Advertisement

மதுரையின் புதிய அடையாளமாக மாறுகிறது பெரியார் பஸ் ஸ்டாண்ட்

மதுரை: மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரை நகரில் ஆயிரம் கோடி ரூபாயில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் விரைவில் துவங்கவுள்ளன. இத்திட்டத்தில் மீனாட்சி கோயிலை சுற்றிய 3100 ஏக்கரில் வளர்ச்சி பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.


நவீனமாகும் பஸ் ஸ்டாண்ட் : பெரியார் பஸ் ஸ்டாண்ட் மேம்பாடு, பழைய சென்ட்ரல் மார்க்கெட்டில் அடுக்குமாடி பார்க்கிங், சுற்றுலா, வைகை மேம்பாடு பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. பெரியார் பஸ் ஸ்டாண்ட்டை மேம்படுத்த 131 கோடி ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. பஸ் ஸ்டாண்ட், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் பஸ் ஸ்டாண்ட்கள் இணைக்கப்பட்டு நவீனப்படுத்தப்படும். தற்போதைய ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் பஸ் ஸ்டாண்ட் இடத்தில் பயணிகளுக்கான அனைத்து வசதிகளுடன் கூடிய கட்டடம், வணிக வளாகம் அமைகின்றன. இரு பஸ் ஸ்டாண்ட்களையும் பிரிக்கும் ரோடு மீது பாலம் அமைகிறது. பழங்காநத்தத்திலிருந்தும், சிம்மக்கல்லிலிருந்தும் வாகனங்கள் பாலம் வழியாக செல்ல முடியும்.


கடைகளை காலி செய்ய நோட்டீஸ் : ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், பெரியார் பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் மாநகராட்சி இடத்தில் கடைகள், விடுதி, டூவீலர் பார்க்கிங் செயல்படுகின்றன. இவற்றை காலி செய்தால் தான் பணிகளை துவக்க முடியும். அதற்கு ஏற்ப வரிபாக்கிகளை செலுத்த நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. காலி செய்யவும் நோட்டீஸ் வழங்கப்படும்.


டூரிஸ்ட் பிளாசா : இங்கு தற்போதுள்ள சைக்கிள் ஸ்டாண்ட்டில் சுற்றுலா பணிகளுக்கான தகவல்கள், சுற்றுலாவை மேம்பாடுத்துவதற்கான வசதிகளை உள்ளடக்கிய 'சுற்றுலா பிளாசா' அமைகிறது. 2.30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் டெண்டர் விடப்பட்டுள்ளது. இங்கிருந்து மீனாட்சி கோயிலுக்கு பேட்டரி கார்களை இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதை மையமாக வைத்து மதுரையிலுள்ள பாரம்பரிய சின்னங்கள் பொலிவுப்படுத்தப்படவுள்ளன.


விரைவில் பணிகள் : திட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டுள்ளன. புராதன சின்னங்களை மேம்படுத்துதல் மற்றும் கலாசார மையம் அமைக்க 63 கோடி, பழைய சென்ட்ரல் மார்க்கெட்டில் அடுக்குமாடி கார் பார்கிங் 28 கோடி, வைகை கரை மேம்படுத்த 93 கோடி மற்றும் குடிநீர், திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட பணிகளுக்கும் 130 கோடி ரூபாயில் திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.கமிஷனர் அனீஷ்சேகர், '' சில திட்டங்களுக்கான டெண்டர் செப்., 20 முடிகிறது. ஒரே நேரத்தில் அனைத்து பணிகளும் துவங்கும். ஒவ்வொரு பணி முடிப்பதற்கான காலக்கெடுவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (14)

 • ரத்தினம் - Muscat,ஓமன்

  வரவேற்கக்கூடிய ஒன்று. நல்ல முறையில், நல்ல தரத்துடன் அழகாக செய்யுங்கள். நிறைய பசுமைகளை அங்கங்கு அமையுங்கள். நிறைய மரங்களை நடுங்கள். இப்போது வெக்கை தாங்க முடியவில்லை.

 • Bhaskaran - Chennai,இந்தியா

  அழகிரி மற்றும் அவரது அல்லக்கைகள் ஆதங்கம் இந்நேரம் பார்த்து தந்தை ஆட்சியில் இருந்தால் ஒருத்தட்டு தட்டியிருக்கலாம்

 • V Gopalan - Bangalore ,இந்தியா

  With this Dinamalar can expose the vaigai river from Anaippatti to Madurai as to how much area is encroached upon, how much garbage dumped besides how much drainage water is discharged on the river et all. Once upon a time, the vaigai banks was full of sand which was really a evening beach, rarely two to three months water may not flow, yet the river was giving a peaceful life to farmers/villages and now it has lost its glory, river banks being used public toilet, early in the morning the garbage will be dumped by viewing all these where the Swatcha Bharat is meant for? Now this is the position but next generation can view only in the map that there was a river.

 • கணபதி -

  நல்லது விரைவில் நடக்கட்டும். மதுரை வாழ்க

 • King of kindness - muscat,ஓமன்

  மிக மிக நல்ல செய்தி. மதுரை மக்கள் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விடலாம். விரைவில் எந்த தொய்வும் இல்லாமல் இத்திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும்.

 • Arasu - OOty,இந்தியா

  1980 இல் மதுரை ஒரு சூப்பர் நகரம் ....ஆனால் இப்போ அது ஓர் நரகம்

 • Welcome Back to 1900AD - korkai,இந்தியா

  CONGRATS மதுரை...................

 • PrasannaKrishnan -

  Try to save vaigai water

 • ருத்ரா -

  Glad to hear.

 • tamil - coonoor,இந்தியா

  இப்படி ஒரு திட்டத்தை நிச்சயம் நமது வாழ்நாளில் பார்க்க முடியாது என்பது உறுதி,

 • Magesh Kumar - Madurai,இந்தியா

  Very eager to c new madurai

 • Rajesh -

  Great News.. Without any scam if all that happens its good..will see

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement