Advertisement

தென்மாவட்ட சிலம்பம் போட்டி: மதுரை மாணவர்கள் சாதனை

மதுரை:மதுரை சாய்ராம் மெட்ரிக் பள்ளியில் சப்தமம் சிலம்பம் அகாடமி சார்பில் தென்மண்டல சிலம்பம் போட்டி நடந்தது.விளையாட்டு, கலாசார வளர்ச்சி கழக பொதுசெயலர் ராஜா வரவேற்றார். தலைவர் அன்புகுழந்தைவேல் தலைமை வகித்தார். மாநில சுகாதார ஆய்வாளர்கள் சங்க தலைவர் விஜயகுமார், பேராசிரியர் ஆர்த்தி துவக்கி வைத்தனர்.ஆண், பெண்கள் என தனித்தனியாக போட்டிகள் நடந்தன.

வயது 14 பிரிவில் மதுரை தனபால் மேல்நிலைப் பள்ளி ஈஸ்வரமூர்த்தி, சாய்ராம் மெட்ரிக் பள்ளி விஜயஸ்ரீ ஆகியோர் முதலிடம், ஜோதி மேல்நிலைப்பள்ளி சொக்கலிங்கம், மானாமதுரை அரசு பள்ளி சரண்யா 2 ம் இடம் வென்றனர்.

15 வயது பிரிவில் மதுரை சி.இ.ஓ.ஏ., பள்ளி விஷால் கிருஷ்ணா, மதுரை புனித மைக்கேல் பள்ளி கீர்த்தனாஸ்ரீ முதலிடமும், மதுரை புனித ஜான்ஸ் பள்ளி கவுதம், சாய்ராம் மெட்ரிக் பள்ளி நிவேதிதா இரண்டாம் இடமும் வென்றனர். 16 வயது பிரிவில் மதுரை தனபால் பள்ளி மாணவர் லோகேஸ்வரன், புனித மைக்கேல் பள்ளி கீர்த்தனாஸ்ரீ முதலிடமும், சேத்தனா பள்ளி கவுதம், சாய்ராம் மெட்ரிக் பள்ளி நிவேதிதா இரண்டாமிடம் வென்றனர்.

தனித்திறன் போட்டியில் தனபால் பள்ளி அபிேஷக், சாய்ராம் மெட்
ரிக் பள்ளி பிரதிக் ஷா முதலிடமும், சிவகங்கை, மானாமதுரை அரசு பள்ளி கணேஷ், மதுரை சி.இ.ஓ.ஏ., பள்ளி விஷாலினி இரண்டாம் இடமும் வென்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement