Advertisement

ஸ்னூக்கர் போட்டி: மாணவர்கள் தேர்வு

மதுரை:மதுரையை சேர்ந்த மாணவர்கள் பிரணவ் நாத், மோகிதா ரஷ்யாவில் நடக்கும் ஸ்னுாக்கர் போட்டிக்கு தேர்வாகியுள்ளனர்.டில்லியில் நடந்த ஸ்னுாக்கர் செலக்ஷன் கேம்பில்32 மாணவர்கள் பங்கேற்றனர். மதுரை சேத்தனா பள்ளியில் 11வது படிக்கும் பிரணவ் நாத் முதல் ஆறு போட்டியாளர்களில் ஒருவராக தேர்வானார். பெண்கள் பிரிவில் பங்கேற்ற மூன்று மாணவிகளில் ஒருவராக ஜீவனா பள்ளியில் 10வது படிக்கும் மோகிதா தேர்வானார்.அவர்கள் கூறுகையில், 'நாங்கள் பாட் பிளாக் பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்னுாக்கர் அகாடமியில் பயிற்சி பெறுகிறோம். எங்கள் வெற்றிக்கு பயிற்சியாளர் பார்த்திபராஜேந்திரன், பள்ளி நிர்வாகத்தினர், பெற்றோர் உறுதுணையாக இருந்தனர்,'என்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement