Advertisement

வண்டலூர் பூங்காவிற்கு புதிய யானை வருகை

வண்டலுார்:வண்டலுார் பூங்காவிற்கு, ஆனைமலை புலிகள் காப்பக முகாமில் இருந்து, புதிதாக யானை கொண்டு வரப்பட்டு உள்ளது.
சென்னை, வண்டலுார் உயிரியல் பூங்கா, 1,265 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதில், 2,379 விலங்குகள் மற்றும்பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இதில், 'பிர்க்குர்தி' என்ற பெண் யானையும், 'அசோக்' என்ற ஆண் யானையும் இருந்தன.
வனவிலங்கு மருத்துவர்களின் ஆலோசனையின்படி, ஆண் யானை அசோக், ஆனைமனை புலிகள் காப்பகத்தில் உள்ள, முகாமிற்கு அனுப்பட்டது.
இதற்கு பதில், புலிகள் காப்பக முகாமிலிருந்து, 'ரோகிணி' என்ற பெண் யானை கொண்டுவரப்பட்டு உள்ளது.
இது குறித்து, பூங்கா உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
புதிதாக வந்துள்ள பெண் யானை, இரண்டு ஆண்டுகளுக்கு முன், சத்திய
மங்கலம் காட்டில், தன் தாயால் கைவிடப்பட்டது.
காட்டில் உணவின்றி, நோய்வாய்ப்பட்டு சுற்றித் திரிந்த யானையை, வனத்துறையினர் மீட்டு, புலிகள் காப்பக முகாமில் வைத்து பராமரித்து வந்தனர்.
இந்த யானை, வண்டலுார் பூங்காவில், நேற்று முதல், பார்வையாளர்கள் பகுதியில் விடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement