Advertisement

தொடர் சரிவில் ரூபாய் மதிப்பு : 72.67 ஐ எட்டியது

மும்பை : சர்வதேச அன்னிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து கடுமையான சரிவை சந்தித்து வருகிறது. இன்றும் (செப்.,10) ரூபாய் மதிப்பு வரலாற்றில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு சரிந்துள்ளது.செப்., 7 ம் தேதி வர்த்தக நேர இறுதியில் 71.73 ஆக இருந்த ரூபாய் மதிப்பு இன்று காலை வர்த்தக நேர துவக்கத்தின் போது 45 காசுகள் சரிந்து 72.15 ஆக இருந்தது. சிறிது நேரத்தில் மேலும் சரிந்து 72.18 என்ற புதிய உச்சபட்ச சரிவு நிலையை அடைந்துள்ளது. இதற்கு முன் செப்.,6 ம் தேதி 72.11 என்ற அளவிற்கு சரிந்ததே உச்சபட்ச சரிவாக கருதப்பட்டது. இந்நிலையில் பிற்பகல் வர்த்தகத்தின் மேலும் ரூபாய் மதிப்பு மிக கடுமையாக சரிந்து அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தது.


பிற்பகல் 1 மணி நிலவரப்படி ரூபாய் மதிப்பு 94 காசுகள் சரிந்து 72.67 ஆக இருந்தது. சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் முன்பு எப்போதும் இல்லாத கடும் சரிவை எட்டி உள்ளது.


சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தின் காரணமாக எண்ணெய் உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் அமெரிக்க டாலரை அதிகம் வாங்கி வருகின்றனர். டாலரின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால் ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. மற்ற நாடுகளின் நாணயங்கள் டாலரை ஆதரித்து வரும் நிலையில், அமெரிக்கா - சீனா இடையேயான வர்த்தக போர் தீவிரமடைந்தால் அது ரூபாய் மதிப்பிற்கு மேலும் அழுத்தத்தை கொடுக்க வாய்ப்பு இருப்பதாக சந்தை நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (20)

 • Balasubramaniam - Tirupur,இந்தியா

  டாலர் 100 ரூபாய் வந்தால் கூட கூச்சம் இல்லாமல் அதை அரசின் சாதனை என்று சொல்லும் அளவிற்கு அகங்காரம் அறிவை மறைக்கிறது. வாஜ்பாய் 40 ரூபாய்க்கு கொண்டு வந்தார். அந்நிய முதலீடு இல்லை. பொருளாதார தடை இருந்தது. இப்போது ... பூனை புலி அல்ல என்று 4 ஆண்டு முடிந்தும் உணரவில்லை

 • tamil - coonoor,இந்தியா

  இதுக்கும், மத்திய அரசுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை, ஆட்சி மட்டும் தான் எங்கள் தலைமையில் நடக்குது மற்ற அனைத்தும் யார் தலைமையில் நடக்கிறது என்று தெரியாது, தீவிரவாதிகளின் சதியாக இருக்கலாம்

 • தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா

  ஏற்றுமதியாளர்கள் வளரும் காலம். வாழ்த்துக்கள் மோடிஜி

 • Velayudham - Chennai ,இந்தியா

  When Crude oil 44 and dollar 65 Government not pass on benefit to Public. They increased Duty and now what ever be the international reason they take measures to stop unwanted import like gold , Mobile phone etc. They can reduce duty. They can give subsidy to oil companies. That is called welfare govt. they have settled 2lack cr from public money not from their packet. Now situation is crucial they can again do something. but justifying . This is not good welfare govts attitude. How lower salary people impacted due to this? Time will give reply to this govt. Over confident . Within a day all will change. we are watching and waiting for situation.

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  எங்களுக்கு இது நல்ல செய்திதான். டிசம்பர் வரை ஏறிக்கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் பெரிய முதலீடுகளை இந்திய ரூபாயில் செய்வதாக உத்தேசம்.

 • abdul rajak - trichy,இந்தியா

  சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தின் காரணமாக////// கடந்த மூன்று மாதமாக கச்சா என்னை விலை 73 -76 தான் . இதை போன மாதம் எழுதி உள்ளேன் .

 • Rafi - Riyadh,சவுதி அரேபியா

  திரு மோடிஜி 2014 பொது தேர்தலுக்கு முன் ரூபாய் மதிப்பு, ஸ்ரீலங்காவில், பங்களாதேஷில் , பாகிஸ்தானில் சரியாமல் நம் நாட்டில் மட்டுமே சரிக்கின்றதே என்று வீராவேசம்மாக பேசியது இப்போது வலை தளத்தை கலக்கி கொண்டிருக்கு, இவரின் ஆட்சியில் புதிய உட்சங்களை பலமுறை கடந்து விட்டது. பொருளாதார நிபுணர் ஆட்சியில் பெட்ரோல் விலை உலக மார்க்கட்டில் உட்சபட்ச நிலையில் (120 டாலர்) இருந்த போதும் இந்தியாவில் அதிகப்பட்ச விலையாக 75.30 என்ற விலையில் இருந்தது. டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 63 என்ற நிலையில் இருந்தது. வளர்ச்சி நாயகனின் ஆட்சியில் வளர்ச்சி, வளர்ச்சி என்பதன் பொருள் இதுதான் என்பது இப்போது தான் நமக்கு புரிகின்றது.

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  ஆமாம். தெரியாமத்தான் கேக்கறேன். ஜல்லிக்கட்டுபோராட்ட சமயத்துல நாட்டுமாடு A2 பால் கருப்பட்டி இளநீர் நுங்கு சிறுதானிய உணவு சாப்பிடுங்க . சீமாரசா தயாரிப்பு அந்நிய ஜங்க் பொருள் ஓட்ஸ் கெல்லாக்ஸ் ஹார்லிக்ஸ் பீட்சா பெப்சி கோலா பர்கர் அடியோடு தவிருங்கன்னு முழங்கின டூமீல்ஸ்ல பாதிபேர் அப்படி செஞ்சிருந்தாலே இறக்குமதி குறைஞ்சு அந்நியச்செலாவணி மதிப்பு ஏறியிருக்குமே. அப்போ அது ஒளவாகட்டி போலிப்போராட்டமா? 

 • joy - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  வெளிநாட்டில் வேலை பார்க்கும் இந்தியன் என்ற வகையில் ரூபாய் சரிவு ஒருபுறம் மகிழ்ச்சி தான் என்றாலும் மறுபுறம் வேதனை அளிக்கிறது. நான் 2000ஆம் ஆண்டு துவக்கத்தில் இங்கே வேலையில் அமர்ந்த போது AED நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 10.25 ஆனால் இன்று ரூபாய் 20தை அடைந்துள்ளது. 17ஆண்டுகளுக்கு முன் நான் இங்கே உள்ள சிறிய Teaகடையில் அருந்திய டீயின் விலை 1aed அன்று இந்தியாவில் ரூ 2.50. இன்றும் இங்கே teaயின் விலை aed 1.00தான் ஆனால் இந்தியாவில் ரூபாய் 10.00. அன்று USD to aed 3.66 என்ற rateல் இன்று வரை எந்த மாற்றமும் இல்லை. இதற்கும் இங்கே மக்களின் மீது பெரிய அளவில் வரிவிதிப்பு என்று இல்லை. எப்படி சாத்தியம் என்று தெரியவில்லை. Crude oil வருமானம் என்று கூறினாலும் அந்த வருமானம் உணவு இறக்குமதிக்கு செலவிடபடுகிறது. இங்கே ஊழல் என்பது மிகவும் குறைவு உழைத்தால் தான் ஊதியம். குற்றங்களில் விரைவில் தீர்ப்பு என்று சில காரணம் சொல்லலாம். விரைவில் இந்திய ரூபாய் சரிவில் இருந்து மீளும் என்று நம்புகிறேன்.

 • Narayanan Muthu - chennai,இந்தியா

  எதை ஆயுதமாக கொண்டு ஆட்சிக்கு வந்தார்களோ அதனாலேயே வீழ்வது உறுதியாகி விட்டது. தன் வினை தன்னிச்சையாக சுடும் .

 • Narayanan Muthu - chennai,இந்தியா

  எதை ஆயுதமாக கொண்டு ஆட்சிக்கு வந்தார்களோ அதனாலேயே வீழ்வது உறுதியாகி விட்டது. தன் வினை thannai சுடும் .

 • hussain - cuddlore,இந்தியா

  ஆட்சியை தூக்கிப்போட்டுட்டு போங்கப்பா ஆட்சி செய்ய தெறியாத ஆட்களிடம் ஆட்சியை ஒப்படைத்தால் இப்படி தான் நாடு படு பாதாளத்துக்கு போய்க் கொண்டு இருக்கிறது

 • ஆப்புஹை -

  அச்சே தின் ஆத்தே ஹை.....அமெரிக்கா நம்ம தோஸ்த் ஹை....ரஷ்யாவும் தோஸ்த் ஹை.. சவுதியும் தோஸ்த் ஹை... இஸ்ரேலும் தோஸ்த ஹை... இந்தியா ஸ்ட்ராங் ஹை.. வெல்ல முடியாது ஹை... விலைவாசி ஓக்கே ஹை... நோட்பந்தி வெற்றி ஹை... கருப்பு பணம் வரலை ஹை... 15 லட்சம் வரும் ஹை... ஆனா வராது ஹை.. பி.ஜே.பி க்கு ஓட்டு போடுங்க ஹை... ஒண்ணுமே புரியல ஹை..

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement