Advertisement

பந்த்: சில மாநிலங்களில் வெற்றி

புதுடில்லி: பெட்ரோல், டீசல் விலை, வரலாறு காணாத வகையில் தொடர்ந்து அதிகரித்து வருவதை கண்டித்து, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இன்று(செப்.,10) நடத்திய, நாடு தழுவிய, வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தியது. இதில், கேரளா, கர்நாடகா, பீஹார், ஒடிசா, அருணாசல பிரதேசம் மாநிலங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. மற்ற மாநிலங்களில் தோல்வியை தழுவியது.

சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளது. அதேபோல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இதனால், பெட்ரோல், டீசல் விலை, தொடர்ந்து புதிய உச்சங்களை எட்டி வருகிறது. அதிகபட்சமாக, மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில், பெட்ரோல், லிட்டருக்கு, 87 ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது.

சென்னையில், இதன் விலை, 83 ரூபாயை எட்டி வருகிறது. இதையடுத்து, பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, காங்., உள்ளிட்ட, 21 எதிர்க்கட்சிகள் சேர்ந்து, நாடு முழுவதும், இன்று ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தன.

'பாரத் பந்த்' எனப் பெயரிடப்பட்ட இந்த போராட்டத்துக்கு, சில மாநிலங்களில் மட்டுமே ஆதரவு காணப்பட்டது. இந்த போராட்டத்தை, டில்லி, ராஜ்காட் பகுதியில், காங்., தலைவர் ராகுல் துவக்கி வைத்தார். போராட்டம் துவங்கியதை குறிக்கும் வகையில், கைலாஷ் மானசரோவர் யாத்திரையின்போது எடுத்து வரப்பட்ட புனித நீரை, அவர் தெளித்தார்.

பின், பிற எதிர்க்கட்சிகளின் தலைவர்களுடன் சேர்ந்து, ராஜ்காட்டில் உள்ள ராம்லீலா மைதானத்துக்கு ராகுல் சென்றார். பாரத் பந்த்திற்கு, டில்லி யில் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. பல இடங்களில் வாகனங்கள் வழக்கம் போல் இயங்கின; கல்வி, வர்த்தக நிறுவனங்கள் செயல்பட்டன. கேரளா, கர்நாடகா, பீஹார், ஒடிசா, அருணாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மட்டுமே, 'பந்த்'தால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

உ.பி., மேற்கு வங்கம், மிசோரம் ஆகிய மாநிலங்களில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. மஹாராஷ்டிரா, தெலுங்கானாவில் ஓரளவு ஆதரவு கிடைத்தது. ஜார்க்கண்டில், கடைகளை அடைக்க வலியுறுத்திய, காங்.,கைச் சேர்ந்த, 58 பேரை, போலீசார் கைது செய்தனர்.

ஆதரவு அளிக்காத கட்சிகள்மேற்குவங்க மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங். கட்சி
ஓடிசாவில் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதா தள கட்சி .
ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி.
தெலுங்கானாவில் காபந்து முதல்வர் சந்திரசேகரராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி ,
டில்லியில் முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆகிய கட்சிகள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தரவில்லை.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (27)

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  ஒவொரு type வாகனத்துக்கும் மாதம் இவ்வளவு எரிபொருள் வரையறை செய்ய வேண்டும் அதட்கு மேல் வாங்குவர்களுக்கு எக்ஸ்ட்ரா பணம் நிர்ணயிக்க வேண்டும்.

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  உலக நாடுகளே பாதிக்கப்படும் போது உள்ளூறும் [பாதிக்கப்படவே செய்யும் இதை மக்கள் புரிந்து கொண்டார்கள் . காங்கிரஸ் கடன் வாங்கி மானியம் கொடுத்தது , பாஜக கடனை கொடுத்து மானியத்தை கட் செய்தது . கடன் இல்லாமல் இருப்பதே நல்லது , நம் உபயோகத்தை சற்று குறைத்து கொள்வோம்.

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  விலை உயர்வு என்பதால் விட்கும் அளவு எதுவும் குறைந்து இருக்கிறதா ???

 • Solvathellam Unmai - Chennai,இந்தியா

  ரிப்போர்ட் மாத்தியதற்கு நன்றி

 • Ramachandran Madambakkam - Chennai,இந்தியா

  தமிழக மக்கள் சுயமாக சிந்திக்கும் ஆற்றல் பெற்றவர்கள். அதனால் பதினைந்து கட்சிகள் அல்ல நூறு கட்சிகள் ஒருங்கிணைந்து பந்த் நடத்தினாலும் அது தேவையற்ற ஒன்று என்று அவர்கள் கருதினால் அதை தோல்வி அடைய செய்வார்கள்.

 • narayanan iyer - chennai,இந்தியா

  உண்மையில் இந்த போராட்டத்தில் எல்லா மாநிலத்தினரும் சேர்ந்து செய்திருக்க வேண்டும் . இது ஒன்றும் மாநில பிரச்சினையல்ல நாட்டின் பிரச்சனை. இதை ஒரு அரசியல் சாயம் பூசி முடித்துவிட்டார்கள் . யார் மணிக்கட்டுவது? அரசியல் கட்சிகள்தான் போராடமுடியும் . அதற்க்கு காங்கிரஸ் தலைமையேற்றது இதில் தவறு கண்டுபிடித்து தோல்வியடைய செய்துவிட்டார்கள் . ஆகவே இது ஆளும் கட்சிக்கு சாதகமானது மீண்டும் விலையேற்ற மக்கள் மாக்கள் ஆகிவிட்டார்கள் என்ன செய்ய? இந்த பந்தை வீணாக்கிய கயவர்களுக்காக வருந்துகிறேன்

 • நாஞ்சில் நாடோடி - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  காங்கிரஸ் தனது செல்வாக்கைக் காட்ட எதிர் கட்சிகளை துணைக்கழைத்து தனது தலைமையில் பாரத் பந்தை நடத்தியது. ஆனால் எதிர் கட்சிகள் காங்கிரசுக்கு ஆதரவு கொடுக்கவில்லை. மக்கள் ஆதரவு கூட ஆளும் பா ஜ க - கட்சிக்குத்தான் இருக்கிறது. மக்கள் செல்வாக்கை இழந்த காங்கிரசை மாநிலங்களில் உள்ள அவர்கள் கூட்டணி கட்சி கூட ஆதரவு கொடுக்கவில்லை என்பதே உண்மை. வெகு விரைவில் தமிழ் நாட்டில் தி மு க - என்ற கட்சி காங்கிரஸ் என்ற கட்சியை கூடா நட்பாகக் கருதி கூட்டணியை விட்டு விலகும்...

 • R Sanjay - Chennai,இந்தியா

  பெட்ரோல் டீசல் விலை ஏற்றத்தை எதிர்த்து போராட்டம் நடத்த காங்கிரசுக்கு அருகத்தையே இல்லை. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த பெட்ரோல்/டீசல் விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்களுக்கே தாரைவார்த்தது இந்த காங்கிரஸ் தான் அப்போது இதை எதிர்த்து குய்யோ முய்யோ என்று பிஜேபி கூப்பாடு போட்டது. பிஜேபி ஆட்சிக்கு வந்தவுடன் காங்கிரஸ் என்னென்ன தவறுகள் செய்ததோ அதை எல்லாமே ஒன்றுவிடாமல் அதற்கும் மேல் பணமதிப்பிழப்பு GST என்று வட்டியும் முதலுமாக பிஜேபி மக்களை வைத்து செய்துவிட்டது. இந்த இரண்டு கட்சிகளுமே மக்கள் புறக்கணிக்கவேண்டும்.

 • ஸாயிப்ரியா -

  பொதுமக்கள் சிறு குறு வியாபாரிகள் அவசர பயணம் மேற்கொள்பவர்கள் மனக்கசப்பும் சில கடைகளில் நடந்த அராஜக சண்டையும் வன்முறையும் தான் மிச்சம்.அதனால் தான் பந்த் பிசுபிசுப்பு.

 • ramanathan - Ramanathapuram,இந்தியா

  இந்த சண்டாளர்கள் எனது தேசத்திலிருந்து மோடியை அப்புறப்படுத்திவிட்டு தேசத்தை சுடுகாடாக்கப்பார்கிறார்கள்

 • ramanathan - Ramanathapuram,இந்தியா

  இந்த போராட்டம் தேவையற்றது. மோடி தலைமையிலான எங்கள் அரசு எதற்கும் அஞ்சப்போவதில்லை.

 • San - Madurai ,இந்தியா

  Pappu have no idealogy and no consistent

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  மக்களின் சகஜ வாழ்க்கைக்கு குந்தகமாக உள்ளது எதுவும் வென்றதில்லை...

 • Siva - Aruvankadu,இந்தியா

  ஷேம். ஷேம். பப்பு ஷேம்....

 • சுப்பையா, கருப்பட்டி வியாபாரம். - முடிவைத்தானேந்தல் ,இந்தியா

  ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த கால நிகழ்வுகளில் எனக்கு நேரடிப் பரிச்சயம் இல்லை ஆனால் விபி சிங் பிரதமராக இருந்த காலம் முதல் தற்போது வரை தேசிய அரசியலில் ஓரளவு பரிச்சயமுண்டு. மாநில வாரியாக கட்சிகளின் நிலை, முக்கியத் தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகள், அரசியல் கணக்குகள், தேர்தல் உடன்பாடு, பொருந்தாக் கூட்டணி, நம்ப வைத்துக் கழுத்தறுக்கும் கட்சிகள், பல்வேறு மாநிலங்களில் உள்ள மாநிலக்கட்சிகள் ஒரு குறிப்பிட்ட குடும்பத்தின் பிடியில் சிக்கி சீரழிவது என நாட்டின் அரசியல் ஓரளவு தெரியும் ஆனால் இன்றைய ஒரு நிகழ்வு இதுவரை நான் பார்த்திராதது. ஒரு ஆளுங்கட்சி அதுவும் அக்கட்சியின் ஆட்சிக்காலத்தின் இறுதி வருடம் (தேர்தல் நடந்து முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்பு தான் அதே கட்சி மீண்டும் ஆளுங்கட்சியாகுமா என்பது உறுதியாகும்) என்ற பகுதியில் இருக்கும் போது ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலை என்பது சிறிதளவாவது வெளிப்படும். அது இயற்கை. குறிப்பாக எதிர்க்கட்சி ஆளுங்கட்சிக்கு எதிராக அகில இந்திய அளவில் வேலை நிறுத்தம் செய்யும் போதும், எதிர்க்கட்சி ஆட்கள் கடைகளை அடைக்க சொல்லி மிரட்டும் போதும் கடைகள் அடைக்கப்படுவது நம் தேசத்தைப் பொறுத்தவரை வாடிக்கையாகிப் போன விஷயம். முதல் முறை மாணவ பருவத்தில் உள்ள ஒரு பெண், கடையை அடைக்க சொல்லி கும்பலாக வந்து மிரட்டும் கட்சியினரை தனிக்குரலாக துணிந்து எதிர்த்து கோஷமிடுவதும், பிரதமரை வாழ்த்தி முழங்குவதும், பாரத மாதாவைப் போற்றிப் புகழ்ந்து உரைப்பதும் இது வரை காணாதது. அந்தப் பெண்ணின் வீரத்தைப் பார்த்து பொதுமக்களும் அவருக்கு ஆதரவாக அணி திரள்வதும், மக்களின் எதிர்ப்பை சமாளிக்க முடியாது கட்சி அடிவருடிகள் அஞ்சுவதும், மூடிய கடைகள் மீண்டும் திறக்கப்படுவதும்... உண்மையில் தேசம் கண்ட மாபெரும் புரட்சி என்றால் அதுவும் மக்களின் எழுச்சி என்றால் அது இது தான் காங்கிரஸ் கட்சியின் போக்கும், ஆளுங்கட்சிக்கு எதிரான நிலைப்பாடை எடுத்துள்ள பிற கட்சிகளின் செயலும், அவர்களின் போலி மதசார்பின்மை சித்தாந்தங்களும், துணிவாக நேர்மையாக உண்மையான நடு நிலையுடன் அனைத்து விஷயங்களையும் அணுகாத கோட்பாடுகளும், இந்த கேவலமான செயலை ஆதரிக்கும் மட்டமான ஊடகங்களும், முற்போக்கு வாதிகள், சித்தாந்த ரீதியில் ஒவ்வொன்றையும் அணுகுபவர்கள் என்று காட்டிக் கொள்பவர்களும், சமூக வலைத்தளங்களில் பிரதமர் என்ற ஒரே காரணத்திற்காக அவர் மீது காழ்ப்புணர்வை வெளிப்படுத்தும் போலி மேதாவிகளும்... என இந்த கும்பலின் மீது சாமானியர்கள் எந்தளவு வெறுப்புடன் இருக்கிறார்கள். அவர்களின் தேச விரோத நடவடிக்கைகள் மக்களை எந்தளவு காயப்படுத்தி இருக்கிறது என்பதை அந்தப் பெண்ணின் வீரச் செயல் வெளிப்படுத்தி இருக்கிறது. மேலே குறிப்பிட்ட கட்சிகளும், பிற போலி வாதிகளும் தங்களின் கேவலமான புத்தியில் சிந்திப்பதை விட்டொழிக்காவிட்டால் மக்கள் முழுவதுமாக அவர்களைப் புறக்கணிப்பார்கள் என்பது உறுதி. வால் துண்டு : இப்பதிவு சிலரின் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கலாம், சித்தம் கலங்கி பித்தை கூடுதலாக்கலாம் ஆனால் அதற்காக என்னால் இப்பதிவினை எழுதாமல் இருக்க முடியாதுங்க தோழர் (களே)

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  பெட்ரோல் விலையேற்றத்தால் பலருக்கு இன்னும் பாதிப்பு வரவில்லை போலும்... சென்ற அரசு கடன் சுமையையும் வருங்காலத்தையும் அழித்து எண்ணெய் விலையை மானியத்தில் விற்று எண்ணெய் நிறுவனங்களுக்கு தொடர்ந்து லாபத்தை தந்தது... இந்த அரசு எண்ணெய் விலை குறைவாக இருக்கும் பொழுது சென்ற அரசு விட்டுச்சென்ற கடனை அடைத்து மாநிலங்களுக்கு வரி வருவாயையும் அதிகரித்து துண்டு விழாமல் சரிக்கட்டி வருகிறது... இதில் வருங்காலத்தை அழிக்க நினைத்தவர்கள் நல்ல நிர்வாகிகளா அல்லது - சென்ற அரசு விட்டுச்சென்ற கடனை அடைத்து மக்களின் கடன் சுமையை குறைத்து அரசு இயந்திரம் இயக்க வழிவகுத்தவர்கள் நல்ல நிர்வாகிகளா என்பதை கட்சியை கணக்கில் கொள்ளாமல் சிந்திக்கவேண்டும்.

 • Solvathellam Unmai - Chennai,இந்தியா

  இந்த டூமீல்ஸ் எல்லாம் ரொம்பநாள் செல்லாது... ஜாக்கிரதை

 • s t rajan - chennai,இந்தியா

  பெட்ரோல் விலை வாசி அதிகம் தான்..... ஆனா விலைவாசி உயர்வு விகிதம் உங்க ஆட்சி காலத்திலே தானைய்யா ரொம்ப அதிகம். உங்க மௌன குரு மன்மோஹனும் அண்ட் வெள்ளை வேட்டி சிதம்பரமும் தானையா இன்னக்கி உள்ள நிலைமைக்கு மூல காரணம் என்று எங்களுக்கு தெரியாதா என்ன ? சும்மா பொசுக்கு பொசுக்குன்னுட்டு பந்த் பண்ணிக்கிட்டிருந்தே ..... உன்னை 2019 க்கு முன்னாடியே அரசியல் களத்திலே இருந்து பந்தாடிடுவாங்க மக்கள். ஓரமா உட்கார்ந்து சொந்தமா யோசி... தம்பி... நேஷனல் ஹெரால்டு மூலமா கொள்ளைடியடிச்சீங்களே அதில கொஞ்சம் எடுத்து விடு.... பெட்ரோல் விலை தான கீழ வந்திடும்.

 • Karthik - Chennai,இந்தியா

  ஜால்ரா சத்தம் கொஞ்சம் overa தான் போய்கிட்டு இருக்கு. உங்களை தவிர எல்லோரின் ரிப்போர்ட் வேற மாதிரி இருக்கு

 • ஈரோடுசிவா - erode ,இந்தியா

  மக்கள் நலனை கருத்தில் கொள்ளாமல் சொந்த ஆதாயத்திற்காக தேவையற்ற , பயனற்ற போராட்டங்களை நடத்தினால் மக்கள் ஏற்கமாட்டார்கள் ....இந்த அடிப்படை அறிவுகூட இல்லாத பப்புவும் , சுடலையும் எந்தகாலத்திலும் கடைதேற முடியாது .

 • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

  பிசுபிசுப்புன்னா போலீஸ் எதுக்கு இம்புட்டு பெரிய தடியை கொண்டாந்துருக்கு?

 • Arasu - Madurai,இந்தியா

  பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நடந்த போராட்டம் பிசுபிசுப்பு படு சந்தோஷம் போலிருக்கு , மோடியிடம் சொல்லி , பெட்ரோல் விலை 150 ரூபாயா உயர்த்த சொல்லுங்க

 • நக்கல் -

  ராகுல் "கை" வெச்ச எதுவும் உருப்படாது, பிசுபிசுத்தான் போகும்...இது 2019 தேர்தலிலும் இப்படித்தான் ஆகும்.. வாழ்க மோடி வளர்க பாரதம்...

 • Vaideeswaran Subbarathinam - Bangalore,இந்தியா

  குறைந்த பட்சம் இரண்டு கார்கள், இரண்டு இருசக்கர வாகன ங்கள் அநேகரிடம் உள்ளது.

 • வெகுளி - Maatuthaavani,இந்தியா

  போராட்டம் பிசுபிசுத்தத்தை கண்டித்து போராட்ட்டம் நடத்துவோமா போராளீஸ்?.......

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement