Advertisement

குமாரசாமியாக மாற நினைக்கிறாரா உத்தவ் தாக்கரே; சிவசேனா கட்சியால் பா.ஜ.,வுக்கு நெருக்கடி

புதுடில்லி : லோக்சபா தேர்தலுடன் சேர்த்து, அடுத்து நடக்கவுள்ள சட்டசபை தேர்தலுக்கான தொகுதி உடன்பாட்டையும், இப்போதே இறுதி செய்ய வேண்டுமென சிவசேனா வலியுறுத்துவதால், பா.ஜ.,வுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

பா.ஜ.,வுக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து, பிரமாண்ட கூட்டணி அமைக்க வேண்டுமென்பதில், மும்முரமாக செயல்பட்டு வருகின்றன. இதனால், பா.ஜ.,வும், தன் கூட்டணியை பலப்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.

கடந்த, 1989ல், முதன் முறையாக கூட்டணி அமைந்ததில் இருந்து, அதிக தொகுதிகளில் சிவசேனாவும், குறைந்த தொகுதிகளில், பா.ஜ.,வும் போட்டியிட்டு வந்தன.


ஆனால், கடந்த லோக்சபா தேர்தலின்போது, நாடு முழுவதும் வீசிய மோடி அலை, நிலைமையை தலைகீழாக்கியது. பா.ஜ.,வின் தலைமையை ஏற்றாக வேண்டிய நிலை, சிவசேனாவுக்கு ஏற்படவே, கூட்டணியில் உரசல் துவங்கியது. தற்போது, கூட்டணியின் முக்கியத்துவத்தை அறிந்து, பா.ஜ., இறங்கி வந்துள்ளதால், அந்த வாய்ப்பை பயன்படுத்த, சிவசேனா தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

லோக்சபா தேர்தல் மட்டுமல்லாமல், அடுத்து நடக்கவுள்ள சட்டசபை தேர்தலிலும், தங்களுக்கு அதிக தொகுதிகள் வேண்டுமென, சிவசேனா போர்க்கொடி துாக்கியுள்ளது. சில மாதங்களுக்கு முன் நடந்து முடிந்த கர்நாடக சட்டசபை தேர்தலை பார்த்து, சிவசேனா, சில முடிவுகளை எடுத்துள்ளது. அங்கு, தேர்தலுக்கு முன்பே, மதச் சார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணி அமைக்க மறுத்ததால், அதன் விலையை காங்கிரஸ் அனுபவிக்க நேர்ந்தது.

மஹாராஷ்டிராவை பொறுத்தவரை, தற்போது அதே நிலையில், பா.ஜ., உள்ளது. 'மஹாராஷ்டிராவில், சட்டசபை தேர்தலுக்கு முந்தைய கூட்டணி அமைக்க வேண்டும். முதல்வர் வேட்பாளர் பதவியை சிவசேனாவுக்கே தர வேண்டும்' என, சிவசேனா தரப்பு வலியுறுத்துகிறது.


இதுதான், தற்போதைய இழுபறிக்குக்கான காரணம். ஜனவரியில் நடந்த தேசிய செயற்குழுவில், 'லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களில் தனித்தே போட்டி' என்ற முடிவை, சிவசேனா எடுத்து, அதை அறிவிக்கவும் செய்தது. அந்த அறிவிப்பில் மாற்றம் வருமா, வராதா என்பது குறித்து, சிவசேனா மற்றும் பா.ஜ., கட்சி வட்டாரங்களில் சஸ்பென்ஸ் நிலவுகிறது.

இதில் என்ன மாற்றம் நடந்தாலும், அது மஹாராஷ்டிரா மாநிலத்தோடு முடிந்து விடாது; லோக்சபா தேர்தல் நெருங்கவுள்ள நிலையில், நிச்சயம் தேசிய அரசியலிலும் புதிய விளைவுகளை ஏற்படுத்துமென டில்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (23)

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  சிவ சேனாவும் கட்டு விரியன் பாம்பும் ஒரே இனம் தான் எப்போ யாரை கொத்தும் என்றே தெரியாது???

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  நாம் தமிழர் கட்சியும் சிவ சேனாவும் ஓன்று தான் பாஜக தள்ளி நிற்க வேண்டும் மத்தியில் ஆட்சி வேண்டும் என்பதற்ககாக மாநிலத்தில் ஆட்சியை இழக்க கூடாது பின் காங்கிரஸ் போல் ஆகி விடும்.

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  நல்லாட்சியின் சாதனைகளை சொல்லி தனித்து களம் இறங்கலாமே

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  பாஜக தனித்து களம் இறங்க வேண்டும் இன உரிமை பேசும் சிவ சேனாவை ஒதுக்கி தள்ள வேண்டும்.

 • sankaseshan - mumbai,இந்தியா

  B j p ,s influence in Maharashtra is more than sena.They are awae if this .That is why the are demanding CM post.Had sena given 105 seats in last election sena would have got CM post.Because of their arrogance they list the chance Sena has only 62 seats whereas BJP has 122 seats .If sena contest with out alliance it will be good for BJP. Fadnavis is running the govt without any major problem There are no scams unlike Cong NCP govt.Sena is not in a position to dictate BJP.

 • Raajanarayanan Raaj Narayanan - SANKARAN KOVIL,இந்தியா

  மாநிலத்திற்கு ஒரு குமாரசாமி உருவாகுவார்கள் அதன் பின் காங்கிரஸ் அல்லது பாஜகவை ஆதரிக்காமல் விட்டுடேமே என என்ன போகிறார்கள்,

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  தேயும் கட்சியான சிவசேனா பற்றி இனி எழுதி நேரத்தை வீணாக்கவேண்டாம் . மராத்தியர்களே சிவசேனாவிடமிருந்து விலகி நிற்கிறார்கள்

 • சூரிய புத்திரன் - வெள்ளைக்காரன் பட்டி , கிர்கிஸ்தான் , ,கிரிகிஸ்தான்

  சிவசேனா இந்து கட்சி என்பதால் மட்டும் இக்கட்சிக்கு இந்துகள் வாக்களிக்க மாட்டார்கள். தேசத்தையும், இந்து தா்மத்தையும் தன் இரு கண்கள் என போற்றும் பாஜக வை தான் இந்து மக்கள் ஆதரிப்பா். உத்தவ் தாக்கரே பாஜக உடன் மோதினால் விரைவில் செல்லா காசாவது உறுதி. இந்திய தேசம் உடல், இந்து தா்மம் உயிர் இதுவே இந்து மக்களின் தாரக மந்திரம். பாரத் மாதா கி ஜே.... ஜெய்ஹிந்த்..

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  எல்லாம் சுய காரிய புலிகள்...

 • N Parthiban - Thanjavur,இந்தியா

  He can't. Because JDS is strong only in South East Karnataka where as SS is spread through out Maharashtra. Kumarasamy will be playing his game with both congress and bjp. But SS is ideologically closer to bjp. As long as people think bjp is better than SS they will support bjp only. If bjp is not the choice people would elect congress rather than SS. If SS fails to feel ground reality it will be eliminated silently. Results local body election proves this. Good luck SS

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  சிவசேனா இந்துக்களின் வாக்குக்களை இழக்கும் காலமும் வரும்...

 • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

  யாருக்குத்தான் குறுக்கு வழியில் முதல்வராக ஆசை இருக்குக்காது?? மக்களுக்கு சேவையா செய்ய துடிக்கிறார்கள்??

 • Karthik - Chennai,இந்தியா

  இவர்களை நம் அடிமை கட்சி போல நினைத்து கொண்டார்கள் போல. இந்த குழப்பமே வரும் தேர்தலில் பிரதிபலிக்கும்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement