, 1 லட்சம் ரூபாய், கட்டணம் வசூலிக்க, அரசு முடிவு செய்துள்ளது... சரி.. யார் கிட்டேருந்து யாருக்காக? ஏன்னா, ஜெலிகாப்டர் அரசுடையது இல்லே. கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இருக்கு, அப்புறம் இதிலே காசு பாக்க சிலபேரு திட்டம் போடுறாங்க. சேவையை செயல்படுத்த, தமிழக அரசு அனுமதி அளித்த பின், ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவை அளிக்கும், தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்படும்ன்னு சொல்றாரு. அவனுங்க மணிக்கு 10,000 ன்னு வசூலிச்சாலும், அரசு அதை லட்ச ரூபான்னு ஏன் ஏத்தி விடுது? ஆளும்கட்ச்சி அரசியல்வியாதிகளின் கெட்டுப்போன கல்லீரலுக்காக தமிழக வரிப்பணம் தனியாருக்கு தாரை வார்க்கப்போறாங்களா?

 • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

  அரசியல்வாதிகளுக்கு இலவசம்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement