Advertisement

ரஷ்யாவிடமிருந்து ஆயுதம் வாங்க மத்திய அரசு திட்டம்

புதுடில்லி,: ரஷ்யாவிடம் இருந்து, எஸ் - 400 ஏவுகணைகளை வாங்குவது என, முடிவு செய்துள்ளது குறித்து, அமெரிக்காவிடம் தெரிவிக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிட்டதாக எழுந்த புகாரை அடுத்து, ரஷ்யா உடன் ஆயுதங்கள் வாங்குவது போன்ற பாதுகாப்பு ஒப்பந்தம் செய்வதற்கு, அமெரிக்கா தடை விதித்துள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து, தரையில் இருந்து விண்ணில் உள்ள இலக்கைத் தாக்கக் கூடிய, எஸ் - 400 ரக ஏவுகணைகளை வாங்க, 40 ஆயிரம் கோடி ரூபாய் ஒப்பந்தத்தை அரசு செய்துள்ளது.
இந்நிலையில், இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே, ராணுவம் மற்றும் வெளியுறவு அமைச்சர்களின் முதல் கூட்டம், வரும், 6ம் தேதி நடக்க உள்ளது. இந்தக் கூட்டத்தின்போது, ரஷ்யா உடனான ஒப்பந்தம் குறித்து விவாதிக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
நாட்டின் பாதுகாப்பு மற்றும் எல்லையில் உள்ள பிரச்னைகளால், இந்த ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கான முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனால், ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா விதித்துள்ள தடையில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என, வலியுறுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (20)

 • Antony Raj - Chennai,இந்தியா

  வாங்குங்கள் நல்ல விஷயம் ஆனால் தரமானதாக வாங்குங்கள் ,, சென்னையில் மெட்ரோ ரயில் இப்போது அடிக்கடி பழுதாகி நிற்பது வழக்கமாக ஆகிவிட்டது , நேற்றைய தினம் ரயில் பரங்கிமலை ரயில் நிலையத்தில் நிற்கும்போது அதனுடைய தானியங்கி கதவு திறக்கப்படவில்லை சரியாக 45 நிமிடம் கழித்து சரி செய்யப்பட்டது , இது ஒன்றும் புதிதல்ல இதற்கு முன்னால் மூன்று தடவை இது போன்ற கோளாறுகளால் பயணிகள் மிகுந்த சிரமம் அடைந்தார்கள் , இப்படியே போகுமேயானால் சென்னை விமான நிலையத்தில் தொடர்ந்து கண்ணாடி கூரைகள் விழுவதுபோல் இதுவும் எண்ணிக்கையில் போட்டி போடும் என்பது சந்தேகம் கிடையாது .. எனவே வாங்கும்போது தரமானதாக வாங்குங்கள் ....

 • Pats - Coimbatore,இந்தியா

  1980களில் உருவானது ரஷ்யாவின் "S400 டிரியம்ஃப்" ஏவுகணை - ஒரே நேரத்தில் நிலத்திலிருந்தும், விமானத்திலிருந்தும், கடலிலிருந்தும் ஏவப்படும் எதிரியின் ஏவுகணைகளை, 600 கி.மி. சுற்றளவுக்குள் நுழையும்போதே கண்டுபிடித்து, 400 கி.மி. சுற்றளவுக்குள் நுழையும்போதே நாடவானிலேயே எதிர்த்து தாக்கி அழிக்கும் திறன் பெற்றது. ஒவ்வொரு பேட்டரியும் ஒரே நேரத்தில் 8 ஏவுகனைகளை ஒலியைவிட 14 மடங்கு அதிக வேகத்துடன் அனுப்பும் திறனையும், தொடர்ந்து அதேபோன்று 8 முறை ஏவும் திறனையும் கொண்டது. இந்தியா இதுபோன்று 5 அல்லது 6 பேட்டரிகளை வாங்க முடிவுசெய்துள்ளது. சீனா 6 பேட்டரிகள் வாங்க ஏற்கெனவே ஆர்டர் கொடுத்துவிட்டது. இதற்கு இணையான ஒரு ஏவுகணையை தயாரிக்க அமெரிக்கா இன்னமும் முக்கிக்கொண்டுள்ளது. அமெரிக்காவின் F16, F35, மற்றும் வெளியில் தெரியாத சீக்ரெட் விமானங்களையும் அழிக்கும் திறன் பெற்றது. அமெரிக்காவே வாங்காதே என்று எதிர்ப்பு தெரிவிக்கும்போதே இது எவ்வளவு பயங்கரமானது என்று புரிந்துகொள்ள வேண்டும். இந்த S400 டிரியம்ஃப் ஏவுகணை இரண்டை பாகிஸ்தானை நோக்கியும், இரண்டை சீனாவை நோக்கியும் நிறுத்தினால் போதும். 800 கி.மி. சுற்றளவுக்கு ஒரு எதிரி விமானமும், ஏவுகணையும் பறக்க முடியாது. இவ்வளவு திறன் மிக்க ஒரு ஏவுகணையை உருவாக்க பல ஆண்டுகள் ஆகும். அப்படியே முயற்சி செய்தாலும் சர்வதேச அரசுகளிடமிருந்து தயாரிப்பை தடுக்க நெருக்கடிகள் வரும். அதையும் மீறி இந்தியாவில் உள்நாட்டு ஏவுகணை தொழில்நுட்பம் வளர்ந்து வருகிறது. சும்மா "கையில காசு, வாயில தோசை' போன்றதல்ல இதுபோன்ற தொழில்நுட்ப வளர்ச்சி. சென்ற ஆட்சிவரை உள்நாட்டில் ராணுவ தளவாட உற்பத்தியை பெருக்கி, இறக்குமதியை குறைக்கவேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் அரசுகள் இயங்கின. இந்த அரசு அதற்கான முழுமையான முயற்சிகளில் இறங்கியிருப்பது உண்மை. செயல்பாட்டிற்கு வர சில வருடங்களாவது ஆகும். அதுவரை "கூவாமல்" பொறுத்திருப்போம்.

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  ரஷ்யர்கள் (கம்மிகள்) தான் ஆயுதம் கொடுத்து இந்தியாவை காப்பாற்ற உதவுகிறார்கள். ஊ...ஊ...ஊ...

 • Homer Simpson - Springfeild,யூ.எஸ்.ஏ

  ஸார் மோடி ஸார் ,நம்ம மேக் இன் இந்தியா திட்டம் எப்படி போய்ட்டு இருக்கு ஸார்????????????

 • மாயவரத்தான் - chennai,இந்தியா

  மிக அருமையான நகர்வு. எதிரிக்கு சிம்ம சொப்பனம். நட்புக்கு மரியாதை. தங்கள் சுய நலத்திற்காக தொடர்ந்து குழப்பங்களை ஏற்படுத்தும் எதிர்க்கட்சிகளின் செயல்களுக்கு மத்தியிலும் மத்திய அரசு தேசத்தின் முன்னேற்றம், பாதுகாப்பு, வெளியுறவு, பொருளாதார சீர்திருத்தம் என அழுத்தமாக,உறுதியாக,திறமையாக நடை போடுவது பாராட்டுக்கு உரியது.

 • Appavi Tamilan - Chennai,இந்தியா

  மோடி ஆவேசமாக அறிவித்து சபதமிட்ட மேக் இன் இன்டியா வெற்றி வெற்றி வெற்றி... இனி எல்லாமே வெளிநாடுகளில் இருந்து மட்டுமே வாங்கப்படும். சர்தார் சிலை கட்டுவது கூட சீன பொறியாளர்கள்தான். ஹெச்ஏஎல் போன்ற உள்நாட்டு நிறுவனங்கள் எத்தனை இருந்தாலும், நம் ராணுவத்திற்கு அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளிடமிருந்துதான் ஆயுதம் வாங்கப்படும். இனி எல்லாத்துக்கும் அயல்நாட்டிடம் கை ஏந்தப்படும். ஆனா கமிசன் கரெக்டா பாக்கெட்டுக்கும், கட்சி நிதிக்கும் வந்துரனும்... உள்நாட்டு உற்பத்தி ஊஊஊஊஊஊஊஊ.... ஆண்டுக்கு இரண்டு கோடி வேலை வாய்ப்பு ஊஊஊஊஊஊஊஊ.... புது இண்டியா பொறந்துடுச்சு.... வாங்க எல்லோரும் மோடிய தலையில வெச்சு கொண்டாடுவோம்....

 • abdul rajak - trichy,இந்தியா

  இந்தியாவில் பரீட்சையில் பாஸ் பண்ண படிக்கிறார்கள். அறிவை வளர்த்து கொள்ள அல்ல .

 • abdul rajak - trichy,இந்தியா

  s- 500 வாங்க வேண்டியது தானே ? எதுக்கு பழசு ?

 • Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா

  ஒன்று ரஷ்யா விடம் .. இல்லாவிட்டால் அமெரிக்காவிடம் .. எப்போது நமக்கு வேண்டிய ஆயுதங்களை நாமே தயாரிக்கப்போகிறோம்..? நம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்குமே...

 • பாமரன் - நம்மூர்தான்,இந்தியா

  தல 56 இன்ச் காட்ட வெண்டிய இடம் இந்த மாதிரி மேட்டர்ல தான். யாரும் கேட்காத மற்றும் கேள்வி கேட்க முடியாத தேர்தல் கூட்டத்தில் காட்டிட்டு .... இந்த மாதிரி மேட்டர்ல மியாவ் மியாவ் ன்னு பம்முரதெல்லாம் ஒரு பொழப்பா....??? சீனாக்காரன் இந்த மாதிரி செஞ்சி கேள்வி பட்டிருக்கோமா...???

 • Anandan - chennai,இந்தியா

  மேக் இன் இந்தியா திட்டம் என்னாச்சு? அட, சர்தார் வல்லபாய் படேல் சிலையை கூட சீனாக்காரர்கள் தான் கட்டினார்களாம். நம் ஆட்கள் மேல் அம்புட்டு நம்பிக்கை?

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  நம்ம வீட்டு விவகாரத்திர்க்கு அடுத்த வீட்டு நாட்டாமை வேண்டும்..?.,..

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement