Advertisement

இதுவும் ரஜினி ஸ்டைல் தான்!

உளவியல் ரீதியிலான, ரஜினியின் புதிய அணுகு முறைக்கு, அவரது ரசிகர்கள் மட்டுமின்றி, பொது மக்கள் மத்தியிலும் வரவேற்பு கிடைத்து உள்ளது.ஒருவருக்கு ஆறுதல் தெரிவிப்பதற்கோ அல்லது வாழ்த்து தெரிவிப்பதற்கோ, சம்பந்தப்பட்ட நபரை தேடிச் சென்று சந்திப்பது வழக்கம். ஆனால், பாதிக்கப்பட்டவர்களை அல்லது பாராட்ட வேண்டியவர்களை, தன் வீட்டிற்கு அழைத்து சந்திப்பதை, நடிகர் ரஜினி வழக்கமாக்கி உள்ளார்.அந்த வகையில், சாலையில் கிடந்த, 50 ஆயிரம் ரூபாய் பணத்தை, போலீசாரிடம் ஒப்படைத்த, ஈரோட்டைச் சேர்ந்த யாசின் என்ற சிறுவனை, தன் வீட்டிற்கு அழைத்த ரஜினி, தங்க சங்கிலி பரிசளித்து வாழ்த்தி அனுப்பினார்.
சென்னை அருகே குன்றத்துாரில், மனைவியின் கள்ளக்காதல் விவகாரத்தால், இரண்டு குழந்தைகளை பறிகொடுத்த, விஜய் என்பவரையும், வீட்டிற்கு அழைத்து, ரஜினி ஆறுதல் கூறினார். தன் மக்கள் மன்றத்தில்,இளைஞரணி பொறுப்பையும், அவருக்கு வழங்கினார்.காலா பாடல் வெளியீட்டு விழாவிற்கு வந்தபோது, விபத்தில் கால்களை இழந்த ரசிகர், காசி விஸ்வநாதனை அழைத்து, ஆறுதல் கூறினார். செயற்கை கால்கள் பொருத்தப்பட்ட அவரை, உற்சாகப்படுத்தி அனுப்பினார்.நாகர்கோவிலில், மூளைச்சாவு அடைந்த, சிறுவனின் பெற்றோரை அழைத்து, ஆறுதல் கூறினார். கோத்தகிரி அடுத்த, ஓடந்துரை ஊராட்சியை, சிறப்பாக மாற்றியதற்காக, முன்னாள் ஊராட்சி தலைவரை அழைத்தும் வாழ்த்தினார்.இதுபோன்று, பாதிக்கப்பட்டவர்கள் அல்லது சாதனை புரிந்தவர்களை, ரஜினி நேரில் அழைத்து பேசுவது, உளவியல் ரீதியான நடவடிக்கை என்கின்றனர், மனநல மருத்துவர்கள்.

இது குறித்து, திருச்சியைச் சேர்ந்த மனநல மருத்துவர் ஒருவர் கூறியதாவது:நடிகர் ரஜினி, ஆன்மிகத்தில் நம்பிக்கை உடையவர். அவரின் அறை முழுவதும், ஆன்மிக பெரியவர்களின் படம் நிரம்பி இருக்கிறது. அந்த அறைக்கு
சென்றால், நிச்சயம், மனரீதியாக அமைதியும், புத்துணர்ச்சியும் கிடைக்கும்.ஏதாவது பிரச்னையால் பாதிக்கப்பட்டவர், மன உளைச்சலில் இருப்பார். தன் வீட்டில் இருந்து வெளியேறினால், அவர்களுக்கு மன நிம்மதி கிடைக்கும். இவையெல்லாம் மனதில் வைத்தே, ஆன்மிகத்தில் அதிகம் நாட்டம் உடைய ரஜினி, அவர்களை வீட்டிற்கு அழைத்து பேசுவதை வழக்கமாக்கி இருக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.ரஜினியின், இந்த உளவியல் ரீதியான நடவடிக்கை, ரசிகர்கள் மட்டுமின்றி, பொது மக்கள் மத்தியிலும், பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.- நமது நிருபர் -

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (35)

 • இந்தியன்... விவசாயி மகன் - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  ரஜினி நல்ல மனிதர்

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  தன மனதுக்கு சரி என்று பட்டதை சரியாக செய்ய கூடியவர் , அரசியல் ஆதாயம் தேடுபவர்கள் நேரிடையாக செல்வர் ,

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  ரஜினி நல்லவர் , இறைவன் அருள் அவருக்கு நிச்சயம் உண்டு , தமிழக மக்கள் பேர் ஆதரவினால் நிச்சயம் நல்லாட்சி கிடைக்கும்.

 • San - Madurai ,இந்தியா

  Great man

 • Bhaskaran - Chennai,இந்தியா

  இவருக்கு நேருக்கு நேர் மோதும் விஜயகாந்த் ஆயிரம் மடங்கு பெட்டெர்

 • RAJESH - Pondicherry ,இந்தியா

  Rajini mattume, Thamizhnattin kadaisi Nambikkai... Ithai accept pannalum, pannavittalum, ithu than Unmai.. Unmai... Unmai.. Dinamalar 96 il kodutha athe aatharavai meum kodukavum oru yuga puratchi ku... Thamizhnattin LEE KWAN YU Rajini avargal Vazhga.....

 • புதிய தமிழ்மைந்தன் - Dindigul India,இந்தியா

  அவரின் குடும்பத்தை பற்றி தி.மு.க அனுதாபி ஒருவர் செய்தது நாகரீகம் இல்லை. அப்போ கருணாநிதி மூன்றாவது, நான்காவது மனைவிகளின் வாரிசுகளுக்கு ஏன் கட்சி பதவியை மறுக்கப்பட்டது என சொல்வாரா?

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  ஆக மொத்தம் வேண்டப்பட்டவன் என்றால் என்ன செய்தாலும் அதை ஆகா ஓகோ என்னே அவர்தம் அறிவு என்று புகழ்வதே நமது கொள்கையா??????

 • நக்கல் -

  ரஜினி தனக்கென்று ஒரு நேர்மையான கொள்கை வகுத்துக் கொண்டு தைரியமாக சென்றால் வெற்றி பெறலாம்.. அடுத்தவர் பேசுவதர்கெல்லம் தன்னை மாற்றிக் கொண்டால் வளருவது கஷ்டம்.. உங்களுக்கு கிடைத்திருக்கும் இரண்டாவது வாய்ப்பை நழுவவிடாதீர்கள்...

 • R Sanjay - Chennai,இந்தியா

  இவ்வளவு பண்புகள் இருக்கும் ரஜினி தூத்துக்குடி விஷயத்தில் பத்தரிக்கையாளர்களிடம் கோபப்பட்டது இன்னும் இவர் ஆன்மீகத்தில் முதிர்ச்சி அடையவில்லை என்றே காட்டுகிறது. மாறாக இவர் கலைஞர் மற்றும் ஜெ இருந்த சமயத்தில் இவர்களை எதிர்த்து மக்களுக்காக அரசியல் செய்யவில்லை. மக்களுக்கு சேவை என வரும்போது எதிரி யார் என்பது முக்கியமல்ல மக்களுக்கு நாம் என்ன செய்கிறோம் என்பதை தான் பார்க்கவேண்டும். அந்த விஷயத்தில் ரஜினியை விட உளறல் வாய் கோமாளி விஜயகாந்த மேல்.

 • dinesh - pune,இந்தியா

  Ethaiyum vithyaasamaaga athe neram aluthamaaga seivatharku andrilirunthu indru varai rajiniyai adithukolla aale illai. Vaalthukkal.

 • VENKAT - Salai,இந்தியா

  பார்க்க போனால் " யார் நீங்கன்னு கேப்பாங்க, நம்ம வீடுன்னா யாரு கேக்க மாட்டாங்க ....... ................... ..........

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  தெய்வத்தை பார்க்க பக்தர்கள் போகவேண்டும் என்று சொல்லாமல் சொல்லுகிறீர்கள்..

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  கோடி கோடியாக பணம் வைத்திருந்தும் இன்னும் சுய லாபத்தை மட்டுமே நோக்கி பயணிப்பவர் ரஜினி... ஒரு சிலருக்கு அனுகூலங்கள் இருக்கலாம் தமிழகத்துக்கு ரஜினியால் பயன் இல்லை...

 • Amirthalingam Sinniah - toronto,கனடா

  இவருடைய மனைவியும் இருகரம் கூப்பி வரவேற்கிறாரோ தெரியவில்லை.

 • saravanan - Bangalore,இந்தியா

  பொது மக்கள் மத்தியில் வரவேற்பை வரவழைப்பதற்கு தினமலர் இவ்வளவு மெனக்கடுவது ஏனோ ஒன்னுமே இல்லாத வெறும் சட்டியை ஏன்யா சுரண்டிகிட்டிருக்கிங்க?

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  உலகத்திலேயே பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறாமல், தன் வீட்டிற்கு அழைத்து ஆறுதல் கூறும் ஒரே புத்திசாலி ஒத்தையில் நிற்கும் நமது தலைவர்தான்.

 • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

  "ரஜினி, ஆன்மிகத்தில் நம்பிக்கை உடையவர். அவரின் அறை முழுவதும், ஆன்மிக பெரியவர்களின் படம் நிரம்பி இருக்கிறது." கால படம் பாத்தவங்க இதை சொல்லமாட்டார்கள். இவர் மாறிவிட்டார். மக்களை ஏமாற்ற புறப்பட்டுவிட்டார்.

 • meenakshisundaram - bangalore,இந்தியா

  இது ரஜினியின் 'கட்டிப்புடி' வைத்தியம்.

 • BoochiMarunthu - Paradise papers,பனாமா

  அப்போ பொன்னும் மருமகனையும் அந்த ரூமில் உட்காரவைத்து சாந்தப்படுத்தி இருக்கலாமே ? ஏன் பிரிந்தார்கள் ?

 • அன்பு - தஞ்சை,இந்தியா

  ஒருத்தரை தனது வீட்டிற்கு அழைத்து விசாரிப்பதால், ரஜினியின் மதிப்பு உயரபோவதில்லை. தமிழகத்தில் ஊழல் நடக்கிறது. முக்கொம்பு அணை, அளவுக்கு அதிகமான மணலை அள்ளியதால் உடைந்து போனது. குட்கா ஊழல் தமிழகமே சந்தி சிரிக்கிறது. இதையெல்லாம் வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கிறார். முதல்வர் ஆக மட்டும் ஆசை. ஆனால் அதற்கான முயற்சி எதுவுமே எடுக்காமல், முதல்வர் ஆக முடியாது.

 • வெகுளி - Maatuthaavani,இந்தியா

  ரஜினிக்கு நல்ல மனசு.....

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement