Advertisement

முதுகை படியாக்கியவருக்கு கார் பரிசு

மலப்புரம்: கேரளாவில் வெள்ள பாதிப்பின் போது, தனது முதுகை படிக்கெட்டாக்கி, பெண் ஒருவர் படகில் ஏற உதவி செய்த மீனவருக்கு கார் பரிசு கிடைத்துள்ளது.


கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், வென்கரா பகுதி வெள்ள நீரால் சூழப்பட்டு இருந்தது. வெள்ளத்தால் சூழப்பட்டு இருந்த வீடுகளில் தங்கி இருந்த மக்களை ராணுவ வீரர்கள் மீட்டனர். அவர்களுக்கு உதவியாக, 300 மீனவர்களும் களம் இறங்கினர். ஒரு இடத்தில் வெள்ளத்தில் சிக்கி கொண்ட பெண்ணை மீட்க மீனவர்களின் உதவி நாடப்பட்டது. அவர்களுக்கு ரப்பர் படகை தேசிய மீட்பு படையினர் அளித்தனர்.

மீட்பு படகில் சென்ற கே.பி.ஜெய்ஸ்வால் என்ற மீனவர், அந்த பெண் ரத்த போக்கினால் பாதிக்கப்பட்டு இருப்பதையும் , அவரால் தானாக படகில் ஏற முடியாது என்பதையும் உணர்ந்து, எதை பற்றியும் யோசிக்காமல் நீருக்குள் முட்டி போட்டு தனது முதுகையே படிக்கெட்டாக மாற்றினார். அவர் மீது ஏறி, அப் பெண் படகில் அமர்ந்து கொண்டார். இந்த படம் சமூக வலை தளங்களில் அதிகமாக பரவி, அந்த மீனவருக்கு பாராட்டுகள் குவிந்தன.


இச்சூழ்நிலையில், மகிந்திரா நிறுவனத்தின் கோழிக்கோடு டீலர் எராம் மோட்டார்ஸ் மீனவர் ஜெய்வாலுக்கு புத்தம் புதிய மகிந்திரா மாரசோ காரை பரிசாக அளித்து அசத்தியுள்ளது.


Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (28)

 • Hari r - tiruvottiyur,இந்தியா

  நல்ல ஊக்குவிப்பு ,கொடுக்க மனசு இருக்கணுமே நன்றி

 • Sakthi - Chennai,இந்தியா

  கார் கொடுத்த மகராசன் டீசல் ஒரு ஆயிரம் லிட்டர் கொடுத்திருந்த எவ்வளவு புண்ணியமா போயிருக்கும். இப்ப இருக்கிற விலைவாசியிலே அவரு காரை வாடகைக்குத்தான் விடணும் .

 • Selvakumar Krishna - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  மிக அருமை காலத்தினால் செய்யும் உதவி ஞாலத்திலும் சால பெரிது

 • nicolethomson - bengalooru,இந்தியா

  அந்த மீனவருக்கு வாழ்த்துக்கள், அந்த பெண்மணியின் பின்னாலேயே ஒரு எருமை மாடு ஏறி போச்சே அந்த மலையாளச்சியை ஒண்ணுமே சொல்லமுடியாது அல்லவோ?

 • Thalapathy - devakottai,இந்தியா

  கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே. பலன் ஏதோ ஒரு ரூபத்தில் வரும்.

 • sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா

  முட்டி போட்டு முதுகை காட்டி உதவியருக்கு நன்றி. ஆனால் அவருக்கு கார் கொடுத்ததை குறை சொல்லவில்லை. காருக்கு பதிலாக புதிய மீன் பிடி வலை - மிஷன்படகு இது போன்று வாங்கிக் கொடுத்தால் அவருக்கு அவைகள் பயன்படும். காரை வைத்து என்ன செய்வார்? காரை உடனே வந்த விலைக்கு வித்து விடுவார். ஆதலால் யாருக்கு என்ன தேவையோ அதை அறிந்து கொடுத்தால் நல்லதாக இருக்கும். நான் யாரையும் குறை சொல்லவில்லை.

 • ravichandran - avudayarkoil,இந்தியா

  எப்பா அந்த அம்மாவை தூக்கி வச்சுருக்கலாமே இது ரொம்ப ஓவரா இல்ல? நாடும் கேமராவும் போட்டோவும் வாட்ஸசாப்பும் சமூக வலை தளமும் எங்கேயோ போயிட்டு இருக்கு

 • Radj, Delhi - New Delhi,இந்தியா

  மகிந்திரா நிறுவனத்தின் கோழிக்கோடு டீலர் எராம் மோட்டார்ஸ் மீனவர் ஜெய்வாலுக்கு புத்தம் புதிய மகிந்திரா மாரசோ காரை பரிசாக அளித்தது மிகவும் சந்தோஷமான செய்தி. வாழ்த்துக்கள்.

 • S.Baliah Seer - Chennai,இந்தியா

  ஜெய்ஸ்வால் நீர் சாதாரண மனிதரல்ல.மனிதருள் மாணிக்கம்.உம்மை வாழ்த்தி வணங்குகிறேன்.

 • SB.RAVICHANDRAN -

  super excellent

 • R Sanjay - Chennai,இந்தியா

  இது தான் பலனை எதிர்பார்க்கலாம் செய்யும் உதவிக்கு கிடைக்கும் பரிசு.

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  கார் கிடைக்கவேண்டும் என்கிற அதிஷ்டம் இருக்கிறது , அது மழை வெள்ளம் மூலம் கிடைக்க வேண்டும் என்று இருக்கிறது.

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  நல்லது செய்தால் நல்லதே திருப்பி கிடைக்கும்.

 • ஜெயந்தன் - Chennai,இந்தியா

  ஆபத்தில் இருப்பவர்களுக்கு " சொக்காய் " கிழிஞ்சவன் தான் உதவிக்கு வருவான்....

 • jeya - CHENNAI ,இந்தியா

  Valthukkal

 • raghavan - Srirangam, Trichy,இந்தியா

  நல்ல செயலுக்கேற்ற அங்கீகாரம் கிடைப்பதும் பாராட்டப்படவேண்டிய விஷயம்தான். ஒருவர் அல்ல, பலர் அவர் முதுகின் மேல் ஏறித்தான் படகில் உட்கார்ந்தார்கள்.

 • Thalaivar Rasigan - CHENNAI,இந்தியா

  எப்பவுமே நல்ல மனசு இருந்தால், எந்த நேரத்திலும் அதிர்ஷ்டம் அடிக்கும். கடவுள் கொடுப்பதை யாராக இருந்தாலும் தடுக்க முடியாது.

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  வாழ்த்துக்கள். பணம் சம்பாதித்தால் மட்டும் போதாது அதை சமூக சேவைகளுக்கும் , ஊக்கப்படுத்துவதற்கும் பயன்படுத்த வேண்டும்.

 • ருத்ரா -

  உதவியையும்,உதவியவரையும் கௌரவ படுத்தியிருக்கிறார்கள். மனிதநேயம் கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.

 • Tamilachi - crawley,யுனைடெட் கிங்டம்

  உன்னைப் போன்ற மகனை பெற உன் தாய் புண்ணியம் செய்திருக்க வேண்டும்....

 • N.Purushothaman - Kuala Lumpur ,மலேஷியா

  மஹிந்திரா நிறுவனத்திற்கும் ஜெய்ஸ்வாலுக்கும் வாழ்த்துக்கள் ..

 • பாலா -

  இதில் ஏதாவது உள் அர்த்தம் உள்ளதா?

 • Anand - chennai,இந்தியா

  சூப்பர்... அந்த மீனவருக்கு வாழ்த்துக்கள்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement