Advertisement

பெரும்பேடு பள்ளி கபடியில் சாம்பியன்

பொன்னேரி:பொன்னேரி கல்வி மாவட்ட அளவில் நடந்த கபடி போட்டியில், பெரும்பேடு அரசு உயர்நிலைப் பள்ளி மாணவியர் சாம்பியன் பட்டம் பெற்றதற்கு ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்

.
பொன்னேரி கல்வி மாவட்ட அளவிலான, மகளிர் கபடி போட்டிகள், சென்னையை அடுத்த, கோலடி பகுதியில் நடந்தன. ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் ஆகிய மூன்று பிரிவுகளில் நடந்தன.இதில், 14 வயதிற்கு உட்பட்ட ஜூனியர் பிரிவில், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, அம்பத்துார் உட்பட, 18 பள்ளிகளைச் சேர்ந்த, 216 மாணவியர் பங்கேற்றனர்.


இதில், பொன்னேரி, பெரும்பேடு அரசினர் உயர்நிலைப் பள்ளி மாணவியர் முதல் இடத்தை பிடித்து சாம்பியன் பட்டம் வென்றனர்.கோப்பையுடன் வந்த மாணவியரை பள்ளி தலைமை ஆசிரியை மைதிலி, உடற்கல்வி ஆசிரியர் பர்ணபாஸ் ஜெபக்குமார் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.பள்ளி வளாகத்தில் நடந்த காலை வழிபாட்டின்போது, மாணவர்களிடையே, சாம்பியன் பட்டம் வென்ற கபடி வீராங்கனையருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement