Advertisement

போலி ஏஜன்டுகள் 40 பேர் கைது ரூ.1 லட்சம் ரயில் டிக்கெட்டுகள் பறிமுதல்

சென்னை:முறைகேடாக, ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து, கூடுதல் விலைக்கு விற்ற, 40 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து, 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, ரயில் டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.


அனுமதி பெறாத ஏஜன்டுகள், முறைகேடாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து, கூடுதல் விலைக்கு, விற்பனை செய்கின்றனர் என, தெற்கு ரயில்வே பாதுகாப்பு படை கமிஷனர், பிரேந்திர குமாரிடம், ரயில் பயணியர் புகார் தெரிவித்தனர்.இதையடுத்து, சென்னை ரயில்வே கோட்ட பாதுகாப்பு படை முதன்மை பாதுகாப்பு கமிஷனர் லுாயிஸ்அமுதன், சென்ட்ரல் ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் அழகர்சாமி அடங்கிய குழு அமைக்கப்பட்டது.

ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தில், நுாதனமாக, மற்றவர்களின், ஐ.டி., மற்றும் 'பாஸ்வேர்டு' ஆகியவற்றை பயன்படுத்தி, டிக்கெட் முன்பதிவு செய்து, பயணியரிடம், கூடுதல் விலைக்கு
விற்பனை செய்யும் நபர்களை கண்டறிந்தனர்.அண்ணாநகர், ஆயிரம் விளக்கு, வில்லிவாக்கம் மற்றும் புழுதிவாக்கம் பகுதிகளில், ஜனவரியில் இருந்து, நேற்று முன்தினம் வரை, பல்வேறு இடங்களில் நடத்திய சோதனையில், ரயில்வே அனுமதி பெறாத, போலி ஏஜன்டுகள், 42 பேர் கைது செய்யப் பட்டனர்.அவர்களிடம் இருந்து, 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, ரயில்
டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


கைது செய்யப்பட்ட, போலி ஏஜென்டுகள் அனைவரும், சிறையில் அடைக்கப்பட்டனர் என, சென்னை ரயில்வே கோட்ட ரயில்வே பாதுகாப்பு படை தெரிவித்து உள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement