Advertisement

மக்கள் உயிருடன் விளையாடாதீங்க: ரவிசங்கர் பிரசாத்

புதுடில்லி : மக்கள் உயிருடன் விளையாடும் விபரீத விளையாட்டை, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் நிறுத்திக் கொள்ள வேண்டும் என மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.


பெட்ரோல், டீசல் விலை, வரலாறு காணாத வகையில் தொடர்ந்து அதிகரித்து வருவதை கண்டித்து, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நேற்று நடத்திய, நாடு தழுவிய, வேலை நிறுத்தப் போராட்டத்தால், சில மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பெரும்பாலான மாநிலங்களில், இந்த போராட்டத்திற்கு ஆதரவு காணப்படவில்லை.


எதிர்க்கட்சிகள் நேற்று நடத்திய பாரத் பந்த் குறித்து, மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், நிருபர்களிடம் கூறியதாவது: பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தால் ஏற்பட்டுள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண முயற்சித்து வருகிறோம். விலை ஏற்றம் குறித்த அரசின் கருத்தை புரிந்துள்ள மக்கள், அரசுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். எதிர்க்கட்சிகளின் பாரத் பந்த் அழைப்பை, மக்கள் நிராகரித்துள்ளனர்.


இதனால், காங்.,கும், பிற எதிர்க்கட்சி களும் உற்சாகம் இழந்துள்ளன. மத்திய அரசுக்கு எதிராக வன்முறையை துாண்டி வரும் எதிர்க்கட்சிகளின் நடவடிக்கை, மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்த எதிர்க்கட்சியினர் சதி திட்டமிடுகின்றனர்.


பீஹாரில், எதிர்க்கட்சியினர் நடத்திய பாரத் பந்த்தால், 3 வயது சிறுமியை, குறித்த நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை. சிறுமி அழைத்து செல்லப்பட்ட ஆம்புலன்சை, எதிர்க்கட்சியினர் மறித்துள்ளனர். இதனால், அந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள். இதற்கு, ராகுல் பொறுப்பேற்பாரா?


மக்கள் உயிருடன் விளையாடும் இதுபோன்ற விபரீத விளையாட்டை, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் நிறுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (27)

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  "நாங்கள் (பாஜக) ஏற்கனவே மக்களை கொலையாய், கொல்வதால், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் மக்கள் உயிருடன் விளையாடும் விபரீத விளையாட்டை நிறுத்திக் கொள்ள வேண்டும்".

 • Solvathellam Unmai - Chennai,இந்தியா

  பிச்சை வேண்டுமானால் கேள், வந்தேறிகளை வந்தவழியே தெறிக்க விட வேண்டும்

 • g.s,rajan - chennai ,இந்தியா

  You ruling party people are playing with the life of the common man. g.s.rajan, Chennai.l

 • g.s,rajan - chennai ,இந்தியா

  Many people could not survive in India here after they almost dead.The remaining people are dying day by day. g.s.rajan, Chennai.

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  "சிறுமி அழைத்து செல்லப்பட்ட ஆம்புலன்சை, எதிர்க்கட்சியினர் மறித்துள்ளனர்". என்ன கோர்ட்டு அநீதிபதி அவர்களே நல்ல குறட்டையுடன் தூக்கமா இதைப்பற்றி கவலைப்படாமல். அந்த கட்சியின் அங்கீகாரத்தை அட்லீஸ்ட் அந்த மாநிலத்தில் ரத்து செய்து பாருங்களேன்??????

 • துயில் விரும்பி - coimbatore,இந்தியா

  நீங்கள் ஒரு கோமாளி என்று நேற்று நிரூபித்து விட்டீர்கள், முதலில் உணர்ச்சிவசப்படாமல் பெரிய மனுஷன் மாதிரி நடக்கணும். உழைத்து வாழ பழகி இருந்தால் உங்களை போன்ற அரசியல்வாதிகளுக்கு பணத்தோட அருமை தெரியும், மக்கள் வரி பணத்தில் ராஜபோக வாழ்வு வியாபாரம். கடைசி காலத்தில் நோய் வந்து தான் கேட்பாரற்று சாக போகிறீர்கள்.

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  மக்களை பாதிக்கத்தவரையில் உண்ணா விரதம் நடத்தி இருக்க வேண்டும் , மக்களுக்கு இடையூறு ஏட்படுத்துவதால் என்ன பலன் ?

 • g.s,rajan - chennai ,இந்தியா

  The stomach is hungry and need food for 3 Times a day ??? stomach cannot go on strike even a single day,so everyone has to do their work or job.. g.s.rajan, Chennai.

 • ஜெயந்தன் - Chennai,இந்தியா

  அட...பார்றா ..மக்களின் மேல் தான் எத்தனை பரிவு இவருக்கு...மக்களின் உயிரோடு நீங்கள் விளையாடாதீர்கள்..நாங்கள் மட்டுமே விளையாடுவோம் என்று சொல்கிறாரோ

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  விலை உயர்வைக் குறித்து எத்தனையோ பேர், பல்வேறு சந்தர்ப்பங்களில் வேண்டுகோள் விடுத்தும் செவிசாய்க்காத கல்நெஞ்சக் காரர்களாயிற்றே பாஜக ஆட்சியாளர்கள் ??

 • சுப்பையா, கருப்பட்டி வியாபாரம். - முடிவைத்தானேந்தல் ,இந்தியா

  போராளிகள் டிசைன் அப்படி.... சாதி சலுகைகளை அனுபவச்சிகிட்டு, சாதிக்கெதிராக போராட்டம்.... இந்துமதத்தை மட்டும் இழிவு படித்திகிட்டு, மதசார்பின்மைக்கு ஆதரவாக போராட்டம்.... பணம் கொடுத்து ,பணம் வாங்கி ஓட்டு போட்டு, ஊழலுக்கு எதிராக போராட்டம்..... .மதுவிற்கு எல்லாம் அடிமையாகிவிட்டு, மதுக்கெதிராக போராட்டம்.... upa 1&2 மூலம் பொருளாதாரத்தை சீரழிச்சிட்டு இப்போ விலையை குறைன்னு போராட்டம்....

 • Tamil Nesan - Chennai,இந்தியா

  How the govt expect, people should keep quite when they are inefficient to control the fuel prices. Then why govt give to their politicians for almost everything free.

 • தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா

  காங்கிரஸ் கட்சிக்கு அராஜகம் பிடிக்காது என்பதைவிட செய்யாது என்பது உண்மை. ஆனால் வட மாநிலங்களில் கம்யூனிஸ்ட், அகிலேஷ், மாயா(வ)தி, லல்லு, போன்ற ரவுடிகளை பெரும்பாலும் உறுப்பினர்களாக கொண்ட கட்சிகளே வன்முறைகள் மற்றும் பல உயிரிழப்புகளுக்கு காரணம். தமிழகத்தில் ஸ்டாலின் தி.மு.க வும் இந்த வகை தான் ஆனால் எடப்பாடி பழனிச்சாமி கைவசம் உள்ள காவல்துறை உள்ளதால் அடங்கிவிட்டனர்.

 • Ganapathy - Bangalore,இந்தியா

  பந்தின் பொது மருத்துவமனை, ஆம்புலன்ஸ், கல்யாணம் ,மருந்து கடைகள் எல்லாம் செயல்படும். அதை யாரும் தடுக்க கூடாது, தடுக்கவும் முடியாது எப்பேர்ப்பட்ட போராட்டத்தின்போதும் இவை எல்லாம் இயங்கி உள்ளன. நீங்கள் ஆளும் பிஹாரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஒரு ஆம்புலன்ஸை கடத்திவிட முடியாமல் போனது உங்களுடைய இயலாமையே, வீணாக அடுத்தவர் மீது பழி சுமத்தவேண்டாம். நீங்கள் எதிர்க்கட்சியை இருக்கும் சமயத்தில் கூட இப்படி சம்பவங்கள் நடந்துள்ளன. ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெற்றுக்கொண்டபோதும் பலரும் பெரும் பாதிப்பிற்கு உள்ளானார்கள். சிலர் உயிர் இழக்கவும் செய்தனர் . அவற்றுக்கெல்லாம் நீங்கள் காரணம் என்றால் ஒத்துக்கொள்வீர்களா ? பந்து இல்லாத சமயத்தில் நீங்கள் ஆளுகின்ற உத்தரபிரதேசத்தில் ஆக்ஸிஜன் இல்லாமல் பலர் உயிர் போயின ? அதற்கும் நீங்கள் தான் காரணம் என்றால் ஒத்துக்கொள்வீர்களா ?

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  ஏப்பா... நீங்கதான் எல்லா விலைவாசியையும் உயர்த்தி மக்களை கொலை செய்கிறீர்கள்...

 • கைப்புள்ள ரசிகன் - Nj,இந்தியா

  அதானே.. ஏன்யா இப்படி மக்கள் உயிரோட விளையாடுறீங்க? எங்களை மாதிரி மக்கள் வாழ்க்கையோடு விளையாடுங்கய்யா.. அதை தாங்க முடியாம அவங்களே போய் சேர்ந்துடுவாங்கல்ல.. புரியாத பயலுவோ..

 • R.Nagarajan - CHENNAI,இந்தியா

  மத்திய அரசு,மாநில அரசை ஆளும் மந்திரிகளுக்கு எல்லாமே ஓசில கிடைத்து விடுகிறது. அரசு வீடு , மின்சாரம் போன் செலவு, அரசு வாகனம், பெட்ரோல், வெளி நாடு சென்று வருவது. ஹாஸ்பிடல் செலவு தங்குவதற்கு மிகப்பெரிய பங்களா, இது போக சம்பளம் என்ற பெயரில் மாதம் பல லட்சங்கள், இப்படி எல்லாமே பிரீ யாக கிடைப்பதால் இவர்களுக்கு ஒன்றும் வலிக்காது அல்லது தெரியாது .இவர் சொல்வது போல் அரசு காரணம் இல்லை என்றால் உங்களுக்கு ஒட்டு போட்டவனா காரணம் . இப்படி சொல்வதற்கு இவர்கள் எதற்கு ஆட்சியில் இருக்க வேண்டும் .ஒட்டு போட்ட மக்களை கதற விடும் இவர்களை வரும் தேர்தலில் கதற விட வேண்டும். மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  வின்சிக்கு வேறு வேலை இல்லாததால் போட்டோஷாப் மூலம் அமர்நாத் யாத்திரை சென்று வந்து இப்படி போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள்... அடுத்து வருவது காங்கிரஸ் சார்புள்ள இடதுசாரி நீதிபதி... இனி இவர்களுக்கு கொண்டாட்டம்தான்...

 • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

  தாங்கள் செய்த தவறுக்குக்காக சிறை செல்வதிலுருந்து தப்பிக்க இந்த பந்த். மக்கள் அறிவார்கள். அனால் பிரியாணி, குவாட்டர், 500 ருபாய் என்றால் கூட்டத்திற்கு வர கசக்குமா? இதுவே நிறைய மக்களுக்கு ஒரு வெளியாகிவிட்டது??

 • Karthik - Chennai,இந்தியா

  நேற்று பிஜேபி நண்பர்கள் விலையேற்றத்துக்கு எவ்ளோ கதை விட்டார்கள். இங்கு அவர்கள் கட்சியின் முக்கிய மனிதர் அறிக்கை பாருங்கள். பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தால் ஏற்பட்டுள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண முயற்சித்து வருகிறோம்.இங்கு சொல்ல வேண்டியது தானே எதனால் இப்படி விலையேற்றம் என்று.நூறு சதவீதம் தலை முதல் வால் வரை மிஷ்மானஜ்மெண்ட். மேனேஜ் செய்ய திறமையற்றவர்கள் என்று புரிந்து போனது. இங்கும் வந்தும் சப்பை கட்டுவார்கள். மக்களின் அதிருப்தி விரைவில் வெளிப்படும். அப்போது தான் உணர்வீர்கள்.

 • கைப்புள்ள - nj,இந்தியா

  பொறுப்பு ஏற்று கொல்லுவாயா? மூடனே. நீ முதலில் இன்னும் வளர வேண்டும். அறிவு முதிர்ச்சி இல்லாதவர் அரசியல் பண்ணுவதே தப்பு.

 • அன்பு - தஞ்சை,இந்தியா

  அறிவுரை நன்றாக தான் உள்ளது. ஆனால் மத்தியில் வேறொரு கட்சி ஆளும் போது, இதே அறிவுரையை பிஜேபி பின்பற்றுமா? பந்த் நடத்துவதால், பெட்ரோல் விலை குறையபோவதில்லை. ஆனால் அமைதியான பேரணி மூலம், காங்கிரஸ் மக்களின் எதிர்ப்பை காட்ட முடியும். பந்த் நடத்துவது, சரியல்ல.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement