Advertisement

'மத்திய ஆய்வு அறிக்கைக்கு எதிராக வழக்கு தொடருங்க'

சென்னை: 'ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில், மத்திய அரசின் நீர் ஆய்வு அறிக்கையை எதிர்த்து, தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில், வழக்கு தொடர வேண்டும்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
அவரது அறிக்கை: துாத்துக்குடி, 'ஸ்டெர்லைட்' ஆலை மூடப்பட்டு, அது தொடர்பான வழக்குகள், நிலுவையில் உள்ளன. ஆனால், ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக, மத்திய அரசு, நிலத்தடி நீர் ஆய்வு செய்திருப்பது, தமிழக மக்களை வஞ்சிக்கும்செயல்.மத்திய நிலத்தடி நீர் வாரியம், துாத்துக்குடி பகுதிகளில் ஆய்வு செய்த போது, உளவுத்துறை வாயிலாக, தமிழக அரசு அதை அறிந்திருந்தும், வேடிக்கை பார்த்துள்ளது.

இப்போது, மத்திய அரசின் அறிக்கை வெளிவந்த பின், ஏதோ தங்களுக்குத் தெரியாமல் நடந்தது போல், ஒரு கபட நாடகம் ஆடுகிறது.இதிலிருந்து, அ.தி.மு.க., அரசும், மத்திய அரசும், இந்த ஆலையை திறப்பதில், திரைமறைவு கூட்டணி வைத்துள்ளது என்பது தெரிகிறது.சுற்றுச்சூழலுக்கும், சட்டம் - ஒழுங்கு பிரச்னைகளுக்கும் காரணமாக இருக்கும், ஸ்டெர்லைட் ஆலை குறித்த, நீர் ஆய்வு அறிக்கையை, மத்திய அரசு உடனே திரும்ப பெற வேண்டும்.அ.தி.மு.க., அரசு, இந்த ஆய்வு அறிக்கைக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, தடை பெற வேண்டும்.இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (16)

 • ramanathan - Ramanathapuram,இந்தியா

  பத்தாயிரம் குடும்பங்கள் வேலைவாய்ப்பற்ற நிலையில் இருக்கிறார்களே இதற்க்கு ஸ்டாலின் மற்றும் போராட்டம் காரர்கள் இதற்க்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள்

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  மாநிலத்திலுள்ள சூழ்நிலை சீர்கேட்டு ஆலைகள் மற்றும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அரசு அகற்றினால் நான் எதிர்த்துப் போராடமாட்டேன் என சுடலை சத்தியம் செய்வாரா? கட்சியே கலகலத்துவிடும் .முழுக்க திருட்டுகூட்ட்டம்

 • murali - Chennai,இந்தியா

  ஸ்டாலின் நள்ளிரவில் நீதி மன்றத்தை கூட்டிய மாவீரன், தளபதி, அஞ்சாநெஞ்சன், இதற்கு ஏன் கூட்டமாட்டேன் என்கிறார். புரியவில்லை.

 • siriyaar - avinashi,இந்தியா

  Already cable prizes up by 15 percent.

 • Anvardeen - chennai,இந்தியா

  ஐயோ தயவு செய்து யாரவது சொல்லுங்க.. இப்போ இந்த ஆலையை மூடினவுடன் தூத்துக்குடி நீர் நிலைகள் எல்லாம் சரியாகி விடுமா ? இந்த ஒரே ஒரு ஆலையினால் தான் தமிழ்நாட்டு மக்களும், நீர் நிலைகளும் , காற்றும் மாசு பட்டிருக்கிறதா ? இந்த ஆலையை மூடுவதனால் நமக்கு அடுத்த 5 ஆண்டுகளில் கிடைக்கும் பலன்கள் எல்லாம் என்ன ? அரசியல் வியாதிகள் காசுக்காக அயல்நாட்டு கழிவுகளையெல்லாம் தூத்துகுடி பகுதியில் கொட்டும் செய்தி எல்லாம் படித்தோமே அதெல்லாம் என்ன ஆச்சு ? சாய கழிவுகளை ஆற்றில் கலந்து விட்டு கொண்டிருக்கும் ஆலைகள் எல்லாம் என்ன ஆச்சு ? மது ஆலைகளில்னால் நமக்கு என்ன பாலும் தேனுமா கிடைக்கிறது ? ஏன் இந்த ஒரு ஆலையின் மீது மட்டும் இவ்வளவு அக்கறை எடுத்துக்கொண்டோம் ? ஐயோ தயவு செய்து யாராவது சொல்லுங்க....

 • பாமரன் - நம்மூர்தான்,இந்தியா

  மத்திய அரசின் இந்த வேலை தேவையில்லாத ஒன்று. இந்த மாதிரி முந்திரிக்கொட்டைத்தனமா செய்யாமல் இருந்திருந்தால் ஒரு வேளை கோர்ட் அவர்களை ஆய்வு செய்ய சொல்லும் போது பூந்து விளையாடியிருக்கலாம்.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  நீங்களே கட்சி சார்பாக வழக்கு தொடரலாமே

 • புதிய தமிழ்மைந்தன் - Dindigul India,இந்தியா

  முதலில் மனநோய் உள்ள அரசியல்வாதிகளை ஆய்வு செய்ய மத்திய அரசு குழு அமைக்கவேண்டும்

 • VOICE - CHENNAI,இந்தியா

  ஒன்றின் பின் ஒன்றாக மத்திய அரசு நிறுவனங்களை தமிழகத்தில் இருந்து நயவஞ்சகமாக வடஇந்தியாவிற்கு மாற்றும் வடஇந்திய கும்பல் 13 நபரை சுட்டு கொன்றது இல்லாமல் ஸ்டெர்லிட் மறுபடியும் திறப்பதற்கு எவ்வளவு களவாணிதனமான வேலைகளில் ஈடுபடுகிறது. 40 MP எவரேனும் வாயை திறந்தார்களா ? தமிழகத்தில் மத்திய அரசு பணிகளை வடஇந்தியாவிற்கு மாற்றினால் ரிலையன்ஸ் சூப்பர்மார்கெட் மற்றும் என்னை நிறுவனம் இதே வேதாந்த கும்பலை சேர்ந்த பிக் பஜார் ONGC மற்றும் அதானி குரூப் தமிழகத்திற்கு தேவை இல்லை அதையும் வடஇந்தியாவிற்கு மாற்றி கொள்ளுமாறு மத்தியில் அரசுக்கு தெளிவுபடுத்தவேண்டும். வடஇந்தியர்கள் சம்பாதிக்க மட்டும் தமிழகம் வேண்டும் அதற்கு எதிர்ப்பு வந்தால் சுட்டு கொல்லுவார்கள் ஆனால் மத்திய அரசு வேலைவாய்ப்பை மட்டும் வடஇந்தியாவிற்கு மாற்றுவார்கள். இவை அனைத்தயும் பார்த்துக்கொண்டு 40 MP மற்றும் இதர எதிர்க்கட்சி MP என்ன செய்கிரார்கள் என்பது தான் தமிழக மக்கள் கேள்வி ? . .

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  தேசவிரோதிகளுடன் சேர்ந்து தமிழக தொழிலை நசுக்க சுடலையும் துணை போவது கேவலம்... கான்சர் வருகிறது போன்ற கட்டுக்கதைகளை அவிழ்த்து விட்டு தொழில்களை நசுக்கி அதில் வேலை செய்பவர்களை நடுத்தெருவில் நிறுத்தி பலர் இன்று திருப்தி அடைந்துள்ளார்கள்..

 • கும்புடுறேன் சாமி - பன்னிமடை கோவை,இந்தியா

  ஸ்டாலின் தான் அறிவிக்கப்படாத முதல்வரா செயல்படுறார் தமிழ்நாட்டில். அ தி மு க டம்மிதான் தி மு க தான் ஆளுங்கட்சி இப்போ

 • அன்பு - தஞ்சை,இந்தியா

  சுப்ரிம் கோர்ட்டில் உள்ள பத்து சதவீத சீனியர் நீதிபதிகளை தவிர, அனைவரும் மத்திய அரசின் எடுபிடிகளாகத்தான் செயல்பட விரும்புகிறார்கள். ஏனனில் அவர்களின் ப்ரோமோஷன் தடைபடாமல் இருக்க வேண்டும் என்பது தான் குறிக்கோளாக இருக்கிறது. மேலும் தமிழகத்தை காக்க வேண்டிய மாநில அரசே, ஸ்டெர்லைட்டிற்கு ஆதரவாக செயல்படும் போது, வழக்கில் வெற்றி பெறுவது கடினமான காரியம் தான்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement