Advertisement

ஆசிரியை மீது, 'ஜொள்ளு' : பள்ளி மாணவன் அடாவடி

குடியாத்தம்: ஆசிரியைக்கு, காதல் குறுந்தகவல்களை அனுப்பி, தொல்லை கொடுத்து வந்த பள்ளி மாணவனிடம், கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

வேலுார் மாவட்டம், குடியாத்தம் அடுத்த, கல்லப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியின், ஆங்கில பாட ஆசிரியை மாலா, 24. இவருக்கு திருமணமாகவில்லை. இவர் மீது, பிளஸ் 2 படிக்கும், 17 வயது மாணவன் ஒருவன், காதல் கொண்டான்.இதையறிந்த ஆசிரியை,புத்திமதி கூறி, அவனை திருத்தப் பார்த்தார். அதை பொருட்படுத்தாத மாணவன், ஆசிரியையின் மொபைல் போனுக்கு, காதல் ரசம்சொட்டும் குறுந்தகவல்களை, அனுப்பிக் கொண்டே இருந்தான்.பள்ளிச் சுவரில், ஆசிரியை குறித்து காதல் கவிதைகளை எழுதினான்.கடந்த, 6ம் தேதி, ஒரே நாளில், ஆசிரியையின் மொபைல் போனுக்கு, 160 காதல் குறுந்தகவல்களை அனுப்பியுள்ளான். இதைத் தட்டிக்கேட்ட ஆசிரியையின், கையைப்பிடித்து இழுத்து, மாணவன் அடாவடியில் இறங்கியுள்ளான்.இதையடுத்து, பள்ளி நிர்வாகம் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம், ஆசிரியை புகார் செய்தார். அதிகாரிகள் விசாரணையில், புகார் உறுதிப்படுத்தப்பட்டது.'இது குறித்த விசாரணைஅறிக்கை, கல்வித்துறை உயர் அதிகாரிகள், பள்ளி கல்வித்துறை அமைச்சருக்கு அனுப்பப்பட்டு, அவர்களின் ஆலோசனைப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என, வேலுார் மாவட்ட கல்வி அலுவலர்கள் தெரிவித்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (33)

 • chander - qatar,கத்தார்

  அவனை திருத்த சீர் திருத்த பள்ளியில் பத்துவருடம் போடலாம்

 • Mahendran TC - Lusaka,ஜாம்பியா

  இந்த கலாச்சார சீரழிவுக்கு காரணம் சினிமா , தொலைகாட்சி தொடர்கள் , பெற்றோர்களின் வளர்ப்பு , ஆசிரிய , ஆசிரியைகளின் நவீன கால உடை உடுத்துதல்/ ஸ்டைல் தான் காரணம்.

 • Sukumaran Sankaran Nair - Taiping (Perak).,மலேஷியா

  முதல் கட்ட நடவடிக்கையை உடனே எடுத்திருந்தால்,இந்த பிரச்சனையை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்திருக்கலாம். பிரச்சனையை வளர விட்டு,பிறகு பார்க்கலாமே என்றெல்லாம் முடிவு எடுப்பதால் தான் இன்று மாணவர்கள் கட்டுப்படுத்தவியலாத நிலைக்கு, தங்கள் மனம் போன போக்கிலேயே நடந்துகொள்கிறார்கள். வணங்கி,போற்றப்பட வேண்டிய ஆசிரியரிடம் முறையற்ற வகையிலான தொடர்பை ஒரு மாணவனுடைய கல்வி அமையுமானால்,அந்த கல்வி அந்த மாணவனுக்கு பொருந்துமா என்ற கேள்வி எழுகிறது இன்று மாணவர்கள் தெருவில் ஆர்ப்பாட்டம்,போராட்டம் என்று திரியும் அளவுக்குப் போய்விட்டது. கல்வியாளர்கள் வகுக்கும் முறைமை மாற்றியமைக்கப்பட வில்லையென்றால், கனி தராத மரங்களைப் போன்று,வளர்ந்து, யாருக்கும் எந்த பலனும் கிட்டாது மட்டுமல்லாது ,அத்துமீறிய பக்குவப்படாத,தன்மை மாறாத நிலைக்கு கொண்டு வரப்படும் சூழல் எதிர்ப்படலாம் தன்மை மாற்ற (Transformation of Character building)போதனைத்திட்டங்கள் முறையாக செயல்பட பெற்றோர்கள்,ஆசிரியர் கலந்தாலோசனை முக்கிய பங்காற்றவேண்டும்.

 • nicolethomson - bengalooru,இந்தியா

  அந்த மாணவனை பெற்ற தாய் எந்த ரேஞ்சில் இருந்திருப்பாள்? ஜீன் ? இன்னமும் அவன் மீதும் அவனை முறை தவற செய்த மீடியா மீதும் நடவடிக்கை எடுக்காமல்?

 • Sathish - Coimbatore ,இந்தியா

  ப்ரேமம் மாதிரி இன்னும் நாலு படம் எடுங்க. நாட்டையே நாசமாக்கியது இந்த திரைப்படங்கள் தான். பெற்றோர்கள் கண்டிக்கவேண்டும் தங்கள் பிள்ளைகளை.

 • S.prakash - Palakkarai,இந்தியா

  எல்லா ஆசிரியைகளும் காதல் தொல்லை செய்யும் மாணவர்களை ... அடிக்கணும்.

 • ganapati sb - coimbatore,இந்தியா

  படிக்கும் வயதில் பதிபருவத்தினர் காமத்தில் அலையும் மனதை உருவாகும் சமூக வலைத்தளங்கள் மற்றும் சினிமா tv ஊடகங்களை என்ன செய்வது ஆசிரியைக்கு விரைவில் பொருத்தமான வரனை பார்த்து திருமணம் நடத்தி விடவேண்டும் அரசு பள்ளி என்பதால் ஆசிரியை வேறு பள்ளிக்கும் மாணவனை வேறு பள்ளிக்கும் மாற்றி விடலாம் என்பதே இப்போதைய தீர்வு

 • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

  This type of Love affairs between the teachers and students are common in Foregin countries and such cultures and Traditions are imported to our country through our electronics and printing medias and Internet.There are many Vedalaigal sping more and more time on such useless and dirty acts on their cell phones and tabs and implementing such acts practically in this way to their teachers shamelessly.They are all " Pinjil Pazhukkum Udhavakkarigal".They are all brought up in this way through their parents only and they are to be blamed for such nasty acts.This is like "Thirudargal Thamagavey Thirundavittal Thiruttai Yaralum Azhikka Mudiyadhu" Pole.The coming days are very dangerous to our society by such characterless young generation if strict laws are not enforced on them , Electronic and printing medias vigourousely by our government at present.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  சமூக சீர்கேடுகளுக்கு பெரிய திரையை விட சின்ன திரை, ஊடகங்கள் காரணம் ஆகின்றன

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  சில பெற்றோர்களும் பிள்ளைகள் எதிரில் தகாத முறையில் நடந்து கொண்டால் அதை பார்த்த பிள்ளைகள் இது மாதிரியும் நடப்பார்கள்..

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  ஆசிரியைக்கு திருமணம் செயது விடுங்கள்.. அந்த அம்மா வீட்டுக்காரன் கவனித்து கொள்ளுவான்...

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  பிஞ்சிலே பழுத்தது விட்டது...

 • hhjj -

  ciniema poruki panam panrathuku makkala pada paduthranunga, avanga kudumbatla ithellam sagajam,

 • hshs -

  public la seruppala adikanaum nay,

 • GladsOn John - Manama,பஹ்ரைன்

  Future MLA ready

 • Bhaskaran - Chennai,இந்தியா

  Vadivel சினிமா பார்த்து வந்த வினை வாழ்க தமிழகம்

 • புதிய தமிழ்மைந்தன் - Dindigul India,இந்தியா

  பி.ஜே.பி எம்.எல்.ஏ விடம் செல்ல என்னிடம் காசும் இல்லை எனக்கு பி.ஜே.பி. யில் செல்வாக்கும் இல்லை. உங்களின் பேச்சை கேட்டு அந்த மாணவனுக்கு உதவ போய் போலீஸ் என்னை பிடித்து விட்டால். மேலும் எனக்கு பிரியாணி கடைமாதிரி குஸ்தியோ, உங்களின் கட்சி போன்று திட்டமிட்டு ............செய்வதோ தெரியாது. மேலும் எனது கருத்துக்கும் பி.ஜே.பிக்கும் என்ன சம்பந்தம். நீங்கள் நோட்டாவிற்கு கீழ் உள்ள கட்சியை நினைத்து என்ன பயம்.

 • நக்கல் -

  இந்த மாதிரி பசங்க பள்ளிக்கு வருவதே சினிமாவுக்கு டிக்கெட் கிடைக்காத போதுதான்... இன்னிக்கு வரும் படங்களை பார்த்து வளரும் பசங்க இப்படி இருப்பதில் ஆச்சர்யமில்லை..

 • r.sundaram - tirunelveli,இந்தியா

  ஏன் நேரடியாக போலீசுக்கு போகவில்லை, இதற்க்கு ஏன் அமைச்சரிடம் போக வேண்டும்? பையனுக்கு பெற்றோர்கள் இல்லையா? அவர்கள் என்ன செய்கிறார்கள்? இதெல்லாம் வளர்ப்பால் வந்த வினை. பையனை அடித்து திருத்தி வளர்த்திருந்தால் இந்த மாதிரி வளர்ந்திருக்க மாட்டான்.

 • sahayadhas - chennai,இந்தியா

  சமீபத்தில் வரும் சினிமாவும் aunti , ஆசிரியை மற்றும் குடும்ப பெண்கள் மேல் பசங்களுக்கு காதல் ஏற்படுவது போல் தான் உள்ளது .அதன் விளைவுதான். இந்த ஆசிரியை போன்று கவனமாக நடந்து கொள்வது எல்லாருக்கும் நல்லது ஆசிரியைக்கு வாழ்த்துகள்

 • Devanatha Jagannathan - puducherry,இந்தியா

  பெரிய இடத்து பையன் போலிருக்கு. பாவம் அந்த டீச்சர்.

 • ஆப்பு -

  பாத்துங்க...அந்த மாணவன் ஆசிரியை மேல ஆசி, கீசிட் ஊத்திறப் போறான். அந்த டீச்சருக்கு இடமாற்றம் செஞ்சு குடுங்க...தமிழ்நாட்டில் மெண்டல் பசங்க அதிகம். படிக்குறதைத் தவுத்து வேற எல்லாம் செய்வாங்க...புடிச்சு ஜெயில்ல போட்டா திருமான்களும், சீமான்களும் சமூகநீதி பேச வருவாங்க.

 • Being Justice - chennai ,இந்தியா

  உங்கள் வீட்டு பெண்ணுக்கு ஏலெட்டு வயது குறைந்த மாப்பிள்ளையை பாருங்கள். எங்கோ ஒரு தவறு நடைபெற்றால் அதை சாக்காக வைத்து எல்லோரையும் அதுபோலவே எண்ணுவது மிக மிக தவறு. பக்குவமாக நடந்து கொண்ட ஆசிரியர்களுக்கும், கல்வி துறையினருக்கும் வாழ்த்துக்கள். வாழ்க்கையில் சாதித்துக்காட்டு என்று அவனது எண்ண ஓட்டங்களை திருப்பி விட்டிருக்கலாம்.

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  இந்த மாணவர் தமிழ் மைந்தன் மூலமாக மகாராஷ்டிரா பீஜேபீ MLA வை தொடர்பு கொண்டால் தமிழ்மைந்தன் அந்த டீச்சரை தூக்கிட்டு வந்து கல்யாணம் பண்ணி வெச்சு டுவார். திமுக இளைஞர் அணியாம்..ஆளைப்பாரு

 • ருத்ரா -

  ஒருதலை காதலும் கட்டாயப் படுத்தும் காதலும் நிச்சயமாக டார்ச்சர் தான்.

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவனை, அவனை விட பல வயது கூடிய ஆசிரியை இழுத்துக் கொண்டு ஓடும் பொழுது இதில் ஒன்றும் தவறு இருப்பதாக தெரியவில்லையே. அதுபோல் ஜன்னல், கதவு வைத்த ஜாக்கெட்டுகள் அணிவதை ஆசிரியைகள் நிறுத்திக் கொண்டால் மாணவர்களின் புத்தி சபலம் அடைவதை தவிர்க்கலாம்.

 • புதிய தமிழ்மைந்தன் - Dindigul India,இந்தியா

  வேலூர் மாவட்டத்தில் தி.மு.க மாணவர் அணி தலைவர் ரெடி

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement