Advertisement

தத்தெடுத்த சிறுமி கொலை தம்பதியின் குடியுரிமை ரத்து

புதுடில்லி:தத்தெடுக்கப்பட்ட, குழந்தை கொல்லப் பட்டதை அடுத்து, இந்தியாவில் பிறந்த
அமெரிக்க வாழ் தம்பதி மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள
குடியுரிமையை ரத்து செய்ய, முடிவு செய்யப் பட்டுள்ளது.


கேரளாவைச் சேர்ந்த, அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ள வெஸ்லி மேத்யூஸ், அவருடைய மனைவி சினி மேத்யூஸ், பீஹாரைச் சேர்ந்த, சிறுமி ஷெரினை தத்தெடுத்து, அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்றனர்.கடந்த ஆண்டு, அக்டோ பரில், அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில், அவர்களுடைய வீட்டுக்கு அருகே உள்ள ஒரு சிறுபாலத்தின் அடியில், 3 வயதான ஷெரினின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது.


சிறுமியை சித்திரவதை செய்து, கொலை செய்ததாக, வெஸ்லி மற்றும் சினி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான வழக்கு, ஹூஸ்டனில் நடந்து வருகிறது.
இந்தக் கொலை சம்பவம், இங்கு மிகப் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. வெளிநாட்டைச் சேர்ந்த, இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட வர்கள் தத்தெடுப்பதற்கான முறைகளை
கடுமையாக்க வேண்டும் என, பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி உள்ளனர்.


இந்த நிலையில், வெஸ்லி மற்றும் சினிக்கு வழங்கப்பட்டுஉள்ள, ஓ.சி.ஐ., எனப்படும் வெளிநாட்டு வாழ் இந்தியக் குடியுரிமையை ரத்து செய்ய, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தற்போது, அவர்களுடைய நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மீதும், இதேபோன்ற நடவடிக்கை எடுக்கவும் மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement