Advertisement

பாலியல் சலுகை கேட்பதும் லஞ்சம் தான் : ஏழு ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும்

புதுடில்லி: பணியை முடிப்பதற்காக, பாலியல் சலுகை கேட்பதையும் லஞ்சமாகவே கருதும் வகையில், புதிய சட்டம்நடைமுறைக்கு வந்துள்ளது. இந்தக் குற்றத்துக்கு, ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.


அரசு ஊழியர்கள், லஞ்சம் பெறுவதை தடுக்கும் வகையில், லஞ்சத் தடுப்புச் சட்டம், 1988ல் அமலுக்கு வந்தது. தனியார் நிறுவனங்களையும் இந்தச் சட்டத்தின் கீழ் கொண்டு வரும் வகையில், 2013ல், திருத்தம் செய்யப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி, பணம் மற்றும் பிற சலுகைகள் பெறுவதே, லஞ்சம் என கூறப்பட்டு உள்ளது. இந்நிலையில், பணம் மற்றும் பிற சலுகைகள் என்ற வார்த்தைக்கு மாற்றாக, மட்டு மிஞ்சிய சலுகை என்று மாற்ற லாம் என, சட்டக் கமிஷன், 2015ல் பரிந்துரை செய்தது. அதாவது, சட்டப்பூர்வமான சம்பளத்தைத் தவிர, பிற வழிகளில் கிடைக்கும்
பொருட்கள், சலுகைகள் உள்ளிட்டவற்றையும் லஞ்சம் என்ற பொருளின் கீழ் கொண்டு வர வேண்டும் என, பரிந்துரை செய்யப்பட்டது. அதன்படி, பணம் மற்றும் பணத்தின் மதிப்புக்கு நிகரான பொருட்களுடன், பிற வகைகளில் கிடைக்கும் சலுகை உள்ளிட்டவற்றையும் சேர்க்க வேண்டும் என, பரிந்துரைக்கப்பட்டது. பாலியல் சலுகை கேட்பது, கிளப் உறுப்பினராக சேர்ப்பது உள்ளிட்டவையும் லஞ்சமாகக் கருதவேண்டும் என, கூறப்பட்டது. சட்டக் கமிஷன் பரிந்துரை குறித்து, பார்லிமென்ட் குழு பரிசீலனை செய்தது. சில கூடுதல் விதிகளுடன், லஞ்சத் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது.


ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, சமீபத்தில், இந்த சட்டத் திருத்தம் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்தத் திருத்தத்தின்படி, பாலியல் சலுகை கேட்பது, கிளப்களில் உறுப்பினராக சேர்ப்பது, தன் குடும்பத்தார் அல்லது நண்பர்களுக்கு வேலை கேட்பது, கடன்களை அடைக்கச் சொல்வது உள்ளிட்டவையும் குற்றமாக பார்க்கப்படும். இந்தக் குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். இதை தவிர, இந்தச் சலுகைகளை லஞ்சமாக அளிப்பவர் மீதும் வழக்கு தொடரப்படும். அவர்களுக்கும், ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். இதற்கு முன் இருந்த சட்டத்தில், லஞ்சம் கொடுப்பவருக்கு சிறை தண்டனை விதிப்பது சேர்க்கப்படவில்லை.

கொடுத்தாலும் குற்றம்! :இந்த சட்டத் திருத்தம் குறித்து, உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் கூறியதாவது: பணமாக பெறுவதை தவிர்த்து, அதிகாரிகள், பல்வேறு வழிகளில் லஞ்சம் வாங்கி வருகின்றனர். அதைத் தடுக்கும் வகையில், 'மட்டுமிஞ்சிய சலுகை' என்ற வார்த்தை சேர்க்கப்பட்டுள்ளது. இதன்படி, பரிசுகள், இலவசங்கள் பெறுவது, வெளிநாட்டு சுற்றுலா பயணம், விமான டிக்கெட் பெறுவது, ஓட்டலில் தங்குவது என, எந்தச் சலுகை பெற்றாலும் அதுவும் லஞ்சமாகவே கருதப்படும். கடனை அடைக்கச் சொல்வது, நிலம் அல்லது வீடு என, எதுவாக இருந்தாலும், அது லஞ்சமாகும். மிகக் குறிப்பாக, பாலியல் சலுகை கேட்பது தற்போது அதிகரித்து வருகிறது. அதனால், பாலியல் சலுகை கேட்பது என்ற வார்த்தை, இந்தச் சட்டத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. முதல் முறையாக, லஞ்சம் கொடுப்பதும் குற்றமாக பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (26)

 • Manian - Chennai,இந்தியா

  நம்ம அரசாங்க வியாதிகள், அரசியல் வியாதிகளின் புத்தி சாலித்தனம் புதுமையாக பாலினத்திற்கு விளக்கம் சொல்வார்கள். இரண்டு அரசாங்க வியாதிகள் பேசிக்கொண்டதை வேறு வழி இல்லாமல் கேட்க நேர்ந்தது- அன்னே மாறிமுத்து , இந்த பாலின கொடுமை என்பதை சமாளிக்க வளி இருக்கான்னே. அந்த பொண்ணு, எனக்கு செக்ஸ் பற்றியே தெரியாது. தயவு செய்து கொஞ்ச நேரம் ஆசிரியராக இருந்து செயல் முறையில் காட்டுங்க சார். பாவம் போன் அப்போகுது, ஒரு பெண்ணோட வாழக்கையில் வெளிச்சம் ஏற்றலாமேன்னு உதவி செய்தேனுங்க. அவிங்களுக்கு ஹெச் ஐ. வி இருந்தா இன்னு பயம் கூடவே இருட்த்திச்சு. ஆனா, பெண்ணுன்னுனா பேயும் இறங்குமுன்னு எங்க ஆத்தா சொநனதை ஞசாபக்கம் வச்சுகிட்டு உதவி செஞ்ச எப்படி குத்தம்? உதவி செய்யற எண்ணமே குற்றமானு ஒரு போடு போடணும். தம்பி தங்கதுரை, மச்சி என்னமா வலச்சிபுடடே வாக்கிள்கள் இப்படி வாதம் செய்து அந்த பெண்ணையே குற்றவாளி ஆக்கி விடுவார்களே

 • தமிழர்நீதி - சென்னை ,இந்தியா

  கூட்டிக்கழித்து பார்த்தல் இது மோடியை குறிவைத்து சட்டத்தில் மாற்றம் கொண்டுவந்துள்ளார்கள். பிஜேபி கு நன்கொடை எதிர்பார்த்து மல்லையாவை லலித் மோடியை நாடுகடத்தியது , பணம்மதிப்பிழப்பு செய்தது , அனில் அகர்வாலுக்கு சாதகமாக 13 பேரை தூத்துக்குடியில் சுட்டுப்பொசுக்கியது , அதானிக்கு அம்பானிக்கு GST வருமானத்தை மானியமாக கொடுத்தது .. இப்படி மோடி மாட்டிகிட்டார்

 • அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 600 061,இந்தியா

  பாலியல் தூண்டுதல் ஏற்படுத்தி.... ஆசையைக் கிளறிவிட்டு.... அதன் காரணமாகவே சினிமா (இப்போ வர்ற எல்லா படமுமே இப்படித்தான் இருக்கு......) பார்க்கத் தூண்டுவதும் பாலியல் லஞ்சம் தானே..... அப்படியானால் ஒரு நடிகையும் மிஞ்சமாட்டாரே.... எல்லா நடிகையருக்கும் ஏழு ஆண்டுகள் தண்டணையா.....??? அவ்வாறு நடிக்கத் தூண்டிய இயக்குநர்... பணம் கொடுத்த தயாரிப்பாளர்.....???? நேக்கு ஒண்ணுமே புரியலை..... இதெல்லாம் எப்படி சாத்தியம்.....??? இந்தச் சட்டத்தின் மூலமா ஒருத்தரைக் கைது பண்ணி.... வழக்கு நடத்தி...... தண்டணை வாங்கிக் கொடுக்கறதைப் பார்க்கணும்னா நேக்கு இன்னும் ரெண்டு ஜென்மம் வேணும் போல இருக்கு..... போகாத ஊருக்கு வழி.....

 • SENTHIL - POLLACHI,இந்தியா

  இனி நம் இந்தியாவை அந்த ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது....

 • Sivagiri - chennai,இந்தியா

  அய்யய்ய . . . கற்பழிப்பு கிடையாதா ? . . அதற்கு பெயர் கற்பு தானம் அதாவது கற்பு லஞ்சம் . . . அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் கூட்டணி அமைத்து கற்பழித்து விட்டு கற்பை தானமாகக் ( லஞ்சமாக) கொடுத்ததாக சொல்லி தப்பித்துக் கொள்ள சட்டரீதியாக செய்து கொண்ட ஏற்பாடு . . . கற்பழித்து விட்டு அவளையே கற்பு லஞ்சம் கொடுத்ததாக குற்றவாளி ஆக்கி . . தங்கள் பிடியில் வைத்துக் கொண்டு தேவைப் படும் போதெல்லாம் . . . . . .இந்த விஷயத்தில் இந்தியா முழுவதும் காவல் துறை கில்லாடிகள் . . . இனி எந்த பெண்ணை வேண்டுமானாலும் தூக்கிட்டுப் போவலாம் . . . கற்பு லஞ்சம் கொடுக்க வந்தாள் என்று கேஸைப் போட்டு உள்ளே தள்ளி பாதுகாப்பாக கற்பழிக்கலாம் . . மேலும் யாருக்கு வேண்டுமானாலும் விற்று காசு பார்க்கலாம் . . .

 • N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா

  லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் குற்றம் சரி....இச்சட்டம் பாலியலில் சம்பந்தப்படும் போது எப்படி என குழப்பாமல் விளக்கவும்...

 • தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா

  இனி தி.மு.க வின் முக்கிய புள்ளிகளின் கேசட் பார்ப்பது எப்படி

 • Rajesh - Delhi,இந்தியா

  நம் நாடு மிக மிக மோசமாக மாறி வருகிறது மக்கள் மனதில் வக்கிர புத்திஅதிகமாகி வருகிறது

 • Needhiyin Pakkam Nil - Chennai,இந்தியா

  இந்த சட்டத்தில் உள்ள மிக பெரிய ஓட்டையை பார்க்கும் பொழுது அரசு அதிகாரிகளுக்கு மேலும் சிறந்த சேவையை அரசு வழங்கியுள்ளது போன்று தான் தோன்றுகிறது. லஞ்சம் கொடுத்தால் 7 ஆண்டு சிறை என்று ஏற்கனவே சட்டம் போட்டிருக்கிறீர்களே, அப்போ அந்த சட்டம் இதிலேயும் பொருந்துமல்லவா, அவர்களாக தான் முன் வந்து இந்த வழியில் எனக்கு லஞ்சம் கொடுத்தார்கள் என்று அதிகாரி சொன்னால், அதிகாரி சஸ்பெண்ட் அல்லது பனி இட மாற்றம் ஆனால் அதை கொடுத்தவருக்கு 7 ஆண்டுகள் சிறை தானே, அரசு அதிகாரிகளுக்கு ஒரே கல்லில் இரண்டு மாங்காயா........

 • Indhuindian - Chennai,இந்தியா

  Great on paper Would it be enforced in letter and spirit Big Joke

 • suresh kumar - Salmiyah,குவைத்

  நிர்மலாதேவி வகை ஏற்பாடுகளும் இதில் அடங்கும்

 • venkatan - Puducherry,இந்தியா

  ஒருவர் தன் வருமான வரம்பிற்கு அதிகமாக பிறருடன் போட்டி போட்டுக்கொண்டு, ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு,அதிக நுகற்சியில் ஈடுபட பொ ன்,மண்,பெண் போன்றவை அத்தியாவசியம் என எண்ணி லஞ்சம், ஊழல் என விரிந்து பொருளின் ஆதிக்கம் தொடர்கதை ஆகிவிட்டது.இதற்க்கு ஆன்மிகம் நல் வழி சொல்லும் என்றால் அங்கும் கவுர வம்,படாடோபம் என்று மனித அவா நீட்சியுறு கிறது.ஆக இதற்கு முடிவில்லை.

 • Lion Drsekar - Chennai ,இந்தியா

  பொது மக்களுக்கு மக்களின் வரிப்பணத்தில் இலவசமாக கொடுப்பது .. மின்சார விசிறி, குடும்ப தலைவர்களின் பிறந்தநாள் பரிசாக வழங்கும் திட்டங்கள் ? ... வந்தே மாதரம்

 • N.Purushothaman - Kuala Lumpur ,மலேஷியா

  வரவேற்கத்தக்கது...இப்போது வேறு ஏதாவது ஓட்டை இருக்கிறதா என்பதை நம்ம ஆளுங்க தேட முற்படுவானுங்க...இவனுங்களை சொல்லி குற்றம் இல்லை..வளர்ப்பு அப்படி...

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  பாலியல் சலுகை கேட்பது, கிளப் உறுப்பினராக சேர்ப்பது உள்ளிட்டவையும் லஞ்சமாகக் கருதவேண்டும் என, கூறப்பட்டது..... இதுதானே நிறைய அலுவலகங்களில் பெண்களுக்கு நடக்கிற கொடுமைகள்...

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  கட்டாயம் ....கட்டாயம் .,... ரெட் லைட் ஏரியாவில் துட்டு இல்லாமல் எதுவும் நடக்காது இல்லையா

 • Loganathan Kuttuva - Madurai,இந்தியா

  லஞ்சம் என்பது நிரூபிக்கப்பட்டால் தான் தண்டனை.

 • rajan. - kerala,இந்தியா

  அப்போ பாலியல் சலுகை கேட்கும் பெண்களும் தண்டனைக்குள்ளாவார்களா.? இங்கு தான் ஆணும் பெண்ணும் சமம் என்று கொடி பிடிக்கிறோமே.

 • mindum vasantham - madurai,இந்தியா

  வரவேற்கிறோம்

 • ஆப்பு -

  அடப்பாவிகளா- இது வரை அது லஞ்சமில்லைன்னு நினைச்சு தீர்ப்பு சொல்லிக்கிட்டிருந்தீங்களா?

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  அப்படியென்றால் அன்னை ஸ்ரீரெட்டி நினைத்தால் பலரை உள்ளே வைக்கமுடியுமே.... சினிமாத்துறையே ஸ்தம்பித்து விடும்... தமிழகத்தின் பொருளாதாரம் தலைகீழாக சென்றுவிடும்... சுந்தர் சி கூட கம்பி எண்ணும் நிலை வரும்...

 • கும்புடுறேன் சாமி - பன்னிமடை கோவை,இந்தியா

  இதைத்தான் எஸ் வி சேகர் சொன்னார் அவரப்போயி கைது பண்ணனும்ன்னு சொல்றாங்க , அவர் வாழும் மஹாத்மா

 • அன்பு - தஞ்சை,இந்தியா

  பாலியியல் சலுகை கேட்பது லஞ்சத்தை விட கொடூர குற்றம். கடுமையான தண்டனை கொடுப்பது அவசியம்.

 • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

  பாலியல் சலுகை கேட்பது லஞ்சம், பிளஸ் கற்பழிப்பு என்று மொத்தம் குறைந்தது 14 ஆண்டுகளாவது உள்ளே போடவேண்டிய குற்றம்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement