Advertisement

'தமிழகத்தில் அதிக இடங்களில் வெற்றி' : பா.ஜ., செயற்குழுவில் அமித் ஷா பேச்சு

''கர்நாடகா, தமிழகத்தில், அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும்,'' என, கட்சியினருக்கு, பா.ஜ., தேசியத் தலைவர் அமித் ஷா கூறியுள்ளார்.


மத்தியில் ஆளும், பா.ஜ.,வின் இரண்டு நாள் தேசிய செயற்குழுக் கூட்டம், டில்லியில் நேற்று துவங்கியது. பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், பா.ஜ., ஆளும் மாநில முதல்வர்கள், கட்சியின் மாநிலத் தலைவர்கள், மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அமித் ஷா பேசியது குறித்து, மத்திய ராணுவ அமைச்சரும், கட்சியின் மூத்த தலைவருமான நிர்மலா சீதாராமன், நிருபர்களிடம்விளக்கினார்.

கூட்டத்தில் அமித் ஷா பேசியதாவது:இந்தாண்டு இறுதியில், பல்வேறு மாநிலங்களில் சட்டசபை தேர்தல் மற்றும் அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடக்கஉள்ளது. தற்போது, 19 மாநிலங்களில், பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது.லோக்சபா தேர்தலில், இந்த மாநிலங்களில் அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும். எந்தெந்த மாநிலங்களில், இரண்டாவது இடத்தில் கட்சி உள்ளதோ, அங்கு, ஆளுங்கட்சிகளுக்கு எதிரான மக்களின் மனநிலையைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கர்நாடகா, தமிழகத்தில், அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும்.கடந்த, 2014ல் நடந்த லோக்சபா தேர்தலை விட, அதிக இடங்களில், வரும் தேர்தலில் வெற்றி பெற வேண்டும்.

'யாராலும் வெல்ல முடியாத பா.ஜ.,என்ற கோஷத்துடன் களமிறங்குவோம்.கடந்த நான்கரை ஆண்டுகளில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு செயல்படுத்தியுள்ள மக்கள் நலத் திட்டங்கள் குறித்தும், அரசின் சிறந்த நிர்வாகம் குறித்தும்மக்களிடையே பிரசாரம் செய்ய வேண்டும்.இந்தியாவை ஒருமைப்படுத்தும் பணியில், பா.ஜ., ஈடுபட்டுள்ளது. அதே நேரத்தில், இந்தியாவை பிளவுபடுத்தும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது.காங்கிரஸ் கட்சியின் பொய் பிரசாரங்களுக்கு, தகுந்த புள்ளி விபரங்கள், ஆதாரங்களுடன் சரியான பதிலை அளிக்க வேண்டும்.கடந்த, நான்கு ஆண்டுகளில், பா.ஜ.,விடம் தோல்வி அடைந்த கட்சிகள் இணைந்து, மிகப் பெரிய கூட்டணியை அமைப்பதாகக் கூறியுள்ளன. இது ஒரு கண்துடைப்பு நாடகமே. இந்த நாடகத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வர வேண்டும்.இவ்வாறு அமித் ஷா பேசினார்.- நமது சிறப்பு நிருபர் -

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (52)

 • தலைவா - chennai,இந்தியா

  இந்தியாவை சிறுமைப்படுத்தும் பணியில், பா.ஜ., ஈடுபட்டுள்ளது. அதே நேரத்தில், இந்தியாவை பிளவுபடுத்தும் முயற்சியில் அதிதீவிரமாக ஈடுபட்டுள்ளது.தற்போது, 19 மாநிலங்களில், பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது.லோக்சபா தேர்தலில், இந்த மாநிலங்களில் ஆளுங்கட்சிகளுக்கு எதிரான மக்களின் மனநிலையைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 'யாராலும் வெல்ல முடியாத பா.ஜ., என்கிற கோஷம் இப்போதைக்கு இது ஒரு கண்துடைப்பு நாடகமே. இந்த ஓரங்க நாடகத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வர வேண்டும்.இவ்வாறு அமித் ஷா பேசினார்

 • இட்லி நேசன் - Dublin,அயர்லாந்து

  நீங்க தமிழ்நாட்டில ஜெயிப்பீங்களோ தோற்பீங்களோ எங்களுக்குத் தெரியாது. ஆனால் தேர்தல் நேரத்துல கருப்பு பலூன் வியாபாரிகள் மற்றும் youtube சேனல்களின் தொழில் பிச்சிக்கும்.

 • Samir - Trichy,இந்தியா

  tampered EVM இருக்குற வரைக்கும் நீங்க அமெரிக்காவுல கூட ஜெயிக்கலாம். ஜமாய்ங்க

 • Ramachandran Madambakkam - Chennai,இந்தியா

  முதலில் ராஜஸ்தான், சட்டிஸ்கர் மற்றும் மத்திய பிரதேசத்தில் வெல்வதற்க்கான வழியை பாருங்கள். பெட்ரோல் டீசல் விலை இது போல அதிகரித்து போனால் எல்லாம் கோவிந்தா.

 • Vijay D Ratnam - Chennai,இந்தியா

  2014 ல் ஜெயலலிதா என்ற சிங்கம் சிங்கிளா வந்து கூட்டமா வந்தவர்களை வெரட்டி அடித்த மாதிரி பாஜக தனித்து போட்டியிட்டு நாற்பது இடங்களில் வெல்லலாமே.

 • Nathan - Bengaluru,இந்தியா

  இவனுங்க ஏதோ பொடி வச்சி பேசுறானுங்கன்னு நினைக்கிறேன்.... தமிழக எதிர் கட்சிகள் உஷார்....

 • R Sanjay - Chennai,இந்தியா

  தமிழகத்தில் அனைத்திலும் ஸிரோ தான் உங்களுக்கு

 • Pearl - Madurai,இந்தியா

  தொலைக்காட்சியை இவனுங்க பார்க்கிறதே இல்லை போல எப்ப பாரு கேவலப்படுறதே வேலைய போச்சு. தனி மனிதனுக்கு கோவம் வரும் அளவுக்கு இவனுங்க கேவலமான ஆட்சி நடக்குது. ஊருக்குள்ள என்ன நடக்குதுன்னு தெரியாமலே பேசுறானுங்க. நீங்க ஆட்சிக்கு வந்ததுக்கு அப்பறம்தாண்ட தனிமனிதன் பாதிக்கப்பட்டான்.

 • ஆப்பு -

  இப்பத்தானே வாங்குனீங்க...கர்னாடகாவுல அடி....காயம் ஆறிடுச்சா?

 • Ramakrishnan Natesan - BANGALORE ,இந்தியா

  ஆசை இருக்கு பகோடா சாப்பிட வாய் இருக்கு ஊறவெச்ச அவலை மெல்ல என்னத்த சொல்லறது போங்க

 • முடியட்டும் விடியட்டும் - TAMIL NADU,இந்தியா

  மிக எளிது 234 தொகுதியிலும் நியமன உறுப்பினர்கள் தான் என்றால் கதை முடிந்தது, முதலில் இத்துனை தொகுதியில் நிற்க ஆட்களை தேடுங்கள் பிறகு நோட்டாவுடன் உடன்படிக்கை செய்து கொள்ளுங்கள் இப்படி செய்தால் ஹ்ம்ம் அப்போ கூட டெபாசிட் தேறுவது கஷ்டம் தான் என் எனில் ஒரு சாரணர் இயக்கம் வெறும் 69 வோட்டு அதுவும் வாய்சவடால் ராஜாவுக்கு இதில் சட்டசபைக்கு சிரிப்பு தான் வருது அதுவும் நீங்கள் மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு ஏற்பட்ட அவலங்கள் கொஞ்சமா பெட்ரோல் தினம் ஏற்றம் ரூவா மதிப்பு தினம் குறைதல் இப்படி கொஞ்சமா நஞ்சமா நீங்கள் செய்த நல்ல திட்டங்கள் வாயில் சுட்ட வடை ஊசிபோய் ரொம்ப நாளாகுது மஸ்தான் மீண்டும் உங்களை வரவைத்து நாங்கள் மாண்டு போக தயாரில்லை வந்தே மாதரம்

 • Nagarajan S - Chennai,இந்தியா

  நாளும் தொடரும் பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வால், அனைத்து அத்யாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துகொண்டே போகிறது. அதனால் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் ஜனத்தொகை கூடிக்கொண்டே போகிறது. இதெல்லாம் பிஜேபிக்கு இறங்கு முகம். இதனால், தமிழகம் மட்டுமின்றி அனைத்து மாநிலங்களிலும் அதிக தொகுதிகள் பெற்று வெற்றிபெறுவது மிகவும் கஷ்டம்.

 • Kadaparai Mani - chennai,இந்தியா

  பாகிஸ்தானில் கூட பாஜக வெற்றி பெரும். ஆனால் தமிழகத்தில் என்றும் கால் பாதிக்க முடியாது. இது மற்ற தேசிய கட்சிகளுக்கும் பொருந்தும்

 • murugu - paris,பிரான்ஸ்

  நியூயார்க்: இந்தியர்கள் அமெரிக்காவிற்கும் சாதியை கொண்டு வந்துவிட்டனர் என்று அமெரிக்க பத்திரிக்கை ஒன்று வருத்தம் தெரிவித்துள்ளது. உலகிலேயே இந்தியாவில்தான் சாதிய ரீதியான அடக்குமுறைகள் அதிகம் இருக்கிறது. இஸ்லாம், கிறிஸ்துவம் ஆகிய மதங்களுக்குள் பாகுபாடு இருந்தாலும், இந்தியாவில் இந்துக்கள்தான் அதிக அளவில் ஜாதியால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் இந்த சாதியை ஆதரிக்கும் இந்துக்கள், அமெரிக்கவிற்கும் அதை ஏற்றுமதி செய்து இருப்பதாக அமெரிக்காவில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எழுத்தாளர்கள் தேன்மொழி சௌந்தர்ராஜன் மற்றும் மாரி சிவிக் -மைத்ரேயி ஆகியோர் செய்த கணக்கெடுப்பின் படி இந்த குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. விரைவில் இதற்காக வழக்கு தொடுக்கவும் வாய்ப்புள்ளது.

 • Viswanathan - karaikudi,இந்தியா

  கண்ணாலே நீ கண்ட கனவு, உனக்கு காத்திருக்கு பெரிய ஆப்பு

 • krishnan - Chennai,இந்தியா

  BJP கட்சியை மக்கள் விலக்கிவைப்பது நல்லது. இல்லை என்றால் படாதபாடு படவேண்டும்.

 • KV Pillai - Chennai,இந்தியா

  ஜோக்ஸ் பகுதியில் வெளியிட வேண்டிய செய்தியை அரசியல் செய்தியாக வெளியிட்டு விட்டார்கள்.

 • ஸ்ரீநிவாஸ் வெங்கட் - keeranur,இந்தியா

  தமிழகத்தில் வெற்றி பெருவது எளிது தான் ஏற்கனவே ஒரு இடம் தற்போது மேலும் ஒரு இடம் வெற்றி பெற்றால் போதும் 100 சதவீதம் கூடுதல் வெற்றி என்று தோள் தட்டிக் கொள்ளலாம்.

 • tamil - coonoor,இந்தியா

  அதிக இடங்களில் வெல்லும் வாய்ப்பு இருக்கிறது ஆனால் தமிழகத்தில் இல்லை, இரண்டு மாவட்டங்களில் மட்டுமே அவர்களுக்கு செல்வாக்கு உள்ளது அதுவும் வெற்றியை தேடி தரும் அளவுக்கு இல்லை,

 • பாமரன் - நம்மூர்தான்,இந்தியா

  இன்னிக்கு லீவ் நாளுங்கறதால சிந்தனையை கெளப்பிவிட்டு மோட்டுவளையை பார்த்து யோசிச்சி கனவு கண்டு அதை மற்ற பகோடாஸ் கூட பகிர்ந்து கொள்ள ஒரு பிளாட்பாரம் இந்த நியூஸ். மத்தவங்க யாரும் சீரியசா எடுத்துக்க வானாம்....

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு செயல்படுத்தியுள்ள மக்கள் நலத் திட்டங்கள் என்ன என்ன என்று புரியும் படியாக சொல்லுங்களேன்,.,,

 • ஜெயந்தன் - Chennai,இந்தியா

  அப்பப்ப... படத்தில் காமெடி ஸீன் வேண்டாமா .. அதுதான் இது..

 • Power Punch - nagarkoil,இந்தியா

  முதலில் தமிழக தெருக்களில் வந்து ஒட்டு கேட்க முடியுமா என்று பாருங்கள்..

 • மணிமாறன் - trichy,இந்தியா

  " தமிழகத்தில் அதிக இடங்களில் நோட்டாவை வெற்றி பெற வேண்டும்" இதுதான் மைண்ட வாய்ஸ்.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  சாக போறவன் பொழச்சிக்குவேன் என்கிற மாதிரி உள்ளது...

 • P.Srinivasan - kumbakonam,இந்தியா

  அஞ்சல் துறையில் ஊழலை கண்டுபிடித்து புகார் அனுப்பியிருந்ததால் என்னை சஸ்பெண்ட் செய்து இருக்கிறார்கள் .

 • CBE CTZN - Chennai,இந்தியா

  பிஜேபி நோட்டாவை முந்தவேண்டும்... இதுவே தமிழக பிஜேபி கொள்கையாக இருக்கட்டும்.. பிறகு வெற்றி பெறுவதை பற்றி யோசிக்கலாம்... இதுவரை உங்கள் mla மற்றும் MP கள் தத்தம் தொகுதிகளில் எவ்வளவு மேம்பாட்டு வசதிகளை செய்திருக்கிறார்கள் சொல்லுங்கள் பார்ப்போம்...

 • R.PERUMALRAJA - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்

  திரிச்சி தொகுதியில் மோடியும் , கோவை அல்லது மைசூரில் அமித்ஷாவும் இரண்டாவது தொகுதியாக போட்டியிடுவது கடந்த முறையை காட்டிலும் தென் மாநிலங்களில் கூடுதலாக 18 முதல் 27 தொகுதிகள் வரை பெற வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொடுக்கும்

 • Christopher -

  கோபம் வர மாதிரி காமெடி பண்ணாதே

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை நம்பினோர் கைவிடப்படார்.

 • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

  பாஜகவுக்கும் சரி, தமிழ் நாட்டிற்கும் சரி. திரு H. ராஜாவைப்போல ஒரு aggressive ஆன தலைவர் வேண்டும். அப்போதுதான் வெற்றி பெறும்

 • அன்பு - தஞ்சை,இந்தியா

  முதலில் தமிழிசையை தூக்கி கடாசுங்கள். இன்னும் கொஞ்ச நாள் பிஜேபி தமிழக தலைவராக பணியாற்றினால், கட்சி சுத்தமாக அழிந்துவிடும். ரெண்டு சதவீத ஓட்டில் இருந்து, தற்போது அரை சதவீதமாக குறைந்துள்ளது. பிஜேபி யின் வெளியில் இருந்து பொதுவான நல்ல மனிதரை அழைத்து தலைவர் ஆக்குங்கள். அமித் ஷா, மோடியை நேரடியாக சந்திக்கும் உரிமையை அவரிடம் கொடுங்கள். மாநில தலைவர் செல்வாக்கு இல்லாமல் இருந்தால், கட்சி வளராது.

 • கும்புடுறேன் சாமி - பன்னிமடை கோவை,இந்தியா

  போட்டோல திரு அத்வானி பக்கத்துல நின்னு குத்து விளக்கு ஏத்துறவர்தான நாகராஜசோழன் எம் ஏ ?

 • Jesudass Sathiyan - Doha,கத்தார்

  கொய்யால நோட்டாவை முந்துங்கடா மொத...அப்புறம் அதிக இடங்களை பிடிப்பதை பார்க்கலாம்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement