டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில், ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, பிறப்பு, இறப்பு சான்றுகள், ஓட்டுனர் உரிமம், ஜாதி சான்றிதழ் உட்பட, 40 விதமான அரசு சேவைகளை, வீட்டுக்கே வந்து வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. டில்லி கவர்னர் அமர்வு,அனில் பைஜால், இத்திட்டத்தை நிறைவேற்ற தடையாக இருப்பதாக, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டினார். இதையடுத்து, ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல்சாசன இத்திட்டத்துக்கு, சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.
வாசகர் கருத்து (20)
சூப்பர்
நம் நாடு இப்போதுதான் சுதந்திரம் அடைந்திருக்கிறது, வாழ்க முதல்வர் கஜரிவால்
Kejriwal is better than raghul gandhi.
Good move, even government should give 108 like number or online request so that government people travel with full facility van with xerox internet extra and do the work. At least they have to work now. Also tarvel by many peoplw reduce india become efficient. Implement across india. If govt no co operate new teamd do it, slow retire lazy staffs.
இதை தமிழக அரசியல் கட்சிகள் கொள்ள மாட்டார்கள். காரணம் வருமானத்தில் கை வைக்க யார் தான் விரும்புவார்கள்
மக்கள் சேவை செய்பவர்கள் மக்களின் தேவைகளை தேடி சென்று உதவ வேண்டும் இது தான் உண்மையான மக்களாட்சி மேலும் இது தான் டா உண்மையான மக்கள் சேவை, டெல்லி முதல்வரின் மக்கள் தொண்டு மேலும் செம்மைபெற வாழ்த்துக்கள். தமிழ் நாட்டில் நிலைமை அலுவலகம் அலுவலகமாக ஏறி இறங்கி வரிசையில் நின்றாலும் கூட லஞ்சம் கொடுக்காமல் காரியம் ஆகாது அது மட்டும் இல்லை நான் அலுவலரிடம் பேசி கொண்டிருக்கிறேன் ஆனால் அலுவலர் தொலைபேசியுடன் பேசி கொண்டிருக்கிறார், நக்கலு, நையாண்டி வேற, என்னத்த சொல்ல எங்க போய் சொல்ல, சமீப காலங்களாக தமிழ் நாட்டில் தவறு செய்யும் ஒரு அதிகாரில்கள் கூட தண்டிக்கப்பட்டதாக வரலாறு இல்லை, எல்லாம் கால கொடுமை..........
பல லட்சம் மக்கள் தங்கள் உயிரை துச்சமாக மதித்து உயிர் தியாகம் செய்து வெள்ளைக்காரனிடம் இருந்து நாடு சுதந்திரம் பெற்றது சுதந்திரம் பெற்ற பின்புதான் தெரிந்தது அந்த சுதந்திரம் தனிப்பட்ட சில குடும்பங்களுக்கு கிடைத்த ஆளும் உரிமை என்று, 60 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வாரிசு அரசியல் குடும்பங்களிடம் இருந்து தற்போதுதான் இந்த நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்திருக்கிறது, அதற்கு ஒரே ஒரு இந்தியருக்கு நாம் தலை வணங்கவேண்டும், அல்லது கடமைப்பட்டிருக்கிறோம், சுதந்திரம் என்பது என்ன என்பதை உணர்த்தியதோடு மட்டும் அல்லாமல் அரசு என்றால் மக்களுக்கு பணி செய்தல் என்பதை நிரூபித்த ஒரே ஒரு மாமனிதர் திரு கெஜ்ரிவால் அவர்கள் மட்டுமே, நாடே இவருக்கு மரியாதை செலுத்தவேண்டும், இந்த பூனைக்கு யார் மணி கட்டுவது என்பதுபோல், அவரவர்கள் தங்களின் குடும்பத்திற்காக தேர்தல் என்ற ஒரு அமைப்பை பயன்படுத்தி, இவர்களுக்கு மட்டுமே பணியில் அமர்த்தப்பட்டவர்கள்தான் அரசு ஊழியர்கள் என்ற நிலையில் நாடு அளவுக்கு மீறி சென்று கொண்டு இருக்கும் இந்த நிலையில் , மக்களுக்காக மக்கள் ஆட்சி என்று நிரூபித்த ஒரே ஒரு இந்தியன் ஒரே ஒரு இந்திய குடிமகன், ஒரே ஒரு மனித நேய மிக்க மாமேதை திரு கஜரிவால் அவர்களுக்கு இந்தியர்கள் அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தவேண்டும், வந்தே மாதரம் \.
நம் நாடு இப்போதுதான் சுதந்திரம் அடைந்திருக்கிறது, வாழ்க முதல்வர் கஜரிவால், வந்தே மாதரம்
பாராட்டவேண்டிய நடவடிக்கை, இவைகள் அனைத்தையுமே ஆன் லைனில் கிடைக்க ஏற்பாடு செய்தால் இன்னும் சௌகரியமாக இருக்கும், அரசு அலுவலகங்களுக்கு செல்லும் தேவையே இருக்க கூடாது.
நல்ல திட்டம். யார் நல்லது செஞ்சாலும் வரவேற்கனும்..
கேட்க நல்லாதான் இருக்குது... ஆனால் வெற்றிகரமாக செயல்படுத்துனுமே
40 விதமான அரசு சேவைகளை, வீட்டுக்கே வந்து வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. வழங்க வரவன் லஞ்சம் கேட்கமாட்டான்...?
மேட்டர் என்னன்னு சரியா புரிஞ்சிக்கணும் மக்களே: அதாவது "...உதவி மைய தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு, விபரங்கள் தெரிவிக்க வேண்டும். அரசால் நியமிக்கப்பட்ட, தனியார் நிறுவன முகவர், வீடு தேடி வருவார். அவர் கேட்கும் ஆவணங்களை சமர்ப்பித்தால்..." அதாவது தனியார் நிறுவன காண்ட்ராக்ட் எம்.எல்.ஏ. / மந்திரி நடத்துவார். அவரின் கட்சி ஆளுங்களே முகவர்களாக வலம் வருவார்கள். அரசு ஊழியருக்கு லஞ்சம் கொடுப்பது தவிர இந்த கட்சி முகவர்களுக்கும் சேர்த்து அழனும். நாம் அரசு அலுவலகத்துக்கு நேரில் சென்றால் ஏஜெண்டை பொய் பாருங்கள் என்று துறதுவார்கள். இது நம்மூரில் ட்ரைவிங் ஸ்கூல் மூலம் லைசென்ஸ் வாங்குவது போலத்தான். அரசு ஊழியரை தவிர இனி ஏஜெண்டுகளுக்கும் சேர்த்து படி அளக்கணும். ஆளும்கட்சி நன்றாக கல்லா கட்ட புது வழி.
மகிழ்ச்சி. நல்வாழ்த்துக்கள். நல்லது நடந்தால் சரி
வீட்டுக்கு வந்து வேலைக்கான அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் குடுங்க....
வரிசையில் காத்திருப்பதற்குப்பதிலாக வீட்டில் காத்திருக்கவேண்டும்... வீட்டில் வந்து சேவை செய்ய எத்தனை அரசு அதிகாரிகள் வேண்டும்? சற்று யோசித்தால் இதன் தாக்கம் புரியும்...
இங்க நம்ம ஊருல இ-சேவை மையம்ன்னு பேருதான்..... இதுலயும் எல்லாருக்கும் கட்டிங் அழணும்.... இல்லாட்டி எந்த ஒரு சான்றிதழும் கிடைக்காது..... வாரிசு சான்றிதழ் வேணுமா.... வருமானச் சான்றிதழ்.... சாதிச் சான்றிதழ்..... இப்படி எல்லாத்துக்கும் பணம் தான்...... வாரிசு சான்றிதழுக்கு இ-சேவை மூலமா அப்ளை பண்றதுக்கு ஒரு மாசம் அலைந்தேன்...... சர்வர் டவுனாம்..... அப்ளை செய்வதற்குக் கட்டணம் ரூ. அறுபது தான்..... பின்னர் விஏஓவுக்கு...... ஆர் ஐ.க்கு.... தாலுகா அலுவலகத்தில் கிளார்க்குக்கு..... பின்னர் இறுதியாக தாசில்தாருக்கு.... இப்படியாக எல்லாருக்கும் கொடுத்தால் தான்...... அப்ரூவல் செய்வார்கள் ஆன்லைனில்..... இல்லையெனில் அப்படியே கிடக்கும்.... அல்லது ஏதேனும் காரணம் சொல்லி அப்ளிகேஷனை ரிஜக்ட் செய்துவிடுவார்கள்..... இதுக்கே ரெண்டு மாசம் ஆச்சு.....